பதிப்புகளில்

பைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்... அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே!

Mahmoodha Nowshin
7th May 2018
Add to
Shares
26
Comments
Share This
Add to
Shares
26
Comments
Share

இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பைக் மற்றும் வகை வகையான உணவின் மீது கொள்ள பிரியம் உண்டு. ஒரு சிலருக்கு இதன் மீது மோகம் என்று கூட சொல்லலாம், தனக்கு பிடித்த இந்த இரண்டையும் வைத்தே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சென்னையைச் சேர்ந்த கிஷோர் சுப்பிரமணியன்.

கிஷோர் சுப்பிரமணியன்.

கிஷோர் சுப்பிரமணியன்.


பைக்ஸ் & பர்கர்ஸ் (Bikes & Burgers) உணவகத்தின் நிறுவனர் கிஷோர். நாமக்கலில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டபடிப்பை 2011ல் முடித்தார். அதன் பின் தனது எம்எஸ் படிப்பை லண்டன் சென்று 2015ல் முடித்துள்ளார். என்னதான் இவர் படித்தது விமானம் மற்றும் விண்வெளி சம்பந்தமான படிப்பாக இருந்தாலும் கூட இவரது ஆர்வம் சுய தொழில் மீது தான் இருந்தது.

“நான் கல்லூரி படிக்கும்பொழுதே சூப்பர்ஸ்டார் பீட்சா, ஹான்டட் போன்று ஒரு தீம் உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அதிலும் எனக்கு பைக் மீது இருந்த பேர் ஆர்வத்தால் அதையே என் உணவகத்தின் தீமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்,” என்கிறார் கிஷோர்.

கல்லூரி படிக்கும் பொழுதே தனது இலக்கை முடிவு செய்த கிஷோர், ஒரு நிறுவனத்தை நடத்த சிறந்த நிர்வாக அனுபவம் வேண்டும் என்பதை உணர்ந்தார். அதனால் இரண்டு வருடம் ஒரு பெரும் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்தார். அதன் மூலம் மேலாண்மை மற்றும் நிர்வாக அனுபவத்தை பெற்று இவர் டிசம்பர் 2017ல் பணியில் இருந்து விலகினார்.

image


“புத்தாண்டின் தீர்மானமாக எனது கனவு தொழிலை எப்பாடுபட்டாவது இந்த வருடம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் முதலீடு செய்ய போதிய பணம் இல்லை...”

தனது சேமிப்பில் ஒரு தொகையை கிஷோர் வைத்திருந்தாலும் உணவகத்தை தொடங்க அது போதுமானதாக இல்லை. இதனால் தன் சிந்தனையுடன் ஒத்துப்போகும் துணை நிருவனர்களை தேடி பிடித்தார். தன்னை விட 25 வருடம் விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதலில் அனுபவம் பெற்ற நண்பர்கள் செந்தில் மற்றும் சுரேஷ் தன்னுடன் இணைந்ததாக தெரிவிக்கிறார் கிஷோர். இவர்களது அனுபவம், கிஷோரின் யோசனை மற்றும் இவர்களது சேமிப்பு சுமார் 10 லட்சம் சேர்த்து பைக்ஸ் & பர்கர்சை நிறுவினர்.

சுரேஷ், கிஷோர்  மற்றும் செந்தில்

சுரேஷ், கிஷோர் மற்றும் செந்தில்


வெறும் தீம் உணவகமாக மட்டும் வைத்தால் வித்தியாசம் எதுவும் இருக்காது என்று தங்கள் உணவகத்தை இரண்டாக பிரித்தனர். ஒரு பாதி உணவுச் சேவை மற்றொன்று வாகன சேவை என்று இரண்டாக பிரித்துள்ளனர். அமெரிக்கன்/இத்தாலிய உணவுகளை ஒரு பக்கம் வழங்க, புதிய பைக் விற்பனை, வாகன சேவை, பைக் ஆபரணங்கள் மற்றும் பாகங்கள் மற்றொரு பக்கம் வழங்கி வருகின்றனர். இது இரண்டும் ஓர் இடத்தில் இயக்குவதே இவர்களது தனிப்பட்ட விற்பனை புள்ளியாக அமைகிறது.

உணவகம் போலவே வாகன சேவையிலும் போட்டிகள் அதிகம். தாங்கள் எடுத்துள்ள இந்த இரண்டிலும் மெதுவாக நகர்ந்து முன்னேறி வருகின்றனர். நிறுவனத்தை துவங்கி நான்கு மாதம் ஆன நிலையில் தங்களது ப்ரேக் ஈவன் புள்ளியை தொட்டுவிட்டனர் இந்த நிறுவனர்கள். இதற்கு முக்கியக் காரணம் உணவகம் மற்றும் வாகனம் சேவை இரண்டிலும் முழுமையாக புதுமைகளை சேர்த்துள்ளது தான். ஆனால் இந்த இடத்தை அடைவது சுலபமாக இல்லை என்கிறார் கிஷோர்.

“நாங்கள் கையில் எடுத்துள்ள இரண்டு சேவைகளுக்கும் ஒப்புதல் பெறுவது சற்று சவாலாக இருந்தது. மேலும் இதற்கான சரியான இடம் மற்றும் மனித வளத்தை பெறுவது, ஆனால் இதை தாண்டி பெரியதாய் எந்த சிக்கல்களையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை ” என்கிறார்.

தற்பொழுது 7 பேர் கொண்ட சிறு குழுவாக இயங்கி வருகிறது பைக்ஸ் & பர்க்ர்ஸ். இதற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கூடிய விரைவில் சென்னையில் இன்னும் இரண்டு இடங்களில் தங்கள் கிளையை விரிவுப் படுத்த உள்ளனர். இதற்கான முதலீட்டாளர்களையும் அணுகி வருகின்றனர்.  

Add to
Shares
26
Comments
Share This
Add to
Shares
26
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக