ஆன்காலாஜிஸ்ட், தொழில் முனைவர், ஸ்டார்ட் அப் வழிகாட்டி: பன்முகம் கொண்ட Dr.அஜெய்குமார்

  27th Jun 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  டாக்ட.பி.எஸ்.அஜெய்குமார், புற்றுநோய்க்கான நவீன சிகிச்சையை அளிப்பதோடு, அது செலவு குறைந்ததாகவும், அணுகக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்யும் மருத்துவமனையை இந்தியாவில் அமைப்பதற்காக, அமெரிக்காவில் வளமான தொழில்முறை வாழ்க்கையை விட்டு வந்தவர். இன்று அவரது HCG இந்தியா முழுவதும் 18 மையங்களை பெற்றுள்ளது. கென்யாவிலும் ஒரு மையம் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படவர்கள் நவீன சிகிச்சையின் பலனை பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

  அஜெய்குமார் ஒரு தொழில்முனைவோராக, தனது முதலீட்டாளர்களுடன் கவனமாக செயல்பட்டிருக்கிறார். தனது நோக்கம் மற்றும் குறிக்கோள்களை புரிந்து கொள்ளாமல், அதிக அளவு பலனை எதிர்பார்த்த முதலீட்டாளர்களிடம் இருந்து விலகியிருக்கிறார். அவரது பயணம், தடைகள் நிரம்பியதாக இருக்கிறது. HCG போன்ற மருத்துவ முயற்சிகளை டாக்டர்கள் மற்றும் மருத்துவதுறையினர் நடத்த வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். இந்த நம்பிக்கையே, இந்த மருத்துவமனையை இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைத்து, அனைவருக்கும் சிறந்த சிகிச்சை தரும் வசதியை அளிக்க வைத்திருக்கிறது. 

  பல ஆண்டுகளாக அவரை இயக்கிக் கொண்டிருப்பது எது என்பதையும், 2016ல் பொது வெளியீட்டிற்கு பின் அவரது திட்டங்கள் குறித்து கண்டறியவும் அண்மையில் அவரை சந்தித்த நேர்க்காணலில் இருந்து...

  image


  ஷ்ரத்தா : நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஊக்கம் அளிப்பவர், முன்மாதிரி. டாக்டராகிய நீங்கள், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து, புற்றுநோய் சிகிச்சையை செலவு குறைந்ததாக ஆக்கும் HCGயை துவக்கியுள்ளீர்கள். இந்தியா போன்ற நாட்டுக்கு மிக முக்கியத் தேவை இது. உங்கள் கதையை சொல்லுங்கள்?

  டாக்டர். அஜெய்குமார்: நான் பெங்களூருவைச் சேர்ந்தவன். புனித ஜான்சில் மருத்துவம் பயின்றேன். அப்போது, 1970 களில் இங்கு தொழில்நுட்பம் இல்லாததால் மருத்துவ உயர்கல்வியில் இடைவெளி இருப்பதாக உணர்ந்தோம். எனவே எங்களைப்போன்ற டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினோம். அப்போதெல்லாம், கிரீன் கார்டு (அமெரிக்க நிரந்தர வசிப்புரிமை) வீட்டில் இருந்தே கிடைத்துவிடும். (சிரிக்கிறார்).

  மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். உலகின் மிகச்சிறந்த மையங்களில் ஒன்றான ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் பயின்றேன். அங்கு எனது பெலோஷிப்பை முடித்தேன். புற்றுநோய் சிகிச்சை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். அப்போது புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை இல்லை. நிலைமை மோசமாக இருந்தது. புற்றுநோயாளிகள் குணப்படுத்த முடியாதவர்களாக கருதப்பட்டனர்.

  எனக்கு எப்போதுமே சவால்கள் பிடிக்கும். ஒருமுறை நான் ஏழாவது கிரேடில் இருந்த போது, என் சக மாணவர் ஒருவர் ஆசிரியரால் தாக்கப்பட்டார். நான் மாணவர்களை குழுவாக சேர்த்துக்கொண்டு, கல்வி நிறுவன தலைவரை சந்தித்து அந்த ஆசிரியர் நீக்கப்பட நடவடிக்கை எடுக்க வைத்தேன்.

  சவால்களை முக்கியமாக கருதிய சூழலில் வளர்ந்தேன். நான் இதயநோய் நிபுணராக உருவாக விரும்பினாலும், விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, புற்றுநோயாளிகளுக்கு எப்படி இருக்கிறார்கள் என்பதை கவனித்தேன். நோயாளிகள் வலியால் அவதிப்பட்ட நிலையில், நோய்க்கு சிகிச்சை இல்லை என சொல்லப்பட்ட சூழலில், இதை சவாலாக எடுத்துக்கொள்ள தீர்மானித்தேன்.

  இதன் காரணமாகவே ஆன்காலஜி (புற்றுநோய் சிகிச்சை) துறைக்கான மெக்கா என கருதப்படும் ஆண்டர்சனில் எனது முதுகலை படிப்பை மேற்கொண்டேன். முதலில் நுரையிரல் திட்டத்திற்கும், பின்னர் சவுதி அரேபிய மையத்திற்கு பொறுப்பேற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் இந்தியா வர தீர்மானித்தேன். ஏனெனில் ஒரு நாள் இந்தியா வந்து, இங்கு சொந்த மையத்தை அமைக்க விரும்பினேன்.

  இதற்கான பயணத்தை துவங்கினேன். பங்குதாரர்களை திரட்டி, இந்தியாவில் மூன்று மாதங்களாவது இருக்க வேண்டும் என்றேன். நானும் அவ்வாறு செய்தேன். இது 1980 களில்.

  அதன் பிறகு ஆறு மாதங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தேன். இது நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது. அப்போது கோபால்ட் சிகிச்சை தான் அளிக்கப்பட்டு வந்தது. இது பற்றி யோசித்தேன். எல்லோரும், நம் நாடு ஏழை நாடு என பதில் அளித்தனர்.

  புற்றுநோய்க்கு ஏழை பணக்காரர் தெரியாது. நாம் ஏழை நாடு என்பதால், கனடா நம் நாட்டைப்போன்ற நாடுகளுக்காக கோபால்டை தயார் செய்தது, ஆனால் கனடாவில் ஒருவர் கூட கோபால்ட் சிகிச்சை பெற்றதில்லை. இது ஏன் எனும் கேள்வி எழுந்தது. நாம் ஏன் மோசமான தரத்திலான இயந்திரங்களை ஏற்க வேண்டும். இதுவே எனது கண்களை திறந்து இந்தியா திரும்ப உறுதி கொள்ள வைத்தது. எப்போது என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது.

  நான் எப்போதும் முன்கூட்டியே திட்டமிடுவேன். அமெரிக்காவில் நான் சிறப்பாகவே செயல்பட்டேன். மக்கள் என்னை பார்க்க நீண்ட தொலைவில் இருந்து வந்தனர். இந்தியாவுக்கு திரும்பி வர நினைத்தபோது லாப நோக்கில்லாமல் செயல்பட விரும்பி அமெரிக்காவில் அறக்கட்டளையை அமைத்தேன். இந்தியாவில் புற்றுநோய் மையம் அமைக்க அமெரிக்க அரசு வரி இல்லா நிதி அளித்தது. இதை நம்ப முடிகிறதா? 

  இந்தியாவுக்காக அமெரிக்கா இதை செய்தது. எனவே மைசூரில் மையம் அமைத்தேன். ஆனால் மற்றவர்கள் நிதியை நம்பி எப்படி சேவை அளிக்க முடியும் என நினைத்தேன்.

  எனவே, நிதி உதவி கொண்ட தனியார் நிறுவனம் துவக்கினேன். மேலை நாட்டில் உள்ள அதே தொழில்நுட்பத்தை கொண்டு வர முயன்றேன். இது சவாலாக இருந்தது. இங்குள்ள மக்களால் அதிக தொகை தர முடியாது என்பதால் செலவு மிக்க தொழில்நுட்பத்தை கொண்டுவர முடியாது என்றனர். எல்லோரும் விலை பற்றியே பேசினர். யாரும் பலன்கள் பற்றி பேசவில்லை. எல்லோருக்கும் மலிவான மருந்துகள் தேவைப்ப்பட்டன. ஆனால் சிகிச்சையின் நல்ல பல்கன் தேவைப்படவில்லை.

  இதைத் தான் நான் சவலாக எடுத்துக்கொண்டேன்...

  லைனக் சிகிச்சை இயந்திரம் வாங்கிய போது எல்லோரும் எதிர்த்தனர். ஒரு சிலமருத்துவனமனைகளில் தான் அது இருந்தது. பெரும் முயற்சி செய்து சீமென்சிடம் இருந்து அதை கொண்டு வந்தேன். ஆனால் வட்டி அதிகமாக இருந்தது. ஜெர்மனி சென்று நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசி வட்டியை குறைக்க வைத்தேன்.

  நோயாளிகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் எனும் தேவையை என் சகாக்கள் உணர்ந்தனர். அதை மனதில் கொண்டு ஒரு மாதிரியை உருவாக்கினேன். ஒரு நாள் பணியில் இருந்து திரும்பியதும், என் மனைவியிடம் இந்தியா செல்ல விரும்புவதை கூறினேன். அவள் அப்போது கர்பமாக இருந்ததால் பிரசவம் வரை காத்திருக்குமாறு கூறினாள். 2000 அக்டோபரில் குழந்தைகள் பிறந்தன. அதே ஆண்டு, பாஸ்டனில் இருந்து இந்தியா வந்தேன். ஆறு மாத காலம் இருக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.

  2001-02 ல் இந்தியா வந்த போது, இங்கேயே இருக்க வேண்டும் என உணர்ந்தேன். இதை மனைவியிடம் கூறிய போது அதிர்ச்சி அடைந்தார். ஆனால் ஆதரவாக இருந்தார். அவள் முதுகலை படிப்பிற்காக அங்கே தங்கிவிட, நான் குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். இப்படி தான் HCG பயணம் துவங்கியது.

  2003ல், நான் கங்காதர் கணபதியை (குணா) சந்தித்தேன். அவர் மூலக்கூறு சிகிச்சையில் ஈடுபாடு கொண்டிருந்தார். டிரையஸ்டா எனும் சிறு குழுவை அமைத்திருந்தார். நான் மருத்துவமனை நடத்திக்கொண்டிருந்தேன். அவர் ஆய்வில் ஈடுபாடு கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து திட்டமிட்டோம். என்னால் அதிக வட்டிக்கு வாங்க முடியாது என கூறினேன். ஆனால், சைக்லோட்ரான், பெட்ஸ்கேன், சைபர்கத்தி கொண்ட ஒரு சிகிச்சை மையத்தை அமைக்க விரும்பினேன். இதை தனியார் சமபங்கு மூலம் செய்யலாம் என்றார். அந்த நேரத்தில் மருத்துவ நலன் பற்றி அதிக பேச்சு இல்லை.

  நாங்கள் ஒவ்வொரு இடமாக சென்று பார்த்தோம். எல்லா இடங்களிலும் கதவுகள் மூடப்பட்டன. 

  நான் களைத்துப்போனேன். ஆனால் குணா விடாமல் முயற்சித்தார். இறுதியில் ஐ.டி.எப்.சி க்கு சென்றோம். அங்கு லூயிஸ் மிராண்டா என்பவர் இருந்தார். அவர் நல்ல மனிதர். முதலில் அவர் தயங்கினாலும், 10 மையங்கள் விரிவாக்கம் செய்யலாம் என்றதும் ஒப்புக்கொண்டார்.

  சிக்காகோவில் இருந்த போது அவர் என்னை சந்தித்தார். (சிக்காகோவில் வீடு இருக்கிறது). 10 மில்லியன் டாலர் தருகிறேன். ஆனால் நிபந்தனைகள் உண்டு என்றார். நான் ஒரு மருத்துவர், நோயாளிகளுக்கு சிறந்ததை தான் என்னால் செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் வருவாய் பற்றி யோசித்துக்கொண்டிருக்க முடியாது எனக்கூறினேன். அதை ஏற்றுக்கொண்டவர் நிபந்தனை இல்லாமல் ஆனால், குறைந்த மதிப்பீட்டில் நிதி அளிக்க முன்வந்தார். என்னுடைய பங்கு நீர்த்துப்போனாலும் கவலைப்படாமல் ஒப்புக்கொண்டேன். அடுத்த சில ஆண்டுகளில் என் மனதில் இருந்த மாதிரி செயல் வடிவம் பெற்றது. நாசிக், விஜயவாடவில் பங்குதாரர் மாதிரியில் துவங்கினோம். இது நன்றாக செயல்பட்டது.

  அதன் பிறகு இரண்டாவது சமபங்கு நிதி கிடைத்தது. பின்னர் விப்ரோ தலைவர் பிரேம்ஜி வந்தார். அவர் வர்த்தகம் பேச விரும்புவதாக நினைத்து, ஒரு காட்சி விளக்கம் அளித்தேன். 

  ’உங்கள் அற நெறிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையை பார்க்க விரும்பிகிறேன். உங்களை அதிகம் பேர் பரிந்துரைக்கின்றனர். எனக்கு ஈர்ப்பாக உள்ளது. நான் முதலீடு செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

  அந்த நேரத்தில் முதலீடு தேவைப்படவில்லை. முதல் 10 மில்லியன் டாலரை அடைக்க விரும்பினேன். ஆனால் அவர் உறுதியாக இருந்தார். ஆரம்ப ஆய்வுக்கு பிறகு முதலீடு செய்தார். இது என்னை இன்னமும் ஊக்குவித்தது. இதன் விளைவாக 14-15 மையங்கள் மற்றும் 3 சிறப்பு மருத்துவமனைகளாக 2016 ல் வளர்ந்தோம்.

  அதன் பிறகு முதலீட்டாளர்கள் வெளியேறினர். அதுவும் நல்லவிதமாகவே அமைந்தது. அதன் பின் பங்கு வெளியீட்டிற்கு வந்தோம். 2016 மார்ச்சில் பங்கு வெளியிட்டோம். அப்போது டாக்டர் காமினி ராவும் எங்களுடன் உடன் இருந்தார். அவர் ஐ.வி.எப் மைய பங்குதாராரக இருந்தார். அவரும் ஒரு தொழில்முனைவர். எங்கள் மாதிரி அவருக்கும் பிடித்திருந்தது. நானும் டாக்டர்கள் தொழில்முனைவோராக வேண்டும் என விரும்பினேன்.

  இப்போது 21 ஆன்காலஜி மையங்கள் உள்ளன. விரைவில் 26 ஆக உள்ளது. 5 சிறப்பு மருத்துவமனை மற்றும் 10 ஐவிஎப் மையங்கள் உள்ளன. உத்திர பிரதேசம், காஷ்மீர், பீகார் போன்ற சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் நோயாளிகள் எச்.சி.ஜி மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று தங்கள் படுக்கைக்கு திரும்பலாம். நாசிக், விஜயவாடா, ஷிமோகா என எல்லா இடங்களிலும் நவீன மையங்கள் உள்ளன. உலக அளவில் எங்களைப்போல யாரும் இல்லை. இது தான் இந்தியாவில் எங்கள் மருத்துவ பயணம்.

  image


  ஷ்ரத்தா : இது மிகவும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. நீங்கள் பேசும் போது உங்கள் ஈடுபாடு வெளிப்பட்டது. நீங்கள் இரண்டு முக்கிய பொறுப்புகளை கொண்டிருக்கிறீர்- ஒரு பக்கம் தனியார் சமபங்கு நிதி பெற்று அதற்கான பலனை அளிக்க வேண்டும். இன்னொரு பக்கம் தனக்கான நிதர்சனம் கொண்ட இந்தியாவில் செயல்படுகிறீர்கள். இங்கு பலரிடம் பணம் இல்லை. நீங்கள் இலவசமாக பலருக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். எப்படி இரண்டையும் கையாள்கிறீர்கள்?

  டாக்டர்: பாருங்கள், தனியார் நிதி கிடைத்த போது அவர்களுக்கு நான் பெரிய அளவில் எதையும் வாக்களிக்கவில்லை. ஒருமுறை நியுயார்க்கில் தனியார் சமபங்கு நிறுவனத்துடன் காலை உணவு சாப்பிட்டேன். 25 சதவீத லாபம் வேண்டும் என்றனர். நான் காலை உணவுக்கு நன்றி கூறி எழுந்துவிட்டேன். அத்தகைய லாபத்தை அளிக்க முடியாது. நம்மால் செய்ய முடிந்ததை தான் வாக்குறுதி அளிக்க வேண்டும். என் வங்கி கடன் 12 சதவீதமானது. என்னால் 15 அல்லது 16 சதவீதம் பலன் அளிக்க முடியலாம், அவ்வளவு தான்.

  ஆனால் எல்லாம் சிறப்பாக நடந்தால் அதிக பலன் கிடைக்கலாம். நல்லவேளையாக பலருக்கு இது கிடைத்தது, அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் எப்போதும் எதிர்பார்ப்பை யதார்த்தமாகவே வைத்திருக்கிறேன். மையமாக்கல், மொத்த கொள்முதல் போன்றவை மூலம் இதை செய்யலாம். மேலும் உற்பத்தியாளர்களுடனும் இணைந்து செயல்படுகிறோம்.

  அதிக நெருக்கடி இல்லாத மாதிரியை உருவாக்கியுள்ளோம். எப்போதும் என் பணத்தைவிட தனியார் சமபங்கு நிதியை மதிப்பாக கருதுகிறேன். அவர்கள் பணத்தை காப்பதை முக்கியமாகக் கருதுகிறேன். அவர்களின் எதிர்பார்ப்பு இருவரும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் வரை, அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பணம் பலனோடு திரும்பி அளிக்க வேண்டும்.

  எங்கள் மாதிரி தெளிவாக உள்ளது. நேர்மையாக, வெளிப்படையாக இருப்பதை சமூகம் விரும்புகிறது. நாங்கள் பங்கு வெளியீட்டிற்கு வந்த போது, மக்கள் எங்கள் நேர்மையை, நம்பகத்தன்மையை விரும்பினர். அதன் காரணமாகவே முதலீட்டாளர்களும் தேடி வந்தனர். எதிர்காலம் வளமாக இருப்பதாக நினைக்கிறேன்.

  ஷ்ரத்தா: நீங்கள் இந்தியாவில் ஸ்டார்ட் அப்பில் விருப்பம் கொண்டுள்ளீர்களா?ஏனெனில் இங்கு பல திறமையான இளைஞர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லையே?

  டாக்டர்: நாங்கள் இதில் ஈடுபட்டுள்ளோம். என்னுடைய மகள் அஞ்சலி அமெரிக்காவில் இருந்து வந்திருப்பவர், ஆக்சிலரேட்டர் திட்டங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஐதராபாத்தைச்சேர்ந்த குழுமத்துடன் இணைந்து 25 மருத்துவ ஸ்டார்ட்களை அடைகாக்க திட்டமிடுள்ளோம். சில ஆரம்ப நிலை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளோம்.

  வீடு தேடி வரும் நலனுக்கான செயலிகளிலும் கவனம் செலுத்துகிறோம். ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டவும் செய்கிறோம். நான் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன். நியூட்ராகியூடிக்கல்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக சோதனையும் நடத்த வேண்டும் தெரியுமா? யாரேனும் வந்து இந்த புரதம் புற்றுநோய்க்கு நல்லது என்று கூறினால் அதை நிருபிப்பது எப்படி? எனவே சோதனை நடத்துகிறோம். அதனடிப்படையில் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து நல்லதா என எடுத்துக்காட்டுகிறோம்.

  இதற்கான கதவுகளை திறந்திருக்கிறோம். முறையான அறிவியல் ஆய்வு செய்வதில் மேற்குடன் போட்டியிட விரும்புகிறோம். மக்கள் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி பற்றி பேசுகின்றனர். ஆனால் அவர்கள் சோதனைகள் நடத்துவதில்லை. நீங்கள் சோதனைகள் நடத்தி பார்க்க வேண்டும். இதில் மேற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவில் சிகிச்சைக்கு பின் தொடர் கண்காணிப்பும் சிக்கலானது. நோயாளிகளை தொடர்வதற்கான ஐடி அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

  உண்மையில், ஆய்வில் முன்னிலை வகிக்க விரும்புகிறோம். இந்தியாவில் ஆய்வுகள் போதாது. மேற்கில் வரும் மருந்தை நாம் உடனடியாக நகலெடுக்கிறோம். ஆனால் நம்முடைய கண்டுபிடிப்பாளர்கள் எங்கே? இந்தியாவில் ஆய்வு இல்லை. இது சோகமானது. மருத்துவம், பிற துறைகள், ஐடி எதிலும் ஆய்வு இல்லை. நாம் நிச்சயம் இதில் செலவிட வேண்டும்.

  ஷ்ரத்தா: ஆனால் உங்களைப்போன்றவர்கள் தான் நம்பிக்கை அல்லவா! நீங்கள் செய்திருப்பது ஒரு உதாரணம், இது மேலும் பலருக்கு பரவ வேண்டும் ஏனெனில் அவர்கள் தாங்கள் நுண் அளவில் ஏற்படுத்தும் மாற்றத்தை உணர வேண்டும். உங்கள் நிலையில் உள்ளவர்கள் இதை உண்மையாக செய்யும் போது மாற்றம் வரும்...

  டாக்டர்: ஆனால் நாம் பெரிய சித்திரத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் சிறிய குழுக்கள் இதை செய்வதால் பலனில்லை. கடந்த 15 -20 ஆண்டுகளில் மத்திய தர மக்கள் மட்டும் தான் ஏணியில் மேலே ஏறியிருக்கின்றனர். 800-900 மில்லியன் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை இதனுடன் ஒப்பிட வேண்டும். மற்றொரு புறம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கிறோம்.

  ஷ்ரத்தா : இந்தியாவில் எப்படி இருக்கிறது என உங்களுக்குத்தெரியும், குறிப்பாக வசதியானவர்கள், சிகிச்சைக்கு பணம் இருந்தால் அதை வெளிநாட்டிற்கு சென்று பெற வேண்டும் என கூறுவதுண்டு. ஆனால் இன்று நீங்கள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சையை இங்கேயே அளிக்கிறீர்கள்!

  டாக்டர்: அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்தும் நோயாளிகள் வருகிறார்கள். ஏனெனில் எங்கள் மையத்தை சிறந்ததாக பார்ப்பதே காரணம். இப்போது தான் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு சிகிச்சை அளித்தோம். கட்டி இருந்ததால் அவரது கண் பாவையை அகற்றினோம். இது போன்ற சிகிச்சை அங்கு சாத்தியம் இல்லை என்பதால் அவர் மிகவும் நன்றி தெரிவித்தார். எங்களுடன் படம் எடுக்கவும் விரும்பினார்.

  அமெரிக்காவில் இந்திய டாக்டர்களால் சிகிச்சை அளிக்கப்படுபவர்கள் அதிக காலம் வாழ்வதாக ஹார்வர்டு பிஸ்னஸ் ரெவ்யூ தெரிவித்திருந்தது. ஆனால் நாம் இன்னமும் இந்த காலனியாதிக்க உணர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், இதை நாம் விலக்க வேண்டும். நமக்கு எந்த பெருமையும் இல்லையா என்ன? என்னிடம் சிலர் வந்து, மாநாடு நடத்துகிறோம் அதில் சர்வதேச பேச்சாளர்கள் பேசுகின்றனர் என்று கூறுவர். நான் ஆதரவு தெரிவிக்க முடியாது என்றேன். நாமே சிறந்தவர்களாக இருக்க முடியும். இது கடினமாக இருந்தாலும் எதிர்கொள்வோம். நான் ஒரு மராத்தன் வீரர். ஒவ்வொரு மராத்தானும் வலி மிகுந்தது. ஆனால் அதை முடித்த பின் சவாலை வென்றது குறித்து மகிழ்ச்சி அடைவேன்.

  எனவே, யாராவது எளிய வழியில் செல்லலாம் என கூறினால் அது தாழ்வாக உள்ள பழம் எனக்கு வேண்டாம் என்பேன். சரியான வழியில் செய்ய வேண்டும். அது கடினமான வழி. இலக்கை விட மார்கம் முக்கியமானது.

  ஷ்ரத்தா: புற்றுநோய் பரவும் தன்மை கொண்டதால் பலரது மனதில் பயம் உள்ளது. மேலும் எல்லோருமே புற்று நோயால் பாதித்த யாரையாவது தெரியும். இந்த பயம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

  டாக்டர்: பயம் தான் உங்கள் மோசமான எதிரி என்பது தான் என்னுடைய கருத்து. புற்றுநோய் மோசமான எதிரி இல்லை, பயம் தான் எதிரி. உங்களுக்கு பயம் இல்லாவிட்டால், நான் நோயை வெல்வேன் என சொல்ல முடிந்தால், உங்களால் முடியும். நல்லவிதமான மனநிலை அவசியம். இதற்கு பல உதாரணங்களை என்னால் கூற முடியும். துபாயில் பெரிய தொழிலதிபர் ஒருவரின் மனைவி அந்த பெண்மணி. 10 ஆண்டுகளுக்கு முன் தீவிர நோயுடன் வந்தார். அவருக்கு நல்ல நம்பிக்கையான மனது இருந்தது. மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தோம். அவர் சர்ஜரியை விரும்பாததால் சைபர் கத்தி பயன்படுத்தினோம். அவர் நன்றாக குணமானார். எங்கள் பிங்க் சப்போர்ட் குழுவின் ஆதரவாளராகவும் இருக்கிறார்.

  நீரிழிவு, ஆஸ்துமா என பல நோய்களை நம்மால் குணமாக்க முடியவில்லை. ஆனால் புற்றுநோய் மட்டும் மோசமாக கருதப்படுகிறது. ஏனெனில் நாம் அதை தவறாக பயன்படுத்தியுள்ளோம். ஒருவர் ஊழல் செய்தால் சமூகத்தின் புற்றுநோய் என்கிறோம். யாரேனும் கொள்ளை அடித்தால், நம்மில் தோன்றிய புற்றுநோய் என்கிறோம். இந்த வார்த்தையை இப்படி பயன்படுத்தகூடாது. புற்றுநோய்க்கு வேறு விதமான விளக்கம் இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்த வேண்டும். மருத்துவர்களும், ஸ்டேஜ் 4, பேல்லிட்டிவ் கேர் போன்ற அச்சமூட்டும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.

  மருத்துவர்களாகிய நாங்கள் சமூகத்திற்கு சரியாக விளக்காததும் ஒரு காரணம். நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி விளக்கிக் கூற தவறிவிட்டோம். எங்கள் கிளினிக்கில் நோய் பற்றி பேசுபவர்கள் போல துணிச்சலான பிழைத்த சாம்பியன்களை உருவாக்க வேண்டும்.

  இதற்கு முன்னர் இவர்கள் பேசத்தயாராக இல்லை. இப்போது முன்வருகின்றனர். நம்பிக்கையோடு பேசுபவர்களை நாம் உருவாக்க வேண்டும். நாம் பயத்தை வெற்றி கொள்ள வேண்டும். குடும்ப ஆதரவும் முக்கியம். பணத்தை கடன் வாங்காமல் அல்லது நிலத்தை விற்காமல் சிகிச்சை செலவை நிதி நோக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாதிரியையும் உருவாக்க வேண்டும்.


  ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா சர்மா | தமிழில்: சைபர்சிம்மன் 

  Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

  Our Partner Events

  Hustle across India