பதிப்புகளில்

'மாற்றம் ஒன்றே என்னை இயக்கும் சக்தி': அனு வைத்தியநாதன்

3rd Oct 2015
Add to
Shares
223
Comments
Share This
Add to
Shares
223
Comments
Share
image


அனு வைத்தியநாதன், அரை இரும்பு மனிதனுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் கால் தடம் பதித்த முதல் இந்தியர். அது மட்டுமின்றி, மூன்று வகை போட்டிகளைக் கொண்ட மூன்று நாள் தொடரில் 10 கி.மீ நீச்சல் போட்டி, 420 கி.மீ பைக் பந்தயம் மற்றும் 84.4 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று எல்லை கடந்த வெற்றி கண்ட முதல் ஆசியர். விளையாட்டு வீராங்கணை என்பதைக் கடந்து அனு, ஒரு தொழில்முனைவராக 'பேட் ன் மார்க்ஸ்' (PatNMarks) என்ற சொத்துரிமை சார்ந்த நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அப்படி என்ன சிறப்பு அவர் வாழ்வில் எனப் பார்க்கலாம் –


பிள்ளைப்பருவக் கற்றல்

என்னுடைய குழந்தைப் பருவம் மிகவும் மகிழ்ச்சிகரமானது. நான் சிறு வயதில் பெங்களூரில் இருந்ததே என்னுடைய மிகச்சிறந்த நேரம் என்று சொல்வேன். ஏனெனில் அங்கு நிறைய சூப்பர் மால்கள் கிடையாது, மரங்கள் சூழ்ந்த அந்த இடம் இப்போதும் அங்கே பசுமையாக காட்சி தருகிறது. சாலைகள் மிகவும் பாதுகாப்பானவை, நாங்கள் பைக் கூட ஓட்டுவோம், அந்த அளவு அந்த சாலைகள் பாதுகாப்பு நிறைந்தவை. 1முதல் 10 வயது வரையிலான என்னுடைய குழந்தைப் பருவத்துக்கு நான் ரேட்டிங்கில் 15 மதிப்பெண் கொடுப்பேன்!

என்னுடைய மழலைப் பருவத் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்தேன், என் தாயார் மிகப்பெரிய பொறுப்பில் இருந்ததால் என்னுடைய அத்தையின் பராமரிப்பில் நான் வளர்ந்தேன். இயற்கையுடன் எனக்கு இன்று நேற்றைய தொடர்பு இல்லை, ஏனெனில் அது ஒரு நீண்ட கால பந்தம் என்றே நான் கருதுகிறேன்.

என்னுடைய வாழ்வில் குழந்தைப் பருவம் முதல் இன்று வரை தொடங்கும் ஒரு விஷயம் நாடோடித் தனமான வாழ்க்கை என்று கூறலாம். எனக்கு 5 வயது இருக்கும் போது ஏறத்தாழ 4 அல்லது 5 நகரங்களில் மாறி மாறி வசித்தோம். என்னுடைய தாயார் மகளிர்க்கான ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்தத் தலைமுறையினர் தொழிலில் எந்த அளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை அவர் அறிய நினைத்தார். அவர்கள் நம்மைப்போல் அல்ல, தற்போது நமக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் எல்லா விஷயத்திலும் ஒத்துப் போகாவிட்டாலும், பணி நிமித்தமாக நாம் சமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதை நம் கணவர் மற்றும் புகுந்த வீட்டார் புரிந்து கொள்ளும் அளவு முன்னேற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெவ்வேறு இடங்களுக்குச் சென்று பல தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கைக் கதையை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை ஒரு சேரப் பார்க்கும் போது அவை எனக்கு ஒரு வித அனுபவத்தை அளித்தன. இம்மாதிரியான அனுபவங்களை நீங்கள் உள்வாங்குவதன் மூலம் உங்களின் எண்ணம் மற்றும் செயல்களில் பெரும்பாலான தவறுகளை தவிர்க்க முடியும் என்பதே என்னுடைய கருத்து.

விளையாட்டும் தொழில்முனைவும்

வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை ஏற்படுத்தும் வகையில், சிறந்த முறையில் நல்ல விதமாக என்னுடைய நிறுவனத்தை நடத்துவதையே நான் விரும்புகிறேன். நாங்கள் ஒரு சிறிய குழு. பல கோடி டாலர் மதிப்புள்ள தொழிலை நாங்கள் செய்யவில்லை, அது எங்களுடைய நோக்கமும் இல்லை. என்னுடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இரண்டாவது விஷயம் விளையாட்டு. என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய அங்கம் என்று நான் சொல்வேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பணி செய்த போது அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. குழந்தைகளின் சிந்தனைகளை புரிந்து கொள்வதே புதுமையாக இருந்தது. விளையாட்டோ, தொழிலோ அல்லது ஆசிரியர் பணியோ எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இல்லாமல் காலத்திற்கேற்ப வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். மாற்றம் ஒன்றே என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

பள்ளியில் தொடர் உடற்பயிற்சி மற்றும் அணிவகுப்புகள் இருந்தது, ஆனால் எனக்கு பைக் ஓட்டுவதே பிடித்தமானதாக இருந்தது. எதையும் எளிதில் மறக்கக்கூடியவராக இருந்தால் மட்டுமே விளையாட்டு வீராங்கணையாக முடியும் என்பதை நான் உணர்ந்தேன். விளையாட்டு, நிறைவேற்ற முடிந்த சாகசப் பயணமே என்று எனக்குத் தோன்றியது. அதே சமயம் பெண்கள் இந்த உலகில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று நான் ஒன்றும் படம் வரைந்து காட்டப்போவதில்லை என நினைத்தேன். ஏனெனில் நாம் அவ்வாறு இல்லை, அன்றாட வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது, இந்த உலகில் கடினமாக உழைக்கும் இனத்தில் பெண்களும் ஒருவர், வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதாரத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலையிலேயே இருந்தாலும் பெண்கள் அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருந்து விடவில்லை.

விளையாட்டு என் வாழ்வின் நீண்ட பயணத்தின் பங்களிப்பு, என்னைப் பற்றிய பலவற்றை மீண்டும் மீண்டும் எனக்கு அது கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் என்னால் முடிந்தவற்றை தொடர்ச்சியாக செய்து வருகிறேன், விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காரணமே எனக்குக் கிடைக்கவில்லை.

என் வாழ்வின் மிகப்பெரிய உச்சம்

என்னுடைய மிகப்பெரிய உச்சமாக நான் நினைப்பது என் வாழ்க்கைத் துணையை சந்தித்தது தான். நானாக நான் இருக்க ஊக்கப்படுத்தும் சரியான மனிதர் அவர் தான் என்று எனக்குத் தோன்றியது. ஒரு மனைவியின் தரம் குறித்து என்னிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிக்கோள் கொண்ட பெண்களின் கடினமான பாதை சரியானதாக இல்லை என்று கருதுகிறேன். அந்த பாதையில் ஆண்கள் பயணிக்க விரும்புவதில்லை. அவர்கள் பாதுகாப்பான வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் என்னுடைய வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்து ஏதாவது ஒரு பணியை முடித்து செல்லும் போது, அவர்களை சந்தையில் மற்றவர்களை விட தனித்துவப்படுத்திக் காட்டுவது மற்றொரு உச்சம்.

என்னுடைய பெற்றோரைப் பார்த்தால் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு பிடித்ததை செய்வேன். உதாரணமாக, நான் என் தாயாருடன் தோட்டப்பணிகளைச் செய்வேன். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என் தந்தையடன் ஒரு நீண்ட நடைபயணம் செல்வேன். இது மாதிரி சிறு விஷயங்கள் என்னுடைய உச்சம் பற்றி விவரிக்க போதுமானது என நான் நினைக்கிறேன்.


கால மேலாண்மை

நான் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது, அந்த 6 மாதம் முழுவதும் என்னுடைய கவனம் அதில் மட்டுமே இருக்கும். அந்த நேரத்தில் நான் வேறு எது பற்றியும் யோசிக்க மாட்டேன். அடுத்த ஆறு மாதங்கள் வழக்கம் போல பணி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலத் திட்டப்பணிகளை அமைத்துக் கொடுப்பது என செல்லும். அப்போது பலரை சந்திக்க வேண்டி வரும், எதற்கு எவ்வாறு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சரியாக வகுத்துக் கொள்ள வேண்டும். குடும்பம், குழந்தைகள் என்று பார்க்கும் போது உங்களுடைய பங்கு என்ன என்று எழும் கேள்வியை தவிர்க்க முடியாது. வாழ்வில் எந்த மாயாஜாலமும் தானாக நிகழ்ந்து விடாது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்த விளிம்பிற்குத் தாவினால் கீழே விழ வேண்டி வரும். உங்களால் பணி பாதுகாப்புத் தர முடியாது. அனைத்தும் உங்களைத் தேடி வர வேண்டும் என்று நினைத்தால் அப்படி நடப்பது மிகவும் அரிது. பெண்ணாக இருப்பது மகிழ்ச்சியானது அதே சமயம் சவாலானதும் கூட, நான் பல் நிலையாளராக இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

