பதிப்புகளில்

ஜோதிடம் மூலம் மனித மனங்களின் பிரச்னைகளை தீர்க்கும் அபிஜிதா குலஷரிஸ்தா

YS TEAM TAMIL
23rd Jan 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

தனித்துவம் கொண்ட அபிஜிதா குலஷரிஸ்தா, ஜெம் ஸ்டோன் யூனிவர்ஸுடைய நிறுவனராகவும், மூத்த, கல் நிபுணராகவும் இன்று ஒரு உயர் நிலையை எட்டியுள்ளார். அதற்கு முன், பல துறைகள் மற்றும் கலைகளில் தேர்ந்த இவர் இன்று வான சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுத்த அறிஞர் மட்டுமல்லாது 'நீரோ லிங்குவிஸ்டிக்' என்ற சிறந்த தொடர்பு முறையையும் பயிற்சித்து வரும் இவர், ஒரு நபருடைய நுணுக்கமான இயல்பு, வான் காந்த, நட்சத்திரங்கள் மற்றும் கற்களின் திறன்களை சேர்த்து ஒரு சரியான தீர்வை தருவதில் வல்லமையும் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

எழுத்தாளராக தன்னுடைய முதல் அடியை வைத்த அபிஜிதா, பெனெட் கொல்மேன், ஆர் கே ஸ்வாமி பிபிடிஒ மற்றும் MICA போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். தவிர, சிறந்த நகை தொழில்முறை திட்டத்திற்க்கான AJP என்ற சான்றிதழும் GIA நிறுவனத்தில் பெற்றுள்ளார், அது மட்டுமல்லாமல், தாய்லாந்தை சேர்ந்த PGA என்ற கழகத்தின் மூலம் கிரக மாணிக்கம் ஆலோசகர் என்ற சான்றிதழும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜிதாவின் வாழ்க்கை, அனுபவங்கள், பயணம், கற்றுக்கொண்ட பாடங்கள் எல்லாம் அவருடைய வார்த்தைகளிலியே...

நான் குளிர்மிகுந்த மலைப்பகுதிகளிலான கசொலி என்ற இடத்தில் வளர்ந்தேன். என்னுடைய நண்பர்கள் விடுமுறை நாட்களின் போது, அவர்களுடைய தாத்தா பாட்டி வீடுகளுக்கு சென்றுவிடுவது வழக்கம். தனியாக காடுகளில் ஓடி விளையாடுவது, பழங்களை பறித்து சாப்பிடுவது என்னுடைய நாட்களை தனியாகக் கழிப்பதுண்டு. மிகவும் குறைவான வீடுகளை கொண்டது எங்களுடைய கிராமம்.

நான் வாழ்ந்த அந்த நாட்கள் முற்றிலுமாக வேறாக இருந்தது. இன்று என்னால் அவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியாது. அங்கிருந்து என்னுடைய மேற்படிப்பிற்காக, சண்டிகர் சென்றிருந்தேன். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாஸ் கம்யூனிக்கெஷன் படிப்பை முடித்த பின், பத்திரிக்கையாளராக வேலைக்குச் சேர்ந்தேன். உலகத்தில் ஒரு விதமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.

image


அப்போது கசொலியில் ஒரு பெருமளவிலான குற்றம் நடந்த சமயம். ஒரே செய்தியாளராக அந்த இடத்தில் இருந்த நான், அந்த குற்றத்தை பற்றின செய்திகளை முதல் பக்க கட்டுரையாக தந்துக்கொண்டிருந்தேன். பத்திரிகையாளராக ஒரு சிறப்பான ஆரம்பமாக இருந்தாலும் அது திடீரென முடிவுக்கு வந்தது. கல்லூரிகளில் கனவுகளை அதிகமாக போதித்திருந்தமையால் என்னுடைய இந்த திடீர் சரிவை எடுத்துக்கொள்ள முடியாத சூழல் எனக்கு ஏற்பட்டது. நாங்கள் படிக்கும் காலத்தில், பத்திரிகைத் துறை என்பது மிகவும் உன்னதமான துறை என்றும், பல கனவுகள் என் மனதில் அதிகமாக விதைக்கப்பட்டிருந்தது.

கற்றலில் ஆர்வமும் நம்பிக்கையும் எனக்கு அதிகமுண்டு. கற்றுக்கொள்ளும் சூழலும் எனக்கு மிகவும் பிடிக்கும். MICAவில் தகவல் தொடர்பியல் ஆய்விற்கான ஆசிரியராக சேர்ந்த பிறகு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாடத்திட்டத்திற்கு ஏற்ற ஆலோசனைகளை சேகரிப்பது, பல அறிவுசார்ந்த மாணவர்களை திரட்டுவது போன்ற செயல்களில் அப்போது ஈடுபட்டேன். தவிர, பாடங்களும் எடுத்த சமயம் அது.

