பதிப்புகளில்

உங்கள் வீடியோவை வைரலாக்க இதோ சில எளிய வித்தைகள்!

YS TEAM TAMIL
23rd Jun 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

"நாங்கள், எங்கள் வீடியோவைத் திட்டமிட்ட போது, 30,000-40,000 வியூஸ் பெறும் என எதிர்ப்பார்தோம். ஆனால், நாங்கள் எதிர்பாராத வகையில் எங்கள் வீடியோவின் வியூஸ், லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் மில்லியன் கணக்கில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

"ஜூன் 10-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட எங்கள் வீடியோ, நான்கு நாட்களில் 25,000 ஷேர்ஸ் மற்றும் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், எங்களுக்கு இரண்டு மில்லியன் பயனர்களை இரண்டு நாட்களில் அடைய உதவியுள்ளது" என்கிறார் பர்தீப் கோயல்.

இதேபோல் மார்க்கெட்டிங்கில் நீங்களும் உங்கள் வீடியோவை வைரல் ஆக்க விரும்புகீர்களா? கீழே பகிர்ந்துள்ள ஈஸி குறிப்புகளைப் பின்பற்றி பாருங்கள்!

image


1. பார்ப்பவர்கள் பயனடையுமாறு தயாரிங்கள்!

நம் வீடியோ பார்ப்பவர்களுக்கு, நாம் கூறுகின்ற கருத்துகள் பயனுள்ளதாய் இருக்க வேண்டும். எங்கள் வீடியோ வெற்றிக்கும் இதுவே முக்கியக் காரணம். கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் நோய்களுக்கு, வீட்டிலேயே செய்யக்கூடிய வைத்தியங்களை, நாங்கள் எங்கள் வீடியோவின் கருத்தாய் எடுத்துக் கொண்டோம்.

சளி மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு, வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகளை, தாய்மார்கள் சமூகம் பெரியதாய் எதிர்நோக்கிறது என்பதை எங்களின் "பேபி கோகோ"- மொபைல் ஆப் மூலம் புரிந்து கொண்டோம்.

அதனால் அதற்கான வழிகள் குறித்து, ஒரு வலைதளம் (Blog) கட்டுரை எழுதினோம். அது நல்ல வரவேற்பு பெற்றது. இதை வீடியோவாக செய்து வெளியிட்டோம். வீடியோ மேலும் வெற்றிகளை அள்ளிக் குவித்தது.


2. ஈர்க்கும் தலைப்பும், தீர்வான விளக்கமும் அளியுங்கள்!

மக்கள், புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து தான், புத்தகத்தை மதிப்பிடுவர். இதேதான் வீடியோக்களுக்கும் பொருந்தும்.

பார்ப்பவர்களுக்கு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கான தீர்வாக, நம்பிக்கை கிடைக்கும் வகையில் விளக்கமும், பார்க்கத் தூண்டும் வகையில் தலைப்பையும் எழுத வேண்டும்.

"கோல்ட் & காப் ஹோம் ரேமெடீஸ் ஃபார் பேபிஸ்" (Cold & Cough home remedies for babies) எனும் தலைப்புக்கு மாறாக, "5 மோஸ்ட் எப்பெக்ட்டிவ் ஹோம் ரேமேடீஸ் அகேன்ஸ்ட் கோல்ட் அண்ட் காப்" (5 most effective home remedies against cold and cough) என்று நாங்கள் எங்கள் தலைப்பை எழுதினோம்.

3. பார்க்கத் தூண்டும் படத்தை முன்னோட்டமாக வையுங்கள்

ஒரு தாயின் கையில் இருக்கும் கைக்குழந்தை புகைப்படத்தை, எங்கள் வீடியோ முன்னோட்டமாக (Preview) காட்டும். அதனால், தாய்மார்கள் இந்த படத்துடன் அவர்களையே ஒப்பிட்டு கொள்ள முடியும்.

image


நம் வீடியோவில் இருந்து ஒரு ஸ்னாப்ஷாட்டையோ அல்லது வேறோரு படத்தையோ, நாம் முன்னோட்ட படமாக வைத்து கொள்ளலாம்.

வீடியோவை பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று பார்ப்போரை முடிவெடுக்க வைக்கும், தலைப்பையும் முன்னோட்ட படத்தையும் எளிதில் புறக்கணித்து விடாதீர்கள்.

4. முதல் சில வினாடிகளிலே, பார்ப்போரை வசப்படுத்துங்கள்!

வீடியோவின் முதல் சில வினாடிகள் மிக முக்கியமானவை. வீடியோவின் ப்ராண்ட் (brand) குறித்தெல்லாம் யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதனால், லோகோ அல்லது நிறுவனத்தின் பெயர் காட்டி, மக்கள், வீடியோவைப் புறக்கணிக்க வழி செய்து விடாதீர்கள்.

அதற்கு பதிலாக, வீடியோ தொடர்ந்து பார்க்கும் வகையில், காட்சிகளை காரணமாக வையுங்கள்.

ஒரு க்யூட் பேபி தும்பும் காட்சியோடு எங்கள் வீடியோ ஆரம்பிக்கும். அதனை தொடர்ந்து, ஒன்றின் பின் ஒன்றாக வைத்தியங்கள் காட்சியளிக்கப்பட்டுள்ளது.

5. வீடியோவைப் பகிரச் செய்ய காரணம் கொடுங்கள்!

நம் வீடியோவை எதற்கு மற்றவர் பகிர வேண்டும்? நன்றாக யோசித்து பாருங்கள்!

பொதுவான சளி, இருமல் போன்ற நோய்களுக்கு, டாக்டர்கள் கூட மருந்து பரிந்துரைக்கமாட்டார்கள். அதற்கு விளைவாக, பெற்றோர்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதனால், எங்கள் வீடியோ அவர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.

வீடியோவில் கூறப்பட்ட மருந்துகள் யாவும், அன்றாடம் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் ஆகாரங்கள் தான். அதனால், வீடியோவின் குறிப்புகள் அனைத்தும், மக்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளும் வகையில் இருந்ததுதான், எங்கள் வீடியோ வைரலாக பரவக் காரணமாக இருக்கிறது.

6. இன்டர்நெட்டில் எது அதிகமாக பகிரப்படுவது - தெரிந்து கொள்ளுங்கள்!

சில சமயங்களில், மற்றவர்கள் நம் வீடியோவை பகிர, ஒரு சிறந்த காரணத்தை நம்மால் அளிக்க முடியாமல் போகலாம்.

அப்படி ஆகாமல் இருக்க முதலில், இன்டர்நெட்டில் உங்கள் தொழில் சம்பந்தப்பட்டதாய் எது அதிகமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல், கிரிக்கெட், செக்ஸ், சினிமா போன்றவைக் குறித்து பேச, மக்கள் அதிகமாய் ஆசைப்படுவர். இவற்றிருக்கும் உங்கள் ஐடியாவிற்கும் ஒத்துபோகக்கூடிய பொதுவான கருத்து ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பயனடைவோர்கள் தங்கள் நண்பர்களுடன், பகிர்ந்து கொள்ளும் வகையில் அந்த கருத்தைக் கொண்டு வித்தியாசமாகவும் ஆர்வமிக்கதாகவும் வீடியோவை உருவாக்குங்கள்.

 கோபம், ஆச்சரியம், அன்பு, கருணை, ஆர்வம் முதலிய உணர்ச்சிகளே இன்டர்நெட்டில் அதிகம் பகிரப்படுக்கிறது. சோகம், சலிப்பு, கவலை போன்ற உணர்ச்சிகளைத் தவிர்த்து விடவும்.

7. புத்திசாலித்தனமாக ப்ரமோட் செய்யுங்கள்!

வீடியோ ரெடி ஆனதும், அடுத்த நாளே, அதன் ப்ரோமோஷனுக்கு செலவு செய்யத் தயாராகி விடுகிறோம். ஆனால், நாங்கள் பணம் செலுத்தி ஃபேஸ்புக்-இல் ப்ரோமோஷன் செய்வதில் ஈடுபடவில்லை. எங்கள் வியூஸ் அதிகரிக்கவும் இதுவே காரணம் ஆகும். ஃபேஸ்புக் மட்டுமல்லாது, மற்ற வெளி சமூக தளங்களிலும் நாங்கள் இந்த வீடியோவை பகிர்ந்தோம். ஃபேஸ்புக்-இல் பணம் செலுத்தி ப்ரோமோஷன் செய்தால், வீடியோ மக்களிடையே முறையாக சென்றடையுமா? என்பது ஐயப்பாடு தான்.

8. குறுகிய நேரம் கொண்ட வீடியோவாக செய்யுங்கள்...

எங்கள் வீடியோவின் மொத்த நேரம், ஒரு நிமிடம் 15 வினாடிகள் ஆகும். அதில் வீட்டிலேயே செய்யக்கூடிய 5 வைத்தியங்களைப் பற்றி கூறியுள்ளோம். வீடியோக்கள் பொருத்தவரையில், ஒவ்வொரு வினாடியும் அவசியம். சொல்ல விரும்பும் கருத்துக்களை, குறுகிய நேரத்தில் தெரிவித்து விடும் வகையில் வீடியோ சின்னதாக அமைய வேண்டும்.

அவ்வளவுதானா?

நாங்கள் சில தவறுகள் செய்து இருந்தோம். அடுத்தமுறை அதை சரிசெய்து கொள்வோம். அனைத்து முறையும் மாபெரும் வெற்றியை காண முடியாது. ஆனால், அடுத்தடுத்து செய்யும் போது, தவறுகளைத் திருத்தி கொண்டு முன்னேற்றம் காண முடியும்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில், நான் செய்த வீடியோவை பெரியதாய் மதிக்கவில்லை. என் மார்க்கெட்டிங் ஐடியாவும் வலிமையானதாய் இல்லை. முன்தினம் வெளியான என் வீடியோவிற்கு, மறுநாள் தான் நான் ப்ரமோஷன் வேலைகளைப் பார்க்க தொடங்கினேன். ஒவ்வொரு நிமிடங்களை வீணாக்குவதும், வீடியோவின் வைரல்-தன்மையைக் குறைத்து விடும். நாங்கள் மேலும், உடல் நலம் குறித்து வீடியோக்கள் பகிரும் ஃபேஸ்புக் பக்கங்களைத் தொடர்பு கொண்டிருந்தால், இரண்டாவது நாளே எங்கள் வீடியோ மில்லியன் வியூஸ் பெற்றிருக்கும்.

வீடியோ மார்க்கெட்டிங், இவ்வளவு விரைவில் வெற்றி கண்டதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் தினமும் இன்டர்நெட் பயன்ப்படுத்தும் 25% மேற்பட்ட பெற்றோர்கள், எங்கள் வீடியோவைப் பார்க்குமாறு கவனித்துக் கொண்டோம்.

நிக்கிலேஷ் (ஸ்டேஜ்பாட்) மற்றும் ஆஷிஷ் சோப்ரா (இக்ஸிகோ) ஆகியோரின் துணையும் நுண்ணறிவும்தான் எங்கள் வீடியோ வைரல் ஆனதற்குக் காரணம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக