பதிப்புகளில்

சென்னை தரமணியில் ரூ.20 கோடியில் 'உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம்'- தமிழக முதல்வர் அறிவிப்பு!

YS TEAM TAMIL
1st Sep 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் தொழில் வளர்ச்சி தொடர்பான சில அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா முக்கிய அறிவிப்பாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உயிரி தொழில்நுட்ப துறையில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், 'உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம்’ 'Biotechnology Incubation Center’, 20 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் உள்ள டைசல் பயோபார்க் நிறுவனத்தில் நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் மற்றும் தனி நபர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை திட்டமிட்டு, உருவாக்கி, செயல்படுத்த வழிவகை செய்யப்படும். இந்த மையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஆய்வகங்கள், வணிகப் பகுதிகள், மற்றும் அலுவலக பகுதிகள் என்று சுமார் 12000 சதுர அடியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரம்பதூர் சிப்காட் வல்லம்-வடகால் தொழில் பூங்காவில், 245 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள 'வானூர்தி பூங்காவில் ‘Aerospace Park’, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 30 கோடி ரூபாய் மதிப்பில், அடிப்படை கட்டமைப்பு வாதிகள், உலகத்தரத்தில் அமைக்கப்படும். மேலும், இங்கு தொழில்களுக்கான பொது ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படும் வகையில், தொழில் பூங்காங்களை ஆங்காங்கே அரசு ஏற்படுத்தி வருகிறது. அதற்கு தொழில் பூங்காங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில், சுமார் 2300 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் 'சிப்காட் செய்யாறு தொழில்' வளாகத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் முதல் கட்டமாக 1300 ஏக்கர் நிலத்தில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்சாலைகள், தண்ணீர் வழங்க ஏற்பாடுகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள், தெரு விளக்குகள், மற்றும் இதர வசதிகள் உலகத்தரத்தில் அமைக்கப்படும் என்றும் இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்', 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2,42,160 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதுவரை 64 நிறுவனங்கள் 87,062 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க பணிகள் துவங்கிவிட்டன. அவை இதுவரை, 25,020 கோடியே 48 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளன என்று பேரவையில் முதல்வர் தெரிவித்தார். 

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக