பல்கலைக்கழகத் தேர்வில் முதல் ரேங்க் எடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர் மகள்!

By YS TEAM TAMIL|11th Sep 2020
2001-ம் ஆண்டு பீகாரில் இருந்து கேரளாவிற்கு மாற்றலான பாயல் குமாரி சிறப்பாகப் படித்து தனது பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பிரமோத்குமார் 2001-ம் ஆண்டு தனது குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு செல்ல பீகாரில் இருந்து கேரளாவிற்கு புலம்பெயர்ந்தார். அப்போதிருந்து இரவு பகலாக கடினமாக உழைத்து வருகிறார். கொச்சியில் பல இடங்களில் வேலை பார்த்துள்ளார்.


இவரது மகள் பாயல் குமாரி. இவர் கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் பெரும்பாவூர் மார்தோமா பெண்கள் கல்லூரியில் பிஏ தொல்பொருள் மற்றும் வரலாறு (மாட்யூல் 2) தேர்வில் முதல் ரேங்க் எடுத்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

1
“எங்களைப் படிக்கவைக்கவேண்டும் என்பதே என் அப்பாவின் கனவு. நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். என் அப்பா பெயிண்ட் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. என் பெற்றோர் கஷ்டப்பட்டு எங்களைப் படிக்கவைக்கின்றனர்,” என்று ‘தி நியூஸ் மினிட்’ இடம் பாயல் தெரிவித்துள்ளார்.

கொச்சி வந்தடைந்ததும் படிப்பைத் தொடர்வதில் ஆரம்பத்தில் பாயல் சிரமங்களை சந்தித்துள்ளார். தனது அப்பாவின் கஷ்டங்களைக் கண்டு படிப்பை விட்டுவிடவும் எண்ணியுள்ளார். ஆனால் அவரது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த ஊக்கத்தினால் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

”எட்டாம் வகுப்பு படிக்கும்போது மலையாளம் உள்ளிட்ட கடினமான பாடங்களுக்கு டியூஷன் சேர்ந்தேன். அப்போதிருந்து சிறப்பாக படித்து வருகிறேன்,” என்கிறார்.

பாயல்; பத்தாம் வகுப்பில் 83 சதவீதமும் 12-ம் வகுப்பில் 95 சதவீதமும் எடுத்துள்ளார். பத்தாம் வகுப்பு முதலே இவருக்கு தொல்பொருளில் ஆர்வம் இருந்துள்ளது.

“தொல்பொருள், அகழாய்வு, வரலாற்று தலங்கள் போன்றவற்றில் எனக்கு ஆர்வம் உண்டு. புத்தக வாசிப்பில் அதீத ஆர்வம் இல்லை என்றாலும் நான் படித்த ஒரு சில புத்தகங்கள் இந்தத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியது,” என்கிறார்.

அவர் வீட்டில் இந்தி பேசினாலும் மலையாள மொழியையும் ஓரளாவிற்கு நன்றாகவே கற்றுக்கொண்டுள்ளார். இவரது பெற்றோர் தங்களது சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் பற்றி பேசினாலும் கேரளாவே தற்போது இவரது சொந்த ஊராக மாறியுள்ளது.


படிப்பைத் தொடரவேண்டும் என்றும் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்றும் பாயல் விரும்புகிறார். வீட்டில் பணக்கஷ்டம் இருந்தாலும் பாயல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதவேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாக உள்ளது.


கட்டுரை: THINK CHANGE INDIA