காலத்தை நான் கடுமையான வரையறைகளைக் கொண்டு நிர்வகிக்கிறேன். இது விளையாட்டு அல்ல என்னை கவுரவப்படுத்துவதற்கு, இது ஒழுக்கம் என்று நான் எப்போதும் சொல்வேன். இந்த பாகுபாடுகளை உங்களுடைய மூளையில் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் எனக்கு நிலைமையை சமாளிக்கத் தெரியாது, பயந்து விடுவேன், ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன். என்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப நல்ல முறையில் செயல்படுவேன்.

ஒழுக்கத்தை விதையுங்கள்

ஒழுக்கத்தை பொருத்தமட்டில் அது ஒரு தொன்று தொட்ட பழக்கம், ஒரே நாள் இரவில் அதை நீங்கள் கொண்டுவந்துவிட முடியாது, அது எளிமையான தோட்ட வேலையாக இருந்தாலும், நீங்கள் தினந்தோறும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும், அவற்றை அப்படியே விட்டால் காய்ந்து விடும்.

ஒழுக்கம் என்பது மிகச்சிறிய வயது முதலே வருவது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது, மேசையை சுத்தமாக வைத்துக் கொள்வது என சிறு விஷயங்களும் இதில் அடங்கும். 21 வருடமாக உங்களை வளர்த்த பெற்றோருக்கு வீட்டு வாடகைத் தந்து உதவலாம், அல்லது அவர்கள் திருப்திபடும்படியான வேறு எதையாவது செய்யலாம். அதற்காக உங்களுக்குத் தோன்றிய அனைத்தையும் செய்ய வேண்டியதில்லை. என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள், அவர்களாக சொல்லாமல் நான் எதையும் செய்ய முடியாது. அவர்கள் என்னை அதிகாரம் செய்யவில்லை, பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் எப்போதும் என்னிடம் கூறுவார்கள். 'இரண்டு-மூன்று விஷயங்களை செய்தால் வாழ்வு சிறப்பாகிவிடும், இதை நீ உணர்ந்துகொள்வாய் என்று அவர்கள் சொன்னார்கள்'. அவர்கள் என்னை வயதில் மூத்தவராகத்தான் நடத்தினார்கள். அதேபோல், என்னை எப்போதும் தாழ்வாகக் கருதியதில்லை. தேர்வுகளில் 85% மேலாக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நிர்பந்தித்ததில்லை.

அறிவுரை

வியாபாரத்தில் உண்மையாக இருங்கள் என்றே நான் சொல்வேன். அது 100 கோடி முதலீட்டில் தொடங்குவது மட்டுமல்ல, எந்த விதத்தில் ஒரு தொழிலை தொடங்கி அதை முன் எடுத்து செல்கிறோம் என்பதைப் பொருத்தது. தொழில் என்பது எதற்காக, உங்களுடைய வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக. அதையே உற்சாகமாகவும், மதிப்பை ஏற்படுத்தும் விதமாக உங்களால் செய்ய முடிந்தால் அதுவே போதும். மற்றவர்களோடு ஒப்பிட்டு எப்போதும் உங்களை நீங்களே தரக்குறைவாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எல்லைக்குள் உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் கடந்த 20 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் ஏராளமான சிறு தொழில்முனைவோரை பார்த்துள்ளேன். நீங்கள் அவர்களுடைய அலுவலகத்திற்கு சென்ற உடனே உங்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து வரவேற்பார்கள். இது மாதிரியான மரபுகள் மறைந்து வருவதை நான் காண்கிறேன்.

உண்மையாக இருங்கள், நீதிநெறியோடு இருங்கள், நிலையான மதிப்பு கிடைக்கக் கடுமையாக உழையுங்கள், புகழ்ச்சியைக் கண்டு எப்போதும் மயங்காதிருங்கள் என்பதே என்னுடைய அறிவுரை.

Add to
Shares
223
Comments
Share This
Add to
Shares
223
Comments
Share
Report an issue
Authors

Related Tags