பதிப்புகளில்

விவிசாயிகளின் கடன் தொகையை திருப்பி செலுத்திய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

29th Nov 2018
Add to
Shares
121
Comments
Share This
Add to
Shares
121
Comments
Share

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மகராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளின் கடன் தொகையைத் திருப்பி செலுத்திய பிறகு தற்போது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் கடனை செலுத்தியுள்ளார். இந்த நடிகர் தனது வலைப்பதிவில்,

”நன்றியுணர்ச்சி காரணமாகவே விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வரும் சுமைகளை முடிந்தவரை நீக்கவேண்டும் என்கிற விருப்பம் ஏற்பட்டது. முதலில் மகராஷ்டிராவைச் சேர்ந்த 350-க்கும் அதிகமான விவசாயிகளின் கடன் சுமையை ஏற்றுக்கொண்டேன். தற்போது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகள் செலுத்தவேண்டிய கடன் நிலுவைத் தொகையான 4.05 கோடி ரூபாயை செலுத்தியுள்ளேன். என்னுடைய விருப்பம் நிறைவேறியது மனதிற்கு அமைதியளிக்கிறது,”

என பதிவிட்டதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

image


நவம்பர் 26-ம் தேதி 70 விவசாயிகளை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த விவசாயிகள் வங்கியின் கடிதங்களைப் பெற உத்திரப்பிரதேசத்தில் இருந்து மும்பைக்குப் பயணம் செய்ததாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அமிதாப் பச்சன் ’பேங்க் ஆஃப் இண்டியா’-விடம் இந்தத் தொகையை மொத்தமாக திருப்பி செலுத்தியுள்ளதாக ’தி க்விண்ட்’ தெரிவிக்கிறது.

செய்தி நிறுவனம் ஒன்று அணுகியபோது அவரது செய்தித்தொடர்பாளர் இந்தத் தகவலை உறுதிசெய்தார்.

“ஆம். திரு.பச்சன் அவர்கள் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் கடனைத் திருப்பி செலுத்தியுள்ளார். இதற்கு முன்பு மகராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளின் கடன் தொகையை செலுத்தியுள்ளார். தற்போது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கடனை செலுத்தியுள்ளார். மும்பையில் நேரடியாக திரு. பச்சனை சந்தித்து வங்கி கடிதங்களைப் பெற்றுக்கொள்ள 70 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்,” என தெரிவித்தார்.

76 வயதான இவர் இந்த ஆண்டு துவக்கத்தில் சயாஜி ரத்னா விருதில் பங்கேற்றார். 350-க்கும் அதிகாமான விவசாயிகளுக்கு உதவியுள்ளார். அத்துடன் மகராஷ்டிராவைச் சேர்ந்த ராணுவத்தில் வீர மரணம் அடைந்த 44 தியாகிகளுக்கு நிதியுதவு அளித்தார். அமிதாப் தனது மனைவி ஜெயா பச்சனுடன் இணைந்து மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் விவசாயிகளுக்கும் தியாகிகளின் குடும்பங்களுக்கும் பணத்தை வழங்கினார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
121
Comments
Share This
Add to
Shares
121
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக