பதிப்புகளில்

கல்வி சார்ந்த 95 இலவச செயலிகளை வடிவமைத்த மூன்று நண்பர்கள்!

2nd Jan 2018
Add to
Shares
521
Comments
Share This
Add to
Shares
521
Comments
Share

ராகுல் யாதவ், தேவேந்திர சிங், சாஹில் குப்தா ஆகியோர் ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு சிறிய நகரான பெஹ்ரோர் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் கல்வி சார்ந்த 95 இலவச செயலிகளை வடிவமைத்து டிஜிட்டல் புரட்சியைத் துவங்கியுள்ளனர்.

இன்று மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த செயலிகள் உதவியுடன் படித்து பயன்பெறுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா முயற்சி இவர்களை பெரிதும் ஊக்குவித்ததாக மூன்று நண்பர்களும் தெரிவிக்கின்றனர்.

image


ஆர்டிஎஸ் எஜுகேஷன் என்கிற இவர்களது செயலி ஐந்து மாதங்களாக கூகுள் ப்ளேஸ்டோரில் காணப்பட்டு 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுடன் இணைத்துள்ளது. ராகுல் கூறுகையில்,

மாணவர்கள் புத்தகங்களைக் காட்டிலும் டேப் (tabs) வாயிலாக படிக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

ஆர்டிஎஸ் எஜுகேஷன் செயலியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக என்சிஈஆர்டி புத்தகங்கள், குறிப்புகள், தீர்வுகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மற்ற செயலிகள் ஆன்மீகம், போட்டித் தேர்வுகள், பொது அறிவு, விழிப்புணர்வு ஆகியவை குறித்த தகவல்களை உள்ளடக்கியிருக்கும். ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் சாஹில் தெரிவிக்கையில்,

நாங்கள் பெஹ்ரோரில் உள்ள பள்ளியில் 2014-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தோம். அதன் பிறகு கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு ஆன்லைனில் காய்கறிகள் விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட்டோம். அதன் மூலம் சேமித்தத் தொகையைக் கொண்டு ஒரு லேப்டாப் வாங்கி கூகுள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் செயலி உருவாக்கக் கற்றுக்கொண்டோம்.

இவர்கள் ஃபேஸ்புக் மெசென்ஜரில் செயற்கை நுண்ணறிவு பாட் உருவாக்கியுள்ளனர். உங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் ஏதேனும் கேள்வி இருந்தால் அதற்கான விடையைக் கண்டறிய சமூக ஊடக செயலிகளுக்குச் செல்ல இது உங்களுக்கு உதவும்.

ராகுல் மற்றும் தேவேந்திரா விவசாயியின் மகன்கள். சாஹிலின் அப்பா பெஹ்ரோரில் கடை வைத்திருந்தார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சில்சார் (அசாம்) கல்வி நிறுவனத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய சாஹில் என்டிஏ நுழைவுத் தேர்விற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த தேவேந்திராவுடன் இணைந்தார். ராகுல் கேஎம்எஸ்யூ பல்கலைக்கழகத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குழுவில் இணைந்தார்.

கட்டுரை : Think Change India

Add to
Shares
521
Comments
Share This
Add to
Shares
521
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக