பதிப்புகளில்

தோல்வியை மாற்றியமைத்து வெற்றியடைந்த 'இண்டியா ப்ளாசா' கே.வைதீஸ்வரன்

‘Failing to Succeed : இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனத்தின் கதை’ என்கிற தனது புதிய புத்தகத்தின் மூலம் தோல்வியை வெற்றியாக மாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்!

20th Jul 2017
Add to
Shares
351
Comments
Share This
Add to
Shares
351
Comments
Share

புத்தகத்தின் பெயரை ‘Failing to Succeed’ என்று படித்தால் வெற்றிபெறத் தவறியதாக பொருள்படும். இதே தலைப்பில் ஒரு நிறுத்தற்குறியை இணைத்து ‘Failing, to Succeed’ என்று படித்தால் வெற்றிபெறுவதற்காக தோல்வியடைவதாகப் பொருள்படும். ஒரு நிறுத்தற்குறி வாக்கியத்தின் பொருளையே மாற்றிவிடக்கூடிய வல்லமை படைத்தது. வாழ்க்கையிலும் அணுகுமுறையானது அனைத்தையும் மாற்றிவிடும் வல்லமை படைத்தாகும்.

வைத்தீ என்று அழைக்கப்படும் கே.வைதீஸ்வரன் இந்தியாவின் இ-காமர்ஸ் வணிகத்தில் அரசனாகவே இருந்தார். இருப்பினும் அவர் தோல்வியடைந்துள்ளார்.

image


நம் நாட்டில் தோல்வி என்பதை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்த தெளிவு இல்லை. இங்கு வெற்றி மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கப்படுகிறது. இந்திய ஸ்டார்ட் அப் உலகம் தொழில்முனைவோரை இதே கண்ணோட்டத்தில் பார்ப்பதில் வியப்பேதும் இல்லை.

2017-ம் ஆண்டில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதிக ஊக்கத்துடன் துவங்கி தோல்வியுற்ற பல்வேறு ஸ்டார்ட அப்களை கடந்து வந்திருப்போம். இது குறித்துக் கணக்கெடுக்கவேண்டிய நேரமிது. வெற்றியைக் காட்டிலும் தோல்வியடைந்த பல்வேறு கதைகளை எழுதவும் படிக்கவும் உகந்த நேரமிது.

அப்படிப்பட்ட தோல்விக்கதைகளில் வைத்தீயின் கதை முக்கியமானதாகும். பல்வேறு ஸ்டார்ட்அப் நிகழ்வுகளிலும் மேலாண்மை வகுப்புகளிலும் அவரது தோல்வி குறித்து பேசியுள்ளார். இது வழக்கமாக பகிர்ந்துகொள்ளப்படும் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாகும்.

பல தொழில்முனைவோர் தோல்வி குறித்து பேசமாட்டார்கள். இது தவறாகும். பலர் தோல்விகள் குறித்து பகிர்ந்துகொண்டால் அது இகோசிஸ்டத்தை வலுவாக்க உதவும். மக்கள் தன்னை ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம் என்று இந்த வாரம் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் குறிப்பிட்டார் வைத்தீ.

”ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அதை வெளிப்படுத்த துணிச்சல் தேவைப்பட்டது. ஸ்டார்ட்அப் என்கிற கவர்ச்சியான ஒரு பிம்பத்திற்கு பின்னால் ஒரு இருண்ட கருப்புப்பகுதி இருப்பதை உலகம் தெரிந்து கொள்ளவேண்டும்.” என்றார்.

பழைய புத்தகம், புதிய அட்டை

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் பன்சல்ஸ் செயல்படுவதற்கு முன்பே புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்தார் வைத்தீ.

1999-ல் ஃபேப்மார்ட் என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டார். இது பின்னாளில் ’இண்டியா ப்ளாசா’ என்று மறுப்ராண்டிங் செய்யப்பட்டது. 2002-ல் ஃபேப்மால் என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டார். இது ஆதித்யா பிர்லா குரூப்பால் வாங்கப்பட்டு மோர் ரீடெய்ல் செயின் ஆஃப் ஸ்டோர்ஸாக மறுப்ராண்டிங் செய்யப்பட்டது.

லாபகரமான இ-காமர்ஸ் வணிகத்தை நிறுவியதற்காக அவர் புகழ்பெறவில்லை. அவரது தோல்வி காரணமாகவே புகழ்பெற்றார். இது ஒரு முரண்பாடான விஷயமாகும்.

வைத்தீயின் இண்டியா ப்ளாசா மில்லியன் டாலர்களை உயர்த்தியது. இந்தியாவின் முதல் ஆன்லைன் சந்தை செயல்பாடு, முதல் PIN சார்ந்த கட்டணம், புதுமையான முறையாக கேஷ் ஆன் டெலிவரி (CoD), இ-வாலட்கள், மின்னணு கிஃப்ட் சான்றிதழ், ஆம்னி சானல், ஹைப்பர்லோக்கல் என பல்வேறு செயல்பாடுகளில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் இண்டியா ப்ளாசாவும் ஒன்று. இருப்பினும் 2013-ல் வைத்தியின் இண்டியா ப்ளாசா அதன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது.

தற்போது 2017-ம் ஆண்டில் சுற்றுச்சூழலானது, GMV-யைத் தாண்டி லாபம் குறித்து கேள்வி எழுப்புகிறது. ஆனால் வைத்தீயின் வார்த்தைகள் ஏற்கெனவே இதை கணித்திருந்தது. ”அதிகப்படியான தள்ளுபடி வழங்கும் முறையிலிருந்து விலகியிருந்தே லாபகரமான வணிகத்தை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தமுடியும். அவ்வாறு செய்தால் இ-காமர்ஸ் வணிகத்திற்கு நல்லறிவு கிடைக்கும்போது நாம் சிறப்பாக செயல்படமுடியும் என்கிற என்னுடைய கணிப்பு தவறானது. நல்லறிவு கிடைக்க தாகதமானது. ஆனால் நாங்கள் விரைவாக அழிந்துவிட்டோம். அது அழிந்த விதம்தான் அதிக வருத்தத்தை ஏற்படுத்துகிறது.”

image


சரியான மதிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள்

குறைவான ஒற்றை இலக்க எண் கொண்ட ஈக்விட்டியை ஏற்றுக்கொண்டது வைத்தீ செய்த தவறு.

ஐஐபிஎம் பேராசிரியர் பி டி ஜோஸ், ஐடியாஸ்பிரிங் கேப்பிடல் நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான நாகானந்த் துரைசாமி அவர்களுடன் இணைந்து புத்தகத்தை வெளியிட்டார் . மிகவும் குறைவான ஒற்றை இலக்க எண் கொண்ட ஈக்விட்டியை ஒரு தொழில்முனைவோர் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று இவரும் மற்றவர்களைப் போலவே வியந்தார். ”ஒரு ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவ்வளவு குறைவான ஈக்விட்டியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஒரு முதலீட்டாளராக நான் அந்த ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்யமாட்டேன்.” என்று வைத்தீயிடன் தெரிவித்தார். இவ்வாறு ஒப்புக்கொள்வது அந்த தொழில்முனைவோரிடம் அர்ப்பணிப்பு இல்லாததையே குறிக்கிறது. அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும் என்று கேள்வியெழுப்பினார்.

”எனக்கு இவை புரியவில்லை. ஒருவேளை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பப் பின்னணி காரணமாக இருக்கலாம். ஒரே வார்த்தையில் குறிப்பிடுவதானால் என்னுடைய முட்டாள்தனம் என்றே சொல்லலாம்,” என்று பதிலளித்தார்.

நான்கு வருடம் கழித்து சலசலப்பு சற்றே அடங்கியது. வைத்தீ தனது ஸ்டார்ட் அப் பயணத்திலிருந்து பல அரிய விஷயங்களை கண்டறிந்தார். 200க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் த்ரில்லர் போலவே அமைந்துள்ளது. பாலிவுட் வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்களுடன் நகைச்சுவையும் நிறைந்துள்ளது.

வைத்தீயின் கதை பல படிப்பினைகளை வழங்குகிறது. வெற்றி சில விஷயங்களை கற்றுக்கொடுக்கும். ஆனால் தோல்விதான் முக்கியமாக பாடமாக அமையும் என்கிறார். 

’சில வணிகங்கள் வெளிநாட்டு முதலீட்டை சார்ந்திருக்கும். சில நிறுவனங்கள் போட்டியாளர்களிடமிருந்து தப்பிக்க அரசாங்கத்தின் தரப்பிலிருந்து பாதுகாப்பை எதிர்பார்க்கக்கூடும். அவ்வாறின்றி பலர் என்னுடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு வலுவான, வளர்ச்சியடைக்கூடிய, லாபகரமான வணிகத்தை உருவாக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக சந்தையில் அறிமுகப்படுத்துவது எப்போதும் நன்மையைத்தான் அளிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை

”முதல் முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தியதன் நன்மை எனக்குக் கிடைத்தது. ஆனால் என்னுடைய கதை வேறுவிதமாக முடிவடைந்தது.” என்று புத்தக வெளியீட்டின்போது குறிப்பிட்டார். 

தொழில்முனைவோருக்கு ஒரு திட்டம் தோன்றினால் நிச்சயம் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். “முதலில் வேறு யாரேனும் சந்தையில் அறிமுகப்படுத்தட்டும். நாம் இரண்டாவது நபராக களமிறங்கலாம் என்று காத்திருக்கக்கூடாது. ஆனால் முதலில் அறிமுகப்படுத்துவதன் நன்மை தொழில்நுட்பம் அல்லாத பிரிவிற்கே சிறந்ததாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.” என்றார் வைத்தீ. தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது. “அடிப்படையாக இதில் எவ்விதப் பலனும் இல்லை. முதலில் செயல்பட்டதற்காக எனக்கு யாரும் பரிசளிக்கப்போவதில்லை. தொழில்நுட்ப வணிகத்தைப் பொருத்தவரை தொடர்ந்து புதுமையாக செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டியது அவசியம்.” என்றார்.

விரைவாகத் தோல்வியடைவதா? இல்லை!

’’விரைவாகத் தோல்வியடைவது’, ’அடுத்த திட்டத்தை அமல்படுத்த விரும்புவது’ - இவை ஸ்டார்ட் அப் வழக்குமொழியில் நான் அறவே வெறுக்கும் இரண்டு விஷயங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். “நீங்கள் ஒரு டீக்கடை திறக்கிறீர்கள். விரைவாக தோல்வியடைகிறீர்கள். ஆறு வாரங்களே ஆன நிலையில் முயற்சியை கைவிட்டு மூடிவிடுகிறீர்கள். அடுத்த திட்டமாக விண்கலத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடுகிறீர்கள். விண்வெளிக்கு பயணிக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு சுடச்சுட டீ தேவைப்படும் இல்லையா? அதனால் அங்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதே உங்களது திட்டம். நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வதாக தோணலாம். ஆனால் உங்களுக்குப் புரிகிறதல்லவா?” என்று புத்தகத்தில் எழுதியுள்ளார். அவர் குறிப்பிட விரும்பும் கருத்து என்னவென்றால் இவை வெறும் அர்த்தமற்ற வார்த்தைகள். ஏனெனில் ஒரு தொழில்முனைவோராக நீங்கள் ஸ்டார்ட் அப்பை துவங்குவதற்கு முன்பே அனைத்தையும் சிந்தித்திருக்கவேண்டும். அவ்வாறு சிந்தித்த பிறகு ‘இதற்குமேல் தொழிலைத் தொடரவே முடியாது’ என்கிற நிலையை எட்டும்வரை தொடர்ந்து போராடவேண்டும்.

அவ்வாறு திட்டங்களை மாற்றி வெற்றியடைந்தவர்கள் சிலரது கதையும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக முன்னாள் பாடகர் கிஷோர் குமார் ஒரு நடிகராகத் தொடர்வதை விட்டுவிட்டு பாட்டுப் பாடுவதில் கவனம் செலுத்தியது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்ட் அப் உலகில் சாதி அமைப்பு பரவலாக காணப்படுகிறது

ஸ்டார்ட் அப்பில் நிச்சயம் சாதி அமைப்பு இருப்பதாகவும் அதை எளிதாக ஊடுருவமுடியாது என்றும் நினைக்கிறார் வைத்தீ. ”நீங்கள் குறிப்பிட்ட பின்னணியைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். ஊடுருவுவதற்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட மரபைச் சார்ந்தவராக இருக்கவேண்டும்.” என்றார். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் வணிகத்தில் வளர்ச்சியடைவது மிகவும் கடினம் என்பதே அவரது கருத்து.

நேர்மை

தொழில்முனைவோரிடம் இருக்கவேண்டிய மிகவும் முக்கியமான திறன் என்ன? “நிறுவனத்தை உருவாக்கும் திறனா? கல்வித் தகுதியா? வணிகத்தில் வளர்ச்சியடைக்கூடிய திறனா?” என்று கேள்வியெழுப்புகிறார். 

தனிப்பட்ட முறையில் நேர்மையாக நடந்துகொள்ளும் திறன்தான் ஒரு தொழில்முனைவோரிடம் நிச்சயமாக இருக்கவேண்டிய அம்சமாகும் என்கிறார். அதிலும் குறிப்பாக அடுத்தவரின் நிதியுடன் செயல்படும் நிலையில் இந்தத் திறன் அத்தியாவசியமானதாகும். இதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றார்.

இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். அது உருகுலைந்துவிடாமல் இருக்கப் போராடினார். அந்தப் போராட்டத்தில் வெற்றியடைய முடியவில்லை. இவை வைத்தீயிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ”நான் மக்களையும் இந்த உலகத்தையும் பார்க்கும் கண்ணோட்டமே தற்போது மாறியுள்ளது. ஆனால் எப்படிப்பட்ட நிலையிலிருந்தும் மீண்டு வெளியே வரமுடியும் என்பதை உணர்ந்ததே மிகவும் முக்கியமான விஷயமாகும். சுரங்கப்பாதையில் பயணிக்கையில் சுற்றி பல்வேறு கழிவுகள் காணப்பட்டாலும் இறுதியில் வெளிச்சம் நிச்சயம் உள்ளது.” என்றார்.

”வெளிச்சத்தைக் கண்டறிய நீங்கள் நெடுந்தூரம் இருட்டில் நடக்கவேண்டும். சில சமயம் தூரம் குறைவாக இருக்கலாம். சில சமயம் நீண்ட தூரமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து நடந்தீர்களானால் நிச்சயம் வெளிச்சத்தைக் கண்டறிவீர்கள்.”

இவரது பயணமானது ஒரு புத்தகத்தை எழுதவும் கற்பித்துள்ளது.

இந்தப் புத்தகம் தற்போது அதிக நிதியுதவி பெற்று செயல்படும் இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் முறையாக இ-காமர்ஸ் வணிகத்தில் செயல்பட்டு தோற்றுப்போனதாக நினைத்த வைத்தீயின் புத்தகம் அதே இ-காமர்ஸ் தளம் வாயிலாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்

Add to
Shares
351
Comments
Share This
Add to
Shares
351
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக