பதிப்புகளில்

அதீத உத்வேகமளிக்கும் பயணத்தை மேற்கொண்ட 3 பெண் விளையாட்டு வீரர்கள்!

2nd Nov 2017
Add to
Shares
46
Comments
Share This
Add to
Shares
46
Comments
Share

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிவை எடுத்துச்சென்று ஆழ்ந்த நுண்ணறிவை வழங்க ஒரு முக்கிய கருவியாக இருப்பது கதைகளே. தற்போது இணையத்தின் உதவிகொண்டு உலகெங்கும் இருக்கும் கதைகளை நாம் அறியலாம். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் யூட்யூப் வீடியோ வாயிலாகவும் ஒருவரது வாழ்க்கை குறித்த பல தகவல்களை இன்று நாம் தெரிந்துகொள்ளலாம். 

இந்த அதீத உத்வேகமளிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உந்துதலளிக்கும் விஷயங்கள் குறித்தும் அவர்கள் இன்றைய நிலையை எட்ட உதவிய விஷயங்கள் குறித்தும் தெரிந்துகொள்வதற்கு இதுவே சிறந்த வழியாகும்.

image


பொதுவாகவே ஊக்கம் மட்டுமே ஒரு விளையாட்டு வீரரை மிளிரவும் தளர்ந்துபோகவும் செய்யும். 7 முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்ற ஃபில் ஹீத் (Phil Heath) சமீபத்திய பட்டத்தை வென்றபோது ஊக்கம்தான் வெற்றிக்கான முக்கிய விஷயமாக குறிப்பிட்டார். அவருக்கு முன்பு இதில் ஈடுபட்ட ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் நன்றிதெரிவித்து அந்த மரபை தொடர்ந்து எடுத்துச்செல்ல விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார்.

விடாமுயற்சி, ஊக்கத்தின் வலிமை, மரபை எடுத்துச்செல்லவேண்டும் என்கிற விருப்பம் போன்றவற்றிற்கு பொருத்தமான உதாரணமாக விளங்கும் சில இந்திய விளையாட்டு வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

கீதா போகத்

போகத் சகோதரிகள் குறித்தும் அவர்களது கதை குறித்தும் தங்கல் திரைப்படம் மூலம் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்களது கடும் உழைப்பு குறித்து பலருக்குத் தெரியாது. இரு பெண்களும் காலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை பயிற்சியெடுப்பார்கள். பள்ளிக்குச் செல்வார்கள். அதன்பிறகு இரண்டு மணி நேர பயிற்சியெடுப்பார்கள். மெதுவாக செயல்படுவது, ஓய்வெடுப்பது என்கிற வார்த்தைகளெல்லாம் அவர்களது அகராதியிலேயே இல்லை எனலாம். கீதாவின் பெற்றோரிடமும் அந்தச் சகோதரிகளிடமும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?

’பெண் குழந்தைகளை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுவது அவமானமான செயலாகும்’. ‘உங்கள் பெண் பிள்ளைகளை பாழாக்குகிறீர்கள்’. ’அவர்களை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்.’ ‘அவர்கள் முரட்டுத்தனமாக மாறி உங்களுக்கு அவமானத்தைத் தேடித் தருவார்கள்.’

ஒவ்வொரு நாளும் கீதாவும் அவரது குடும்பத்தினரும் பல போராட்டங்களை எதிர்த்து போராடவேண்டியிருந்தது. அத்துடன் தினமும் 5-6 மணி நேரம் பணிபுரியவேண்டியிருந்தது.

”நாங்கள் ஒரு தப்பான அடியெடுத்து வைக்கவேண்டும் என்று அனைவரும் காத்திருந்தனர். ஆண்களால் கவனம் சிதறப்படுவோம் என்று நினைத்தனர். எங்காவது சமரசம் செய்துகொள்வோம் என்று நினைத்தனர். அவர்கள் நினைத்தது சரி என்பதை நிரூபிப்பதற்காகவே எங்கள் பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் விதத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தனர்,” என்று தி கார்டியன் நேர்காணலின்போது தெரிவித்தார் கீதா.

மித்தாலி ராஜ்

முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதியில் சிறப்பிக்க விரும்பினார் மித்தாலி ராஜ். அவர் விரும்பியது இந்திய பாரம்பரிய நடனம். பெண்கள் ODI கிரிக்கெட் வரலாற்றில் 6,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையை படைத்தார் இந்திய பெண்கள் அணியின் தலைவரான இவர். சாத்தியமற்றது என்று நம்பப்பட்ட சாதனையை தனது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றால் சாதித்துக் காட்டினார் 34 வயதான மித்தாலி ராஜ்.

மற்ற விளையாட்டு வீரர்களைப் போன்றே விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் கட்டமைப்புகளிலிருந்து இவருக்கு மிகக்குறைவான ஆதரவே கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்த பல சிறந்த பணி வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டார். பிட்ச்சிலும் பயிற்சியிலும் செலவிட்ட நேரம் அவருக்கு நல்ல பலனளித்தது. இன்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலருக்கு அவர் முன்மாதிரியாக விளங்குகிறார். ஆரம்ப காலகட்டத்தில் அவரது தந்தை அதிக ஊக்கமளிப்பவராகவும் வளரும் காலகட்டத்தில் அவரது செயல்பாடுகளை விமர்சிப்பராகவும் இருந்தார். அடுத்த கட்டமாக ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட்டர் ஆவதற்கும் இந்திய கிரிக்கெட்டை சிறப்பான நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

image


தீபா மாலிக்

மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டது துவங்கி பாராஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் என்கிற சாதனை வரை தீபா மாலிக்கின் பயணம் போராட்டம், மனோதிடம், பிரச்சனைகள் ஆகியவை நிறைந்ததாக இருந்தது. 46 வயதில் இந்த பதக்கத்தை அவர் வென்றது அற்புதமான விஷயமாகும். அவர் மீது நம்பிக்கை வைக்காமல் பலர் உதவ முன்வரவில்லை. அவர் முட்டாள்தனமாக இருப்பதாகவும் அது ஒரு நீண்ட பயணம் என்றும் மக்கள் நினைத்தனர். அவர் ஒரு நடுத்தர வர்க்கத்தின் உயர் நிலையில் இருக்கும் கர்னலின் மனைவி என்பதாலும் 40 வயதைத் தாண்டியவர் என்பதாலும் மக்கள் அவர் வெற்றியடைய மாட்டார் என்றே முடிவு செய்தனர்.

வெறுப்பு மற்றும் நிராகரித்தலை அவர் எவ்வாறு கையாண்டார்? பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் பைக்கை ஓட்டினார். யமுனா நதியின் நீரோட்டத்தை எதிர்த்து ஒரு கிலோமீட்டர் நீந்தினார். Leh-க்கு 3,000 கிலோமீட்டர் வரை பைக் ஓட்டிச்சென்றுள்ளார். நீச்சல் போட்டிகளிலும் பைக் ரேஸிலும் பல சாதனைகளை முறியடித்துள்லார். இவர் உண்மையில் ஊக்கமளிக்கும் ஒரு பெண்மணி.

ஆங்கில கட்டுரையாளர் : சஞ்சித் கெரா

Add to
Shares
46
Comments
Share This
Add to
Shares
46
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக