பதிப்புகளில்

யுவர்ஸ்டோரி பார்வை: சென்னையைச் சேர்ந்த ‘Driverskart' 2016-இல் எப்படி செயல்பட்டது?

YS TEAM TAMIL
16th Jan 2017
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

'டிரைவர்ஸ்கார்ட்' பொதுவாகவும் குறிப்பிட்ட வகையிலும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. வாடிக்கையாளர்கள் நம்பிக்கையான ப்ரொஃபஷனல் ஓட்டுனர்களைக் கொண்டு தங்களது காரிலேயே வசதியாக பயணிக்க உதவுகிறோம். இதனால் நேரமும் உழைப்பும் மிச்சமாகும். தினசரி தேவைக்கு தனிப்பட்ட சந்தா பேக்கேஜ்கள், தேவைப்படும்போது அழைக்கும் வசதி மற்றும் வெளியூர் பயணம் போன்ற தனித்தனி வசதிகளை அளிக்கிறோம். இந்த அணுகுமுறை எங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.” என்று விவரித்தார் இந்நிறுவனத்தின் சிஇஓ வினித். மேலும், 

“சுயமாக கார்களை ஓட்டிச்செல்ல கார் வாடகை சேவை, கார்கள் மறுவிற்பனை, டீலர்களுக்கான கார் சேவை மையம், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்ஸ், வரவேற்பு போன்ற எங்களது சேவைகளால் அனைவரும் பலன்பெறலாம்.” என்றார்.
image


2016-ம் ஆண்டின் படிப்பினை ”ஒரு ஸ்டார்ட் அப் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தாலும் விடாமுயற்சியும் தொடர் முன்னேற்றமும் மிகவும் முக்கியமானது என்பதை ஆரம்ப கட்டத்திலேயே கற்றுக்கொள்வார்கள். தொடர் முன்னேற்றத்தையே எங்களுடைய நோக்கமாகக் கொண்டு ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைக்க உள்ளோம். 

”மேலும், வாடிக்கையாளர்களே உண்மையான ராஜாவாக இருந்தாலும் கையகப்படுத்தும் செலவில் (acquisition cost) கவனம் செலுத்தவேண்டும் என்பதுதான் அதிர்ஷ்டவசமாக அதிக சிக்கல்களின்றி நாங்கள் கற்றுக்கொண்ட அடுத்த மிகப்பெரிய பாடம்.”

ஆரம்பக் கட்டத்தில் பணியிலமர்த்துவதில் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடுவதே சிறந்தது என்றும் அதிகம் சார்ந்திருப்பதை தவிர்க்கலாம் என்றும் குறிப்பிட்டு சாக்‌ஷம் தன்னுடைய அனுபவங்களை நினைவுகூர்ந்தார். மற்றொருபுறம் வருவாய், சேவை தரம், அளவீடு போன்றவற்றில் பி2பி மற்றும் பி2சி-இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதும் முக்கியமாகும். ஏனெனில் இவைதான் நம்மைத் தாங்கும் தூண்களாக அமைகிறது. கோபல் கூறுகையில் “டிரைவர்ஸ்கார்ட்டின் அடித்தளம் டிரைவர் பார்ட்னர்ஸையே நம்பியுள்ளது. இவர்கள் அதிக பணத்திற்காக மட்டும் போராடுவதில்லை மரியாதைக்காவும் போராடுகிறார்கள். இதை எங்கள் மாதிரியில் இணைத்துள்ளோம்.”

2016 வரை முக்கிய மைல்கற்களை கோபல் விவரிக்கையில், “டிரைவர்ஸ்கார்ட் ஒரு மாத ட்ரிப்பை அடுத்த மாதத்துடன் ஒப்பிடுகையில் (நவம்பர் மற்றும் அக்டோபர்) 40 சதவீத அதிகரிப்பு காணப்பட்டது. மேலும் மூன்று மாதங்களாக (செப்டம்பர்-நவம்பர் மற்றும் ஜூன்-ஆகஸ்ட்) ஒப்பிடுகையில் வாடிக்கையாளர் ட்ரிப்களில் 200 சதவீத அபார அதிகரிப்பையும் சந்தித்தது. எங்களது சேவையை விரிவடையச் செய்து 15,000க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளோம். ஐந்து நகரங்களில் திட்டமிட்ட ஒரு லட்சம் ட்ரிப்களுக்கும் அதிகமாக முடித்துள்ளோம். மற்றொரு சாதனையாக இந்த வருடம் அவரவர் துறையில் சிறந்து விளங்கும் புதிய மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம்.”

சாக்‌ஷம் கூறுகையில், “முன்னேற்றத்தை நோக்கி நகரும் முயற்சியாக 2016- ல் வாடிக்கையாளர்கள் எங்களது சேவையை எளிதாகவும் விரைவாகவும் பெற சாட்பாட் (Chatbot) அறிமுகப்படுத்தியுள்ளோம். தானியங்கி சாட், செயலி (ஆண்ட்ராய்ட் மற்றும் iOS), வலைதளம், மிஸ்ட் கால் மற்றும் கால் செண்டர் போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் டிரைவர்களை புக் செய்து கொள்ளலாம். இத்துடன் எங்களது தனிப்பட்ட சந்தா பேக்கேஜ்கள் தற்போது செயலியில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப குறிப்பிட்ட வாரம்/மாதத்திற்கான ட்ரிப்களை எளிதாக திட்டமிட்டுக் கொள்ளலாம். தனிநபரல்லாத நிறுவன வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமான சேவை வழங்கும் பிரிவின் (vendor module) புக்கிங் முறையை வசதியாகவும் முற்றிலும் வெளிப்படையாகவும் அமைத்துள்ளோம்.”

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக