சிறுநீர், வியர்வை கொண்டு கொரோனா வைரஸை கண்டறியும் நாய்கள்!

By YS TEAM TAMIL|15th Feb 2021
வைரஸை எளிதில் கண்டறியும் புதிய முயற்சியில் இந்திய ராணுவம்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நாடு முழுவதும் கொரோனா வைரஸை கண்டறியும் சோதனைகள் அதிகரித்து வரும் நிலையில், மோப்ப நாய்களை கொண்டு வைரஸை எளிதில் கண்டறியும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய ராணுவம்.


இந்தியாவில் பிசிஆர் கருவிகளைக் கொண்டு கொரோனா தொற்று பரிசோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கு நொடிப்பொழுதில் கொரோனாவை கண்டறியும் வகையிலான மோப்ப சக்தி பயிற்சியை இந்திய ராணுவம் வழங்கி வருகிறது.

"நாங்கள் இதுவரை பரிசோதித்த மாதிரிகளின் தரவுகளின் அடிப்படையில், ஸ்னிஃபர் நாய்களில் நோயைக் கண்டறியும் திறன் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதை நாம் ஊகிக்க முடிகிறது," என்று இந்திய ராணுவத்தின் கால்நடை அலுவலர் லெப்டினன்ட் கேர் சுரிந்தர் சைனி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு தெரிவித்துள்ளார்.

நோயாளியின் வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளை வைத்து கொரோனாவை அடையாளம் காண்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 7 நாய்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு உலக நாடுகள் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நாய்களை பயன்படுத்தி கொரோனாவைக் கண்டறிந்து வருகின்றன. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் கொரோனாவைக் கண்டறிய ராணுவத்தில் உள்ள நாய்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.


வட இந்தியாவில் இருந்து உச்சபட்ச எல்லைப் பாதுகாப்பு பகுதிகளுக்கும், ராணுவத்தினர் செல்லும் முகாம் ஒன்றுக்கு 8 நாய்கள் பயிற்சிகாக அனுப்பி வைக்கப்பட்டன. நாய்கள் இதில் தேர்ச்சி பெற்று விரைவாக களத்தில் இறக்கப்பட்டால், கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் வேகம் அதிகரிக்கும். கிராமபுறங்களுக்கு சென்று கொரோனா நோயாளிகளை கண்டறியும் சூழலும் குறையும் எனக் கூறப்படுகிறது.


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் சாம்பிகள், இந்த நாய்களுக்கு முன்பாக வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல நெகடிவ் வந்த சாம்பிகள்களும் நாய்களுக்கு முன்னாள் வைக்கப்படுகிறது. இதில் நெகட்டிவ் சாம்பிள்களை மோப்பம் பிடித்ததும் அங்கிருந்து நாய்கள் கடந்து சென்றுவிடுகின்றன.

army
பாஸிடிவ் இருக்கும் இடத்தில் நொடிப்பொழுதில் அடையாளம் கண்டுவிடுகின்றன. இந்த நாய்கள் மக்கள் நேரடியாக பரிசோதனைக்கு உட்படுத்தும் இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன. டெல்லி மற்றும் சண்டிகர் முகாம்களில் வைக்கப்பட்ட 3806 கோவிட் பரிசோதனைகளில் 22 கொரோனா பாசிடிவை ஜெயா மற்றும் காஸ்பர் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளன.

வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது தொற்று கிருமிகளைக் கொண்ட திசுகளை அடையாளம் காணும் பயிற்சியில், இந்தியாவில் நாய்களை பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

"மருத்துவக் கண்டறிதல் நாய்கள் மேற்கத்திய நாடுகளில் முழுமையாக பயன்பாட்டில் உள்ளன. மனித உடலில் இருக்கும் வைரஸை கண்டறிய இந்தியாவில் நாயை நாங்கள் பயன்படுத்தியது இதுவே முதல் முறை," என்று சுரிந்தர் சைனி தெரிவித்தார்.

இந்த நாய்களால் விரைவில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக அடையாளம் காண முடிகிறது என்பது அறிந்ததும், அதிகமான நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


"மீரட்டில் உள்ள ரிமவுண்ட் வெடினரி கார்ப்ஸ் (Remount Veterinary Corps) (ஆர்.வி.சி) கல்லூரி மற்றும் மையத்தில் மேலும் எட்டு நாய்கள் பயிற்சி பெறுகின்றன. அவை மார்ச் மாதத்திற்குள் பயன்படுத்த தயாராக உள்ளன," என்று லெப்டினன்ட் கேணல் சைனி கூறினார்.


தகவல்: Think Change India