பதிப்புகளில்

இளம் தொழில்முனைவர்களுக்கு 7 முத்தான ஆலோசனைகள்!

22nd Oct 2016
Add to
Shares
6.3k
Comments
Share This
Add to
Shares
6.3k
Comments
Share

நீங்கள் ஒரு தொழில்முனைவர்! அது உங்களுக்கே இன்னும் தெரியாது...

நீங்கள் ஒரு பிரச்சனைக்கு பல வழிகளில், புதுமையாக தீர்வை கண்டுபிடிப்பவர் என்றால் நீங்கள் ஒரு தொழில்முனைவர் ஆகிவிட்டீர் என்றே அர்த்தம். ‘நானே எனக்கு முதலாளி’ என்று எண்ணுபவரா நீங்கள்? ஆம் என்றால் நீங்கள் தொழில்முனைவராக மாறும் நாள் விரைவில் வந்துவிட்டது என்றே அர்த்தம். 

தொழில்முனைவர் ஆவது ஒன்றும் கடினமல்ல, ஆனால் ஆன பிறகு, அதில் உள்ள சவால்கள் வெளியே வரத்தொடங்கும். சந்தையை அறிதல், ரிஸ்க் எடுப்பது, இதுவரை செய்யாத வேலைகளை செய்ய நேரிடும், கடைசியாக வெற்றி அடைய பல சமயங்களில், உங்களுக்கே நீங்கள் சவால் விடவேண்டி இருக்கும். இப்படி பல புதிய அம்சங்களை சந்திக்க நேரிடும். 

image


தங்கள் தொழில் பயணத்தை தொடங்கியுள்ள இளம் தொழில்முனைவோர்களுக்கு சில எளிய டிப்ஸ்’களை வழங்குகிறோம். மாற்றத்தை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் தங்கள் இலக்கை அடைய சில வழிகள் இதோ... 

எதிர்ப்பார்ப்பை பெருக்குங்கள்

பிறரை ஈர்க்க தவறாதீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களை, முதலீட்டாளர்களை, ஊழியர்களை, ஏன் உங்களுக்கே உங்களின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரியுங்கள். உங்களால் முடியாதவற்றை செய்வதாக கூறி வாக்குறுதி அளிக்கவேண்டாம். உங்களது சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுங்கள். உங்களின் நிறுவனத்தின் உண்மை நிலையை, பெருமையை மட்டும் விளக்குங்கள். 

உதவியை நாடுங்கள்

ஒரு குழுவிற்கு சிறந்த தலைவராக இருக்கவேண்டும். ஒரு தொழில்முனைவராக, மேலாளராக உங்களின் வேலை முடியவேண்டும். எல்லா பணிகளையும் நீங்களே செய்யமுடியாது. பிறரது உதவியை நாடுவது உங்களின் இயலாமையை காட்டுவதாக கருதப்படுகிறது. ஆனால் தேவையான விளக்கத்தை, அறிவை, தகவலை; வல்லுனர்கள், வழிக்காட்டிகள், குழு உறுப்பினர்களின் உதவியை பெறுவதில் தவறில்லை. உங்களுக்கு அவர்களிடம் இருந்து விலைமதிக்க முடியாத விஷயங்கள் கிடைக்கக்கூடும். ஒரு சிறந்த, நம்பிக்கையான வழிக்காட்டியை கண்டுபிடித்து உங்கள் துறை பற்றிய நுண்ணறிவை