வெல்வெட் ஷாம்பு, நிவாரன்90 உருவாக்கிய சென்னை தொழிலதிபர் சி.கே.ராஜ்குமார் மறைவு!

By YS TEAM TAMIL|8th Oct 2020
ஷாம்பு மற்றும் இருமல் மருந்தை சாஷேவில் விற்பனை செய்வதில் முன்னோடியான தொழிலதிபர் சி.கே.ராஜ்குமார் மறைவை அவரது சகோதரர் சி.கே.குமாரவேலு டிவிட்டரில் அறிவித்திருக்கிறார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், நிவாரன் 90 உரிமையாளருமான சி.கே.ராஜ்குமார் உடல்நலக்குறைவால காலமானார்.

ஷாம்பு மற்றும் இருமல் மருந்தை சாஷேவில் விற்பனை செய்யும் முறையை அறிமுகம் செய்த முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.

சுஜாதா பயோடெக் நிறுவனரான ராஜ்குமார், நிவாரண் 90 மற்றும் வெல்வெட் ஷாம்பு ஆகிய பிராண்ட்களை கொண்டிருந்தார். உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று காலாமனார். 68 வயதான அவருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நேச்சுரல்ஸ் நிறுவனர், சி.இ.ஓ மற்றும் சி.கே.ராஜ்குமாரின் சகோரதருமான சி.கே.குமாரவேல் டிவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார். புதன் கிழமை இரவு அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“மிகுத்த சோகம் மற்றும் வேதனையுடன், எங்கள் அருமை சகோதரரும், #வெல்வெட் இண்டர்நேஷனல் தலைவர் மற்றும் பெரிதாக கனவு கான, எப்போதும் முயற்சியை கைவிடாமல் இருக்க எங்களுக்கு கற்றுக்கொடுத்த துடிப்பான தொழிலதிபருமான டாக்டர்.சி.கே.ராஜ்குமார் மறைவை தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

சி.கே.ராஜ்குமார், கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே.ரங்கநாதனின் சகோதரரும் ஆவார்.

ckk brothers

சிகே குமாரவேல், சிகே ரங்கனாதன் மற்றும் சிகே ராஜ்குமார்

கடலூரில், பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராஜ்குமார், அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சாஷேவில் ஹாம்பூ விற்பனையை சோதனை முறையில் துவக்கினார். அதன் பிறகு அவர் சுஜாதா பயோடெக் நிறுவனத்தை துவக்கி, வெல்வெட் ஷாம்பு மற்றும் நிவாரன் 90 ஆகிய பிராண்ட்களை உருவாக்கினார். மெமரிபிளஸ் எனும் நினைவாற்றல் மாத்திரையையும் அறிமுகம் செய்தார்.


ஷாம்பூவை ஷாசேவில் விற்பனை செய்வதை அறிமுகம் செய்தவராக ராஜ்குமார் கருதப்படுகிறார். இதன் மூலம் ஷாம்புவை சாமானிய மனிதர்களும் பயன்படுத்துவதை சாத்தியமாக்கியவராக கருதப்படுகிறார்.


தொகுப்பு- சைபர்சிம்மன்

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world