பதிப்புகளில்

சூப்பர்மேனுக்கும் கனவு நிறைவேற ஒரு முழு நேர வேலை தேவை!

உங்கள் தொழில்முனைவு கனவை முயற்சிக்கும் அதே நேரத்தில் முழுநேர வேலையை தொடர்வதில் கண்ணுக்குத் தெரியாத அணுகூலன்கள் இருக்கின்றன. 

13th Nov 2018
Add to
Shares
156
Comments
Share This
Add to
Shares
156
Comments
Share

தொழில்முனைவு உலகில் உலா வரும் தவறான ஆலோசனைகளில் ஒன்று, எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யுங்கள் என்பதாகும். இந்த அணுகுமுறையால் வெற்றி பெற்றவர்களை விட பாதிக்கப்பட்டவர்களே அதிகம். ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் சார்பு நிலை, தோல்வி அடைந்தவர்களை மறக்க வைத்துவிடுகிறது.

image


மேலுமொரு வெற்றிக்கதைகளின் பளபளப்பு, தொழில்முனைவோர்கள் கொண்டிருந்த சுய சந்தேகங்கள், அவர்கள் பெற்றிருந்த தொழில் மாற்று வாய்ப்புகள், ரிஸ்க் குறைந்த அணுகுமுறையே கைகொடுத்தது போன்ற விவரங்களை மங்கச்செய்து விடுகிறது.

தொழில்முனைவு ஆர்வம் கொண்டவர்கள் நிதர்சனத்தை எதிர்கொள்ள அல்லது அதைப்பற்றி படிக்கக் கூட விரும்பாததால், இந்த தலைப்புகள் ஈர்ப்பதில்லை.

வார்ட்டனின் ஆடம் கிராண்ட் தனது புத்தகமான ஒரிஜினல்ஸ் –ல் விவாதிப்பது போல மற்றும் அதற்கு முன்னர், கெவின் ஆஷ்டன், தனது ஹவ் டு பிளை ஏ ஹார்ஸ் புத்தகத்தில் விவரிப்பது போல, பெரும்பாலான தொழில்முனைவோர், மெதுவாக செயல்படுபவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், மற்றும் சுய சந்தேகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். புதிய வர்த்தகத்தை முயற்சித்துக்கொண்டிருந்த போது, அவர்கள் முழு நேர வேலையை இறுக பற்றிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான சந்தேகங்கள் விலகும் வரை தங்கள் எண்ணத்தை செயல்படுத்த துவங்கவில்லை.

ஸ்டீவ் வாஸ்னியாக், எச்பி நிறுவனத்தில் பொறியாளராக இருந்த படி ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கினார். ஜெப் பெசோஸ், டி.இ ஷா நிறுவனத்தில் இருந்த போது கோடிங் பணியை துவக்கினார். இந்த வெற்றிகரமான தொழில்முனைவோர் முழு நேர வேலையை உடனே விடாமல் தொடர்ந்தது ஏன்?

இதற்கான பதில், தொழில்முனைவை மேற்கொள்வது பற்றி உங்களுக்கு புதிய புரிதலை அளிக்க கூடும்.

தொழில்முனைவு லட்சியத்தை முயற்சிக்கும் அதே நேரத்தில் முழு நேர வேலையை தொடர் மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலில், உங்கள் உள்ளொளி மற்றும் எண்ணங்களுக்கான ஊற்றான தற்போதைய வேலை உங்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என்பதால், தேவையில்லாமல் கைவிட வேண்டாம்.
இரண்டாவதாக, மாதச் செலவுகளை சமாளிப்பதற்கான வேலை இல்லாதது, வேறு வழியில்லாத சூழலில் தவறான முடிவுகளுக்கு வித்திடலாம்.
இறுதியாக, உங்கள் வேலை காரணமாக உண்டாகியுள்ள தற்போதைய தொழில்நுட்ப வலைப்பின்னல் உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதற்கான கண்ணுக்குத்தெரியாத சாதகங்களை அளிக்கலாம். வெளியே இருந்தால் இது கடினமாக இருக்கும்.

இவற்றை விரிவாக பார்க்கலாம்.

ஐடியாக்களின் ஊற்று

உங்களுக்கு வர்த்தகத்திற்கு ஏற்ற எண்ணம் எங்கிருந்து வந்தது? பெரும்பாலும் இது உங்கள் வேலையில் இருந்து, உங்கள் சகாக்கள், வாடிக்கையாளர்கள், நீங்கள் தீர்வு காணும் பிரச்சனைகள், உங்களுக்கான தொடர்புகள் மூலம் கிடைத்திருக்கக் கூடிய எண்ணங்களில் இருந்து தான் இது வந்திருக்க வேண்டும். இது திடிரென பளிச் என்று உதயமாகி இருக்காமல், மெல்ல உருவாகியிருக்கும் என்பதால் ஐடியா தோன்றிய யுரேகா கணத்தை சுட்டிக்காட்ட முடியாமல் இருக்கலாம். உங்கள் வேலை எத்தனை அலுப்பூட்டும் வகையில் இருந்தாலும், உங்களை அறியாமல் நீங்கள் பல எண்ணங்களை பெறும் நிலை உள்ளது. பல குறிப்பிட்டு சொல்ல முடியாதவை என்றாலும் மதிப்பு மிக்கவை.

நீங்கள் வெளியேறி, தொப்புள் கொடியை கத்திரிக்க தீர்மானிதத்துமே, உங்கள் ஐடியாக்களுக்கான களமும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

நீக்கள் ஒரு பாதையில் செயல்படும் போது அது வெற்றி தரலாம் அல்லது தோல்வியை அளிக்கலாம். ஆனால் புதிய ஐடியாக்கள் மற்றும் அதற்கான மதிப்பீடு பாதிக்கப்படும்.

மாறாக, இன்னும் கொஞ்சம் முயற்சித்து, வேலை பார்த்தபடி தொழில்முனைவிலும் ஈடுபட்டால், உங்களுக்கு நன்மையே உண்டாகும். உங்கள் ஐடியாக்கள், மற்றும் அவற்றுக்கான மதிப்பீடு தொடரும். நிச்சயமற்ற அம்சங்களை குறைத்துவிட்டதாக தோன்றும் போது, நீங்கள் வேலையை விடலாம்.

விரக்தியின் பாதிப்பு

உங்கள் செயல்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாததை விட மோசமானது வேறில்லை. ஒரு ஊழியராக உங்கள் மேலதிகாரி அல்லது வாடிக்கையாளரிடம் உங்கள் அதிகாரத்தை இழப்பதாக நீங்கள் நினைக்கலாம். தொழில்முனைவும் இதற்கு வேறுபட்டது அல்ல. இங்கும் உங்களுக்கு எஜமானர்கள் உண்டு. முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தான் முதலில் உங்கள் எஜமானர்கள். ஆனால் வேலையில் இருந்து விலகியவுடன் நீங்கள் அதிக அழுதத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டீர்கள். முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த உங்கள் நேரம் மற்றும் ஆற்றல் கைவசம் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும், உண்மையில் சாதரண விஷயங்கள் கூட இப்போது பிரச்சனையாகலாம்.

இதோடு, உங்கள் குடும்பத்தை பராமரிப்பது, வாழ்வியல் தரத்தை தக்க வைப்பது, உலகிற்கு உணர்த்த விரும்புவது போன்றவற்றால் நீங்கள் கற்றுக்கொள்வதை விட்டு விட்டு தவறான முடிவுகளையும் தரமில்லாத ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவீர்கள். நீங்கள் மாதத்தவணையை செலுத்தியாக வேண்டுமே! என்ன ஆகும் தெரியுமா? முன்பை விட நிலைமை மோசமாகும்.

இதற்கு மாறாக, தொழில்முனைவோராக முடியுமா என்று முயற்சித்து பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்.

முழு நேர வேலை இல்லாமல் கிடைக்கக் கூடிய நேரம் மற்றும் ஆற்றல் என்பது ஒரு மாயை தான். ஒழுக்கம் மற்றும் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சுருக்கமாக சொல்வது என்றால், உங்கள் தொழில்முனைவிற்கான விலையை குடும்பம் கொடுக்க வைத்து விடாதீர்கள்.

தொழில்முனைவு வலைப்பின்னல்

ஒரு நல்ல ஐடியா துவக்கம் தான். ஐடியாக்களை வர்த்தகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், ஐடியாக்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறிந்துள்ளனர். ஏனெனில் ஒருவர் மிகவும் இறுக்கமாக இருக்க முடியாது. தனியேவும் எதையும் செய்துவிட முடியாது.

இங்கு தான் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் உதவுகின்றன. எல்லாவற்றையும் நீங்களே செய்ய முடியும் என நீங்கள் நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.

உங்கள் தொடர்புகள், ஐடியாக்களை பரிசீலித்து அவற்றை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களை அறிய உதவலாம்.
திறமை, மூலதனம் மற்றும் ஐடியா தான் தொழிலில் வெற்றியை தேடித்தருகின்றன. வளங்களை தேட இவை உங்களுக்கு உதவும்.

ஒருவர் முழுநேர வேலையை சமாளித்த படி, தங்கள் தனிப்பட்ட கனவுகளுக்கும் நியாயம் செய்ய வேண்டும். சந்தேகங்கள் தீர்ந்த பிறகு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம்.

(பொறுப்பு துறப்பு : இந்த கட்டுரையில் சொல்லப்படும் கருத்துகள் மற்றும் பார்வையில் கட்டுரை ஆசிரியருடையவ, யுவர்ஸ்டோரி கருத்தை பிரதிபலிக்காது.).)

ஆங்கில கட்டுரையாளர்: பவண் சோனி | தமிழில்: சைபர்சிம்மன்

Add to
Shares
156
Comments
Share This
Add to
Shares
156
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக