பதிப்புகளில்

கிளாஸ் பெயிண்டிங்கில் புதுமைகள் செய்யும் 'கிரியேட்டிவ் கிளாஸ் கார்த்திக்'

deepan
12th Apr 2016
Add to
Shares
76
Comments
Share This
Add to
Shares
76
Comments
Share

பார்த்துப் பார்த்துக் கட்டும் வீட்டை மேலும் அழகாக்குவது வீட்டுக்குள் நாம் அமைக்கும் உள் அலங்கார வேலைகள்தான். அலங்காரம் தேவைக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும் வீட்டையும் ரிச் வீடுபோல காட்ட வேண்டும் என்றால் பெயிண்டிங் கிளாஸ்கள்தான் ஞாபகத்துக்கு வரும். இதை நவீன முறையில், கிராப்ட் டிசைன் கிளாஸ்கள் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டூடியோ கார்த்திக்.

image


கண்ணாடி டிசைனிங் தொழில் ஆர்வம்

பாரம்பரியமாக குடும்பம் செய்துவந்த தொழிலை நவீனமாக மாற்றி, அதில் தனி முத்திரை பதித்தவர் இவர். படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னை சொளகார்பேட்டை. தாத்தா, அப்பா எல்லோரும் கண்ணாடி விற்பனை தொழில் செய்து வந்தனர். அவர்கள் காலத்தில் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நாளடைவில் தொழில் முன்பைப் போல வருமானம் கொடுக்கவில்லை. கண்ணாடி தொழிலிலும் புதிய முயற்சிகள் தேவையாக இருந்தது.

ஆரம்பத்தில் சிறு சிறு உதவிகள் செய்து கொண்டிருந்தேன். வீட்டினர் நான் இந்த வேலையில் ஈடுபட வேண்டாம் என்கிற எண்ணத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வைத்தனர். ஆனால் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே நமது குடும்ப தொழிலை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டுதான் இறங்கினேன்.

லண்டனில் கண்ணாடியில் கிராப்ட் வேலைகள் குறித்த பயிற்சி கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய அந்த கோர்ஸை விரைவாக ஒரு வருடத்திலேயே படித்து முடித்து தேர்வானேன். இந்த தொழில்நுட்பத்தை முறையாகக் கற்றுக் கொண்ட பிறகு சென்னையில் ஒரு இடத்தை பிடித்து தொழில்கூடத்தை தொடங்கினேன். குடும்பத்தினர் உதவியோடு வழக்கமான கண்ணாடி கடையாக இல்லாமல், நவீன வகையில் கொண்டு செல்லத் தொடங்கினேன். 

கிராப்ட் டிசைன் கண்ணாடியின் சிறப்புகள்

இவரது ஸ்டூடியோவில் உருவாகும் கண்ணாடிகள் பெயிண்டிங் கிளாஸ்களைவிட பலமடங்கு அழகான தோற்றத்தையும், ரிச் தன்மையையும் கொண்டிருக்கிறது. கதவு ஜன்னல்களில் வெறும் கண்ணாடிகளாக இல்லாமல் அழகழகான ரசனை சார்ந்த வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தங்களது சொந்த வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டுபவர்களுக்கு இந்த வகையிலான கண்ணாடிகள் மேலும் திருப்தியைக் கொடுக்கும் என்கிறார்.

மக்களின் ரசனையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்ப வழக்கமான கண்ணாடி பெயிண்டிங் கிளாஸ்களை விட நாங்கள் தயாரிக்கும் கிராப்ட் வொர்க் கிளாஸ்கள் அதிக வேலைகள் கொண்டது. மக்கள் பழைய மாதிரி பூ, செடி, கடவுள் படங்கள் தவிர நவீன ஓவியங்கள் மற்றும் நவீன பெயிண்டிங்குகளையும் விரும்புகின்றனர்.

கடவுள் உருவங்களையே நவீன வடிவங்களில் தேடுகின்றனர். நாங்கள் தயாரிக்கும் 3டி வகையில் கண்ணாடியில் தயாரிக்கும் நவீன கண்ணாடி பிள்ளையார் உருவங்கள் பூஜையறையை மிக அழகானதாகவும் மாற்றும். சமையல் அறை, வரவேற்பறை, பெட்ரூம் என எல்லா இடத்திலும் கண்ணாடிகளால் அலங்கரிக்க முடியும். ஜன்னல்களில் வழக்கமான ப்ளைன் கண்ணாடிகள் வைப்பதைவிட இந்த நவீன கிராப்ட் கிளாஸ்களை முயற்சித்தால் வீடு வித்தியாசமாகவும் தோற்றமளிக்கும் என்றார்.

சவால்கள்

முதல் இரண்டு ஆண்டுகள் தொழில் சற்று தடுமாற்றமாகத்தான் இருந்தது. கைகளால் வரைந்து அதை கண்ணாடியில் கிராப்ட் வேலையாக செய்து கொண்டிருந்தேன். இது சில நேரங்களில் முழு திருப்தி கொடுக்காது. வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக துல்லியத்தை எதிர்பார்பவர்களாக இருந்தனர். இதனால் கம்ப்யூட்டரில் டிசைன் செய்த பிறகு கிராப்ட் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.

வாடிக்கையாளர் விரும்புவார்கள் என்று நாமே தன்னிச்சையாக டிசைன் செய்து வைக்க முடியாது. சில நேரங்களில் வேண்டாம் என்று கூறிவிடுவார்கள். இதனால் அவர்களிடமிருந்து யோசனைகளும் வாங்கத் தொடங்கினேன். இந்த முறையால் எனது டிசைன்கள் மேலும் மெருகேறியது. வாடிக்கையாளர்களது யோசனையும் எங்களது யோசனையும் சேர்ந்து ஒரு டிசைனாக வரும்போது அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிதான் எங்களுக்கான பலம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

image


இது போன்ற ரசனை சார்ந்த விஷயங்களைக் கைகளால் மட்டுமே வரைந்து விட முடியாது. அதே நேரத்தில் கண்ணாடிகளை இதர பொருட்களைப் போல கையாளுவது எளிமையானவை அல்ல. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும் மொத்த உழைப்பும் வீணாகப் போய்விடும் என்பதால் தனியாக பிராசஸிங் யூனிட் வைத்திருக்கிறோம்.

படித்த படிப்புக்கு வேலை தேடியிருந்தால் நல்ல ஹோட்டலிலோ அல்லது சம்பளத்திலோ சேர்ந்து வாழ்க்கை ஒரே மாதிரி இருந்திருக்கும். ஆனால் கைவிடும் நிலையில் இருந்த தொழிலை கவுரவமான நிலைக்கு வளர்த்திருக்கிறேன் என்கிறபோது சந்தோஷமாக இருக்கிறது. இந்த திருப்திக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்.

ரூ.300 விலையிலிருந்து இரண்டு மூன்று லட்சம் வரை விலையில் கண்ணாடி பெயிண்டிங்குகளை உள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இவரது விற்பனையகமும் உள்ளது. 

இணையதள முகவரி: CreativeglassStudio

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மார்த்தாண்டம் முதல் லண்டன் வரை: கின்னஸ் சாதனை ஓவியர் ராஜசேகரனின் கதை!

'கடம்' இசையில் சாதனை படைக்கும் குமரி இளைஞர் அப்துல் ஹலீம்!

'ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்'- ஸ்வர்ணலதா நடேசன்

Add to
Shares
76
Comments
Share This
Add to
Shares
76
Comments
Share
Report an issue
Authors

Related Tags