பதிப்புகளில்

மளிகைத் துறையில் ஆன்லைன் மூலம் புரட்சி ஏற்படுத்திய ’பிக்பாஸ்கெட்’ பிரபலமானது எப்படி?

YS TEAM TAMIL
5th Oct 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 9 வது பதிப்பில், பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் மேலதிகாரிகள் முதல் முறையாக மேடையில் ஒன்றாக தோன்றி, மிகப்பெரிய இணைய மளிகைக் கடையை உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

பிக்பாஸ்கெட் நிறுவனர்கள், ஹரி மேனன், வி.எஸ்.சுதாகர், விபுல் பரேக், அபினய் சவுத்ரி, ஆகியோர் நிறுவன மனிதவள தலைவர் டி,என்.ஹரியுடன் பேசுகின்றனர்.

பிக்பாஸ்கெட் நிறுவனர்கள், ஹரி மேனன், வி.எஸ்.சுதாகர், விபுல் பரேக், அபினய் சவுத்ரி, ஆகியோர் நிறுவன மனிதவள தலைவர் டி,என்.ஹரியுடன் பேசுகின்றனர்.


அரிதாகவே மீடியா முன் தோன்றும் பிக்பாஸ்கெட் நிறுவனர்கள், ’தி பிக்பாஸ்கெட் பயணம்’ எனும் குழு விவாதத்திற்காக, இளம் தொழில்முனைவோர்கள் நிறைந்த அரங்கில் ஒன்றாக தோன்றியது நல்ல விருந்தாகவே அமைந்தது.

இவர்களைப்பொறுத்தவரை, மளிகை மற்றும் இ-காமர்ஸ் சந்தையில் இது இரண்டாவது முயற்சியாகும். 1999ல், ஹரி மேனன், வி.எஸ்.சுதாகர், அபினய் சவுத்ரி மற்றும் விபுல் பரேக் இணைந்து ஃபேப்மார்ட்டை துவக்கினர். பத்தாண்டுகளுக்கு முன் இது இணைய சந்தையில் இருந்து, பெளதீக மளிகை வர்த்தகமாக மாறியது.

டெக் ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள், அமர்வில், பிக்பாஸ்கெட் மனிதவள பிரிவு தலைவர் டி.என்.ஹரி தலைமை வகித்த விவாதத்தில், ஹரி மேனன்” 1999 ல் ஃபேப்மார்ட்டை துவக்க உதவிய சிட்டி பேங்கிற்கு நன்றி என தெரிவித்தார்.

2011ல், இந்த நால்வரும் இணைந்து இணைய மளிகை வர்த்தகமான பிக்பாஸ்கெட்டை துவக்கினர். நுகர்வோர் பிரிவில் (எப்.எம்.சி,ஜி) இ-காமர்ஸ் சரியாக வராது எனும் எண்ணத்தை தகர்த்தது. குறைந்த பட்ச தள்ளுபடி மற்றும் வலுவான வர்த்தக மாதிரியுடன் நிறுவனம் மெல்ல வளர்ந்திருக்கிறது.

இன்று நிறுவனம், சூரத், மைசூர் மற்றும் கோவை உள்ளிட்ட 25 நகரங்களில் செயல்படுகிறது. இப்போதைக்கு மேலும் விரிவாக்கம் செய்யும் எண்ணம் இல்லை என்கிறார் ஹரி. 

இந்த 25 நகரங்களில் இருந்து தற்போது வரும் மாத விற்பனையான ரூ.200 கோடியில் இருந்து 2019 மார்ச்சில் ரூ.500 கோடியை எட்டும் என்கிறார் அவர்.

நிதி சிக்கல்

பிக்பாஸ்கெட் 2011 ல் துவங்கிய போது, அப்போது அதிகபட்ச முதல் சுற்று நிதியான ரூ.10 மில்லியன் டாலரை திரட்டிய வெகு சில ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக இருந்தது.

பிப்ரவரியில், பிக் பாஸ்கெட் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் சாண்ட்ஸ் கேபிடல், இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன், அப்ராஜ் குரூப்பிடம் இருந்து பி சுற்று நிதியாக 300 மில்லியன் டாலர் திரட்டியது. இந்த சுற்றில் அலிபாபா முன்னிலை வகித்ததால், அது மிகப்பெரிய ஒற்றை முதலீட்டாளராக ஆனது. வர்த்தக சிக்கல்களை புரிந்து கொண்ட மையக் குழு இருந்ததால் முதலீட்டாளர்களுக்கு எல்லாம் எளிதாக இருந்தது. எனினும் நிதி பெறுதல் மூலம் முக்கிய பாடங்களை கற்றுக்கொண்டதாக நிறுவனர்கள் கூறுகின்றனர்.

“வளர்ச்சிக்கு நிதி அளவு முக்கியம். சந்தையில் பணம் இருக்கும் போது, நாம் அதை திரட்ட முயற்சிக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன். பணத்தை பார்த்து செலவிட வேண்டும் என்றாலும் வளர்ச்சி சார்ந்த துறையில் இருந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதி திரட்ட வேண்டும்,” என்கிறார் சுதாகர்.

அடிப்படை மதிப்புகள்

நீங்கள் இணைந்து பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களுடனான உறவும் முக்கியம் என்கிறார் சுதாகர். இதற்கு உதாரணமாக, நீங்கள் கிரிக்கெட் விளையாடினால் ரன் எடுக்கும் போது எதிர்முனையில் இருக்கும் வீரரும் உங்களை போலவே ஓடுவாரா என்பதை அறிந்திருக்க வேண்டும் என்கிறார்.

"எங்களிடையே இப்படித் தான் இருந்தது. நாங்கள் நான்கு பேரும், ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

சீரான தன்மையும் மிகவும் முக்கியம் என்கிறார் அவர். அதிலும் குறிப்பாக உங்கள் வர்த்தகம் சராசரியாக 23 பொருட்களை கொண்டிருக்கும் போது மற்றும் அதே பொருட்கள் ஆண்டு முழுவதும் 30 முறை ஆர்டர் செய்யப்படும் போது இது மிகவும் முக்கியம் என்கிறார். செயல்முறையை உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமானது என்கிறார்.

இருப்பினும் இந்தியாவில், 

“நாங்கள் செய்யும் எதிலும் ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும் என விரும்புவதால் பயிற்சி முக்கியமாகிறது. உதாரணமாக, பொருட்களை டெலிவரி செய்யும் போது, கத்திரிக்கப்படும் டேக்’களை திரும்பி எடுத்து வர வேண்டும். இது சின்ன விஷயம் தான். ஆனால், பெரும்பாலான இந்தியர்கள் வீட்டில் காலனி அணிவதில்லை என்பதால் இது அவர்கள் பாதத்தை பாதிக்கலாம்,” என்கிறார் அவர்.

பிக்பாஸ்கெட் தனது அக்கரையை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஏதேனும் பிரச்சனைக்காக வாடிக்கையாளர் சேவைப்பிரிவை அழைத்தால், மறு முனையில் 10 நொடிகளில் யாரேனும் இருப்பதை உறுதி செய்கிறோம் அல்லது எங்களில் ஒருவர் பதில் அளிக்கிறோம்,” என்கிறார் சுதாகர்.

வர்த்தக புரிதல்

இருப்பினும், தள்ளுபடி மற்றும் பொருட்கள் விற்பனை இடையே சமனை உருவாக்குவது எளிதல்ல. இதிலிருந்து விலகுவது சாத்தியம் இல்லை என்கிறார் விபுல். ஆனால் இதை நீங்கள் செயல்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

ஹரி மேனன், டி.என்.ஹரி தங்கள் புத்தகத்தை வெளியிடுகின்றனர் 

ஹரி மேனன், டி.என்.ஹரி தங்கள் புத்தகத்தை வெளியிடுகின்றனர் 


“குறுகிய காலத்தில் மாறக்கூடிய விலை மற்றும் நீண்ட காலத்தில் நிலையான விலையை கையாளும் மாதிரியை ஒரு வர்த்தகம் உருவாக்க வேண்டும் இல்லை எனில் பிரச்சனையாகும்,” என்கிறார் விபுல்.

இரண்டு ஸ்டார்ட் அப்கள் ஒரே மாதிரி இருக்கலாம், ஆனால் அவை பணத்தை எப்படி செலவிடுகின்றன என்பது முக்கியம். “ஒரு மாதிரி இல்லாமல் செயல்படுவதற்கான காரணமாக மூலதனம் அமைவதில்லை,” என்கிறார் விபுல்.

ஆனால் இன்று, அமேசான், ஹோல் ஃபுட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியிருப்பதாலும், மேலும் பல நிறுவனங்கள் இந்த பிரிவை நோக்குவதாலும் மளிகை பிரிவு கவனத்தை ஈர்க்கிறது. அமேசான் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் மளிகை ஸ்டார்ட் அப்களை கையகப்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் கூட, மளிகை மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. தேர்வு பூகோள அமைப்பிற்கு ஏற்ப மாறுபடுவதால் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக நீங்கள் செயல்பட வேண்டும்.

"ஆரம்பத்தில் இருந்து துவக்குவது வலி மிகுந்தது என்பதால் அமேசான் கையகப்படுத்துகிறது,” என்கிறார் சுதாகர்.

எல்லோரும் வாடிக்கையாளர்களை சென்றடைந்து அந்த பரப்பை விரிவாக்க விரும்புகின்றனர். எனவே ஓ2ஓ மாதிரியில் செயல்படுவது முக்கியம்.

பிக்பாஸ்கெட்டின் தனித்தன்மை?

“புதிய உற்பத்தியில் கவனம் செலுத்துவதே எங்களை வேறுபடுத்தி காட்டும் முக்கிய விஷயமாக இருக்கிறது. மளிகை வாடிக்கையாளர் சேவை மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பது முக்கியம் என்பதால் அதில் கவனம் செலுத்துகிறோம். மேலும் எங்கள் வர்த்தகம் மனிதர்களை அதிகம் சார்ந்துள்ளது. எங்கள் ஊழியர்களில் 75 சதவீதத்தினர் ப்ளூ காலரை சேர்ந்தவர்கள், அவர்கள் வளர்ந்து செயல்திறன் பெறுவது எங்கள் நோக்கம்,” என்கிறார் ஹரி. 

முதல் நாளில் இருந்து, பிக்பாஸ்கெட் புதிய பொருட்களில் கவனம் செலுத்துகிறது. இது மிகவும் கடினமாக பிரிவாகும். இதை வாடிக்கையாளர்கள் மாதம் நான்கு முறை வாங்குவதால் இந்த பிரிவு தங்களை பிராண்டாக மாற்றும் என இக்குழு நம்பியது.

இன்னும் அதிக தொலைவு செல்ல வேண்டும். நீல காலர் பணியாளர்களை பயிற்சி மூலம் ஊக்குவித்து செயல்திறன் பெற வைக்க வேண்டும்.

“அவர்கள் எங்களுடன் வளர்வது, தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வது மற்றும் அவர்கள் எத்தனை முக்கியம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாள் காலை 5 பேர் வரவில்லை என்றால் கூட, டெலிவரி மற்றும் ஆர்டர்கள் சிக்கலாகிவிடும்,” என்கிறார் ஹரி.

இந்த வலுவான பாலத்தை உருவாக்க மற்றும் அனைத்து ஸ்டார்ட் அப்களுக்கான சிக்கல் இல்லாத தொழில்நுட்பத்தை உருவாக்க உதவ, டி.என். ஹரி மற்றும் ஹரி மேனன் தங்களது ‘கட்டிங் த கார்டியன் நாட்’ புத்தகத்தை வெளியிட்டனர்.

ஆங்கில கட்டுரையாளார்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன் 

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக