பதிப்புகளில்

iphone X பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

YS TEAM TAMIL
13th Sep 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

மிக பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல புதிய ஐபோன் கைபேசிகளை அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில் iphone X என்கிற புது மாடலை இன்று (புதன்கிழமை) ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கான ஆப்பிள் பார்க்கில் வெளியிட்டது. iphone X-ஐ ’ஸ்மார்ட்போனின் எதிர்காலம்’ என ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஆப்பிளின் இந்த புதிய மாடல் முழுமையான கண்ணாடி வடிவமைப்புக் கொண்டது, 5.8 அங்குல சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே, A11 Bionic Chip, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் Dual optical கேமரா கொண்டுள்ளது. மேலும் iphone X-ல் முகத்தை அடையாளம் கண்டு unlock செய்யும் சென்சார் புகுத்தப்பட்டுள்ளது.

image


ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஜானி ஐவ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

“பல வருடங்களாகவே எங்களது நோக்கம் முழு டிஸ்ப்ளே கொண்ட ஒரு கைபேசியை உருவாக்குவது தான். அந்த குறிக்கோளின் வெளிப்பாடுதான் iphone X; பத்து வருட காலத்திற்குள் ஐபோன் பல பரிமாற்றங்களை அடைந்துள்ளது. அதில் iphone X மாடல் ஐபோன் வரிசையில் ஒரு புதிய சகாப்தம்,” என்றார்.

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் பிலிப் ஷில்லர், வாடிக்கையாளர்கள் Face ID, AR Games, மெசேஜில் அனிமேஷன் எமொஜி போன்ற பல புது அமைப்புகளை iphone X-ல் அனுபவிக்கலாம்.


வடிவமைப்பு

iphone X மற்ற ஐபோன் போல் இல்லாமல் வளைவான முனையைக் கொண்டு முழுமையான டிஸ்ப்ளே திரையை கொண்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் iphone X-ல் முன்னும் பின்னும் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி மிகவும் வலிமையுடையது மற்றும் நீடித்த நாட்கள் வரும் என தெரிவித்துள்ளனர். iphone X வெள்ளி மற்றும் சாம்பல் நிறத்தில் வெளி வர இருக்கிறது.

மேலும் ஏழு அடுக்கு நிற செயல்முறையை கொண்டுள்ளது. இது டிஸ்ப்ளே கண்ணாடியில் துள்ளியமான வண்ணங்களை காட்ட உதவுகிறது. தண்ணீர் மற்றும் தூசி புகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

image


சிறந்த ரெட்டினா டிஸ்ப்ளே

ஐபோன் வரிசையில் iphone X-ல் மட்டுமே முதல் முதலாக OLED பேனல் 5.8-அங்குல சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களுள் iphone தரத்தை இன்னும் உயர்த்தும். மேலும் ios 11 சூப்பர் ரெடினா டிஸ்ப்ளேவை முழுமையாக பயன்படுத்த உதவும். ஹோம் பட்டனுக்கு பதிலாக அதி வேக செய்கைகளை எடுத்துக்கொள்ளும் சென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இது iphone X வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த சுமூகமாக அமையும்.

ஃபேஸ் ஐடி, ஒரு புதிய அங்கீகார அமைப்பு

ஃபேஸ் ஐடி மூலம், ஐபோன் எக்ஸ்சில் authenticationல் புரட்சி செய்ததாக ஆப்பிள் கூறுகிறது, ஒரு டாட் ப்ரொஜெக்டர், அகச்சிவப்பு கேமரா மற்றும் ஒளி விளக்கு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட TrueDepth கேமரா முறையைப் பயன்படுத்துகிறது. இந்த ஆழமான-உணர்திறன் தொழில்நுட்பம்; பாதுகாப்பாக ஐபோனை திறக்க, ஆப்பிள் பே செயல்படுத்த, பாதுகாப்பான பயன்பாடுகள் அணுக மற்றும் பல புதிய அம்சங்களை வழங்குகிறது.

ஆப்பிள் ஃபேஸ் ஐடி 30,000 க்கும் மேற்பட்ட கண்ணுக்கு தெரியாத ஐஆர் புள்ளிகளை வெளிப்படுத்துகிறது. போனின் உரிமையாளர் நேரில் பார்த்து மட்டுமே கைபேசியை unlock செய்ய முடியும், அவரது புகைப்படமோ அல்லது அனிமேஷன் காட்டி திறக்க முடியாது.

image


வயர்லெஸ் சார்ஜிங்

பின்புற கண்ணாடி வடிவைப்பு வயர்லெஸ் சார்ஜிங் செய்ய உதவுகிறது. இதனுடன் இரண்டு சார்ஜிங் மேட் வழங்கப்பட்டும். இது ஆப்பிள் ஸ்டோரில் (apple.com) கிடைக்கும். 

விலை மற்றும் இருப்பு

iphone X இரு நிறங்களிலும், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வகைகளில் வெளிவர உள்ளது. இதன் விலை $999 ஆகும், வரும் அக்டோபர் 27 முதல் இதற்கு முன்பதிவு ஆரம்பம் ஆகிறது. இந்திய உட்பட 55 நாடுகளில் நவம்பர் 3-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஆப்பிள் வலைத்தளத்திலும், குறிப்பிட்ட ஆப்பிள் அங்கி காரம் பெற்ற கடைகளிலும் கிடைக்கும். 

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக