பதிப்புகளில்

மத்திய பட்ஜெட்'18: கல்வித்துறையில் கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் பலகைக்கு...

1st Feb 2018
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

மத்திய பட்ஜெட் 2018-19 அறிவிப்பின் போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கல்வித்துறையில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க அரசாங்கம் முனைகிறது என வலியுறுத்தினார்.

“கல்வியில் டிஜிட்டல் முறையை அதிகரிக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. கல்வி தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கை வகிக்கும்,” என ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பள்ளிகள் கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் பலகைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

image


இந்த ஆண்டு டிஜிட்டல் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிறந்த கல்வி தரத்தை நோக்கியே அமையும். இந்தியாவில், கல்வித் துறையை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவது வழக்கமாக இல்லை இதனால் கல்வி துறை அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. உதாரணமாக, ஸ்மார்ட் வகுப்பறை என்னும் முறை இன்னும் இந்தியாவில் கொண்டுவரப்படவில்லை. காரணம் ஆசிரியர்கள் அதற்கு ஏற்றவாறு பயிற்சி பெறவில்லை.

கடந்த பட்ஜெட்டில், கல்வி துறைக்காக மொத்த பட்ஜெட்டில் இருந்து 9.9 சதவீதம் ஒதுக்கப்பட்டது. இதில் 46,356.25 கோடி ரூபாய் பள்ளிகளுக்காகவும் மீதம் மேல் படிப்பிற்காகவும் ஒதுக்கப்பட்டது..

இந்த பட்ஜெட்டில், அருண் ஜெட்லி கல்வி துறைக்கு தாக்கல் செய்தவை:

1. கல்வியில் டிஜிட்டல் தீவிரத்தை அரசாங்கம் அதிகரிக்கும்

2. கல்வித் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு அரசு 1 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது

3. 2022 ஆம் ஆண்டுக்குள் பள்ளிகள் கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் பலகைக்கு மாற வேண்டும்

4. பழங்குடி மக்களுக்காக ஏகலவிய பாடசாலைகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

5. BEd ஆசரியர்களுக்கு தீக்‌ஷா டிஜிட்டல் பயிற்சி வழங்க அரசு கவனம் செலுத்துகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, கல்வியின் சிறந்த தரத்தில் கவனம் செலுத்துகிறது.

6. ஒரு பகுதியில் 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடி மக்கள் தொகை இருந்தால் நவோதயா வித்தியாலயாவின் கீழ் ஏகலவிய பாடசாலைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

7. மேலும் இந்த வருடம் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி என முடிவு செய்துள்ளது. 

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அரசு எவ்வாறு அமல்படுத்தப் போகிறது, எப்படி கல்வித்துறையில் பயனளிக்கப் போகிறது என்று பார்ப்போம். 

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப்

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக