சிவில் சர்வீஸ் தேர்வில் 76வது இடம் பிடித்து அசத்திய கூலித் தொழிலாளி மகன்!
ஒடிசாவில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் 76வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஒடிசாவில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் 76வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விடாமுயற்சியும் உறுதியும் எல்லா முரண்பாடுகளையும் வெல்ல உதவும் என்பதை கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் உலகத்திற்கு மீண்டும் உணர்த்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பர்ஜாங் தொகுதியில் உள்ள கட்டனாஹலா கிராமத்தைச் சேர்ந்தவர் மூனா சேத்தி, 27 வயதான இவர் ஒடிசா சிவில் சர்வீஸ் தேர்வில் (OCS) தேர்வில் 76வது ரேங்க் பெற்றுள்ளார். இதற்காக எவ்வித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல், தனது சொந்த முயற்சியிலேயே 4வது முறை தேர்வில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
மூனா சேத்தியின் தந்தை ரவீந்திர சேத்தி தினக்கூலி தொழிலாளாரர் ஆவார். இவரது ஒருவரது சொற்ப வருமானத்தை வைத்து தான் குடும்பம் ஓடுகிறது. இந்நிலையில், மகனின் இந்த வெற்றி குடும்பத்தினரை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்தில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படித்த மூனா, நவோதாயா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
பின்னர், ராவன்ஷா கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த மூனா, முதுகலை பட்டப்படிப்புக்காக உட்கல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக முனாவால் முதுகலைப் படிப்பைத் தொடர முடியவில்லை.
பின்னர், தனது கிராமத்திற்கு திரும்பிய மூனா அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பித்ததோடு, ஒடிசா சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாரானார்.
“எனது வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேர்வுக்கு தயார் செய்தேன். நான் மூன்று முறை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை. அதுதான் இப்போது வெற்றியாக மாறியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
மூனா ஓஏஎஸ் அதிகாரியாக நியமிகப்பட்ட பிறகு, ஏழைகளுக்காக பாடுபடுவேன் என்றும், வறுமை ஒழிப்புத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த பாடுபடுவதோடு, கல்வி மேம்பாட்டிற்காகவும் தீவிரமாக உழைப்பேன் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி
பஞ்சர் கடை நடத்தியவர் இன்று ஐஏஎஸ்: விடாமுயற்சிக்கு முன்னுதாரணமான வருண் பரண்வால்!