எனக்கு அப்போது 24 வயது, என்னுடைய வகுப்பிலேயே வயது அதிகம் உள்ள மாணவனுக்கு 28 வயது. உண்மையான வளர்ச்சிக்கு சவால்களை சந்தித்து வருவதே சரியான வழி என்பதை நான் புரிந்துக்கொண்டேன். அது எனக்கு ஓரு மிக பெரிய சவாலாக இருந்தது என்றே சொல்லலாம்.

MICAவில் நான் பணிபுரிந்த காலம் மிகவும் எனக்கு நெருக்கமானது. கல்யாணம் போன்ற வாழ்க்கையின் அடுத்த அடிகளை எடுத்து வைக்க வேண்டிய நிலை என்பதால் நான் அங்கிருந்து ராஜினாமா செய்தேன். காதல் திருமணமான என்னுடைய திருமண வாழ்க்கை ஆரம்பித்தது பெங்களுருவில். என்னைப் பொறுத்தவரை, கல்யாணம் உண்மையான இலக்கை எப்போது அடையுமென்றால், வாழ்க்கை துணையை சரிபாதியாக நினைத்து, தகுந்த மரியாதையோடு நடத்தும் போது மட்டுமே நிறைவுப்பெறுகிறது என்று. வெறும் அன்பு, காதல் மட்டும் போதாது.

திருமணம் முடிந்த ஓராண்டு காலத்திற்குள் எங்களுக்கு மகன் பிறந்தான். முழு நேர அம்மாவாக என்னுடைய கடமைகளை சரியாகச் செய்யவேண்டிய நிலையில், என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன். காபி ரைட்டிங், ஃப்ரீலான்சராக பத்திரிக்கைகளுக்கு எழுதுவது, சர்வதேச அளவிலான ஆய்வுப் புத்தகங்களுக்கு எழுதுவது என்று என்னுடைய நாட்கள் அப்போது சென்றது. என்னைச் சுற்றி இருந்த மற்ற வாய்ப்புகளை பற்றி எனக்கு அறிமுகம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், என்னுடைய பத்திரிகை நாட்களிலிருந்து இருந்த எழுத்து ஆர்வம் அதிகமாக வளர்வதை உணர்ந்தேன். இன்று என்னுடைய வான சாஸ்திரவியல் துறையிலும் கைக்கொடுப்பது எழுத்து திறன் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தகம் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவுகளுள் ஒன்று. பல சிந்தனைகளுள் வாழ்க்கை இன்று இருந்தாலும், ஒரு நாள் கட்டாயமாக எழுதுவேன்.

நிரோ லிங்க்குவிஸ்டிக் முறை என்னை எப்போதுமே அதிகமாக கவர்ந்தது. அறவியல் சார்ந்த விஷயமாக இருந்தாலும், தொடர்பியல் மற்றும் கலை இரண்டையும் சேர்த்து மனிதனின் சிக்கலான மனதில் நுழையக்கூடிய கலை இது என்பதும் கூட.

தாய்மை என்ற என்னுடைய பரிமாணத்தை அடைந்த பின், NLPயில் வான் சாஸ்திரவியல் பயில தொடங்கியபோது, அதன் ஆழத்தை அறிந்து கற்கலானேன். முதுநிலை படிப்பை நோக்கி இப்போது நான் சென்று கொண்டிருப்பது மட்டுமல்லாமல், எனக்கான ஒரு தனி ஆர்வத்தையும் நான் வான் சாஸ்திரவியலில் கண்டேன்.

முதன் முதலில் வான சாஸ்திர ஆலோசனை செய்ய தொடங்கியதுமே, ஒரு நல்ல மாறுதலை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த என்னால் முடிந்தது குறிப்பிடத்தக்கது. கஷ்டத்தில் வந்த நபர்கள் சந்தோஷத்துடனும், மன நிம்மதியுடனும் வெளியே செல்வதைப் பார்க்கும் போது, என்னுடைய செயலின் மேல் விருப்பம் அதிகமாவதை உணர்ந்தேன். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு அதிசயம் நிகழ்த்துவதுடைய முக்கியத்துவத்தையும் புரிந்துக்கொண்டேன்.

வான் சாஸ்திரம் என்பது வெறும் ஒரு மூடப்பழக்கமாக பார்ப்பதை தவிர்த்து, ஒரு துல்லியமான புரிந்துக்கொள்ள இயலாத அறிவியலாக பார்ப்பது அவசியம். இதனுடைய முழு சக்தியும் உணர்வும் வானிலிருந்து கிடைப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுதல் அவசியம். என்னுடைய குரு சொன்னது நினைவுக்கு வருகிறது,

ஜோதிடர்கள் சரியாக இல்லாமல் போனாலும், ஜோதிடம் சரியானதே.

நம்பிக்கை இல்லாமல் ஒரு சந்தேகத்தோடு என்னை அணுகும் நபர்களை நான் எடுத்துக்கொள்வதில்லை. கட்டாயத்தின் அடிப்படையில் அவர்களுக்கு அவர்கள் நினைத்த விஷயங்களை மட்டும் சொல்வதற்கும் என்னால் முடியாது. வான் சாஸ்திரம் என்ற கலையின் திவ்யத்தை மட்டுமே எடுத்து சொல்லுவது வழக்கம். புனிதமாக நான் எடுத்துக்கொள்ளும் இந்தக் கலையை நம்பிக்கை இல்லாதவர்களிடம் பணத்திற்காக தருவதற்கு எனக்கு துளியும் கூட விருப்பம் இல்லை.

ஜோதிடம் மற்றும் ராசிக்கல் மூலம் காணும் தீர்வு முறைகள் பண்டைய காலத்து வேதங்களிலிருந்து எடுத்து பரிமாறிக்கொள்ளப்பட்டது. நவீன மாற்றங்களும் கால சுழற்சியினால் அதனுடைய உண்மையான தன்மையை இழந்துவிட்டது. இரத்தினம், மரகதம், மற்றும் நீலக்கல் இம்மூன்றையும் பெரிய கற்கள் என்று குறிப்பிடுவதுண்டு.

இரத்தினக்கல், சூரியனுக்கான கல். மேல்தட்ட நிலையில் இருக்கும், தொழிலில் இருப்பவர்களுக்கான கல் என்றும் சொல்லலாம். தவிர, மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களுக்கும் உகந்த கல் இது. கிரியேட்டிவ் மற்றும் கலைத் துறையில் இருப்பவர்களுக்கான கல் மரகதம். மஞ்சள் கல் வியாழன் கிரகத்திற்கு ஏற்ற கல். தவிர, நான் இந்த கல்லை தான் முதன் முதலில் அணிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த கல்லும் கூட.

பொதுவாக ஒருவருடைய திறமை மற்றும் கொள்கையை அவரவருடைய உடைகள் மற்றும் வெளிப்படுத்தும் முறையை வைத்து ஒப்பிடுவது உண்டு. அதிலும் குறிப்பாக, என்னுடைய இந்தத் தொழிலில் வழக்கத்திற்கு மாறாக உடைகளை அணிந்து செல்லும் போது, ஒரு சின்ன குழப்பம் இருக்கவே செய்கிறது. என்னுடைய வசதி மற்றும் மனதிற்கு ஏற்ப உடைகளை உடுத்துவது வழக்கம். உங்களுடைய திறமை மற்றும் உள்ளிருக்கும் உண்மையான குணம் தான் ஒரு முழு நபராக உங்களை எடுத்துக்காட்டுவது.

ஒருத்தருடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி ஜோதிடத்திற்கு இருப்பது உண்மையே. என்னுடைய அனுபவத்தின் வழியே, நான் பல பேரை அவர்களுடைய வாழ்க்கையின் பல நிலைகளில் சந்தித்திருக்கிறேன். அதன் மூலம், அவர்கள் அடைந்த மகிழ்ச்சியும், சில சங்கடங்களையும் கூட கவனித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய தவறுகளிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல,

எந்தவொரு காரணத்திற்காகவும், உறவிற்காகவும் உன்னை நீ விற்காதே. உனக்கு உண்மையாக இருந்து, ஒவ்வொரு நாளும் அந்த உண்மைத் தனத்தை போற்றி பாதுக்காக்க வேண்டும். அது நிரந்தரமாகவும், சக்தியாகவும் இருந்து உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

எந்தவொரு உறவில் பிளவு ஏற்பட்டாலும், உங்களுடைய உண்மையான நிலை மாறுப்படாமல் இருப்பது அவசியம். உங்களுடைய உள்ளாற்றலிற்கு இதுவே உறுதுணையாக இருக்கவும் செய்யும். நெஞ்சம் நிமிர்த்து நடந்து, செய்யும் விஷயத்தில் தீர்க்கமாக இருப்பது உங்களுக்கு வெற்றியை கண்டிப்பாக தரும்.

ஆக்கம் ராக்கி சக்ரபொர்த்தி | தமிழில் நித்யா

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக