Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஒட்டகம், ஆடு, கழுதை பால் வகைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு!

பசும்பால், எருமைப்பாலை விட, ஒட்டகம், கழுதை மற்றும் ஆட்டுப்பாலில் எத்தனை நற்குணங்களும், சத்துக்களும் உள்ளது தெரியுமா?

ஒட்டகம், ஆடு, கழுதை பால் வகைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு!

Thursday January 09, 2020 , 3 min Read

நமது குழந்தைப் பருவம் முதலே தினமும் இரண்டு டம்ளர் பால் குடிக்கவேண்டும் என்பதைத் தொடர்ந்து அனைவரும் வலியுறுத்துவதைப் பார்த்திருப்போம். தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பார்த்திருப்போம். நம் பெற்றோர்களும் பிரபலங்களும் இதைப் பரிந்துரைப்பார்கள்.


பால் நமது எலும்பையும் சிந்திக்கும் திறனையும் வலுப்படுத்தும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் முழுமையான உணவாகவே கருதப்படுகிறது.

1
பொதுவாக பசும்பாலும் எருமைப்பாலும் மட்டுமே அனைவராலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஆடு, ஒட்டகம், கழுதை போன்ற மற்ற விலங்குகளின் பால் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்தது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டகப் பால் குடிப்பது என்பது சற்றே விநோதமாக தோன்றினாலும் இதிலுள்ள ஏராளமான நன்மைகள் குறித்து தெரிந்துகொண்டால் உங்கள் எண்ணம் நிச்சயம் மாறிவிடும்.

மற்ற விலங்குகளின் பாலில் உள்ள நன்மைகள்

ஒட்டகப் பாலில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இம்யூனோக்ளோபுலின் மற்றும் லாக்டோஃபெரின் உள்ளது. இதில் இரும்புச் சத்து, வைட்டமின் சி, கால்சியம், புரோட்டீன் ஆகியவை அதிகம் உள்ளது. மாட்டுப்பாலைக் காட்டிலும் இதில் மும்மடங்கு அதிக வைட்டமின் சி சத்தும் 10 மடங்கு அதிக இரும்புச் சத்தும் உள்ளது.


அதுமட்டுமின்றி மற்ற விலங்குகளில் இருந்து கிடைக்கு பாலுடன் ஒப்பிடுகையில் ஒட்டகப் பாலில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு.


இதிலுள்ள மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவு குறையவும் இதயநோய் வருவதற்கான ஆபத்து குறையவும் உதவுகிறது. இதில் புரோபயாடிக் இயற்கையாகவே இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பசும்பால் மற்றும் எருமைப்பாலுடன் ஒப்பிடுகையில் எலும்புகளையும் தசைகளையும் சிறப்பாக வலுப்படுத்துகிறது.

முக்கியமாக ஒட்டகப் பாலில் ஏ1 கேசீன் இல்லை. இதனால் லாக்டோஸ் இண்டாலரன்ஸ் என்கிற பால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள்கூட இந்தப் பாலை எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் மற்ற விலங்குகளின் பாலுடன் ஒப்பிடுகையில் ஆட்டுப்பாலில் கொழுப்பு மூலக்கூறுகள் மிகக்குறைவாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். இதில் உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான உயர்தர புரோட்டீன் அதிகம் உள்ளது. லாக்டோஸ் இண்டாலரன்ஸ் இருப்பது கண்டறியப்பட்டவர்களும் இந்தப் பாலை எடுத்துக் கொள்ளலாம்.


இதில் பசும்பாலைக் காட்டிலும் குறைவான லாக்டோஸ் உள்ளது. ஆட்டுப்பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. இந்தப் பாலை மூன்று முறை எடுத்துக்கொண்டால் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தின் அளவில் நூறு சதவீதத்திற்கும் கூடுதலாக கிடைக்கும். இதில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குத் தேவையான பொட்டாஷியம், பாஸ்பரஸ் மற்றும் அயோடின் உள்ளது.

இறுதியாக கழுதைப் பால் ஆண்டி ஆக்சிடண்ட் மற்றும் ஆண்டி ஏஜிங் தன்மை கொண்டது. காஸ்மெடிக் மற்றும் மருந்து நிறுவனங்கள் ஃபேஸ் க்ரீம் தயாரிக்க ஏற்கெனவே இதைப் பயன்படுத்தி வருகின்றன. இதில் கெட்டியாகக்கூடிய கேசீன் இல்லை. கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் எளிதில் ஜீரணமாகும். கால்சியம், மெக்னீஷியம், சோடியம், இரும்பு போன்ற மினரல்களும் இம்யூனோகுளோபினும் அதிகம் உள்ளது. பசும்பால் ஒவ்வாமை இருப்பவர்கள்கூட இதை அருந்தலாம்.

மற்ற விலங்குகளின் பால் ஊக்குவிக்கப்படுகிறது

இந்தப் பால் வகைகளில் உள்ள பல்வேறு நன்மைகளைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், தயாரிப்பாளர்கள், அரசாங்கம் போன்றோர் இத்தகைய பால் வகைகளை வணிக ரீதியாக விற்பனை செய்வதை ஊக்குவித்து வருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.


பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் சமீபத்தில் கழுதைப் பாலை மக்களிடையே ஊக்குவிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிக நன்மைகள் கொண்டிருப்பதே இந்தப் பாலை ஊக்குவிப்பதன் நோக்கம் என்றாலும் நாட்டில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


பாலைவனப் பகுதிகளில் உள்ள ஒட்டக உரிமையாளர்கள் ஒட்டகங்களை முறையாகப் பாதுகாத்து இனப்பெருக்கம் செய்ய வைத்து வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கச் செய்வதே ஒட்டகப் பாலை வணிகமயமாக்குவதன் நோக்கம். இதற்காக நாடு முழுவதும் பல ஸ்டார்ட் அப்கள் நேரடியாக ஒட்டகம் மேய்ப்பவர்களிடம் இருந்து ஒட்டகப் பாலை வாங்கி, பதப்படுத்தி பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்கிறது.  


மற்ற விலங்குகளின் பாலை சேகரித்து விநியோகம் செய்யும் அணுகுமுறையானது இந்த விலங்குகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கிறது. அத்துடன் இந்த பால் வகைகளை கொள்முதல் செய்யும் ஸ்டார்ட் அப்கள் இந்த விலங்குகள் வளர்க்கப்படுவதை ஊக்குவிப்பதுடன் இந்தியாவில் பல்லுயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் ஊக்குவிக்கிறது.


ஆங்கில கட்டுரையாளர்: ஹித்தேஷ் ரதி | தமிழில்: ஸ்ரீவித்யா


(பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்கள் ஆகும். எந்த விதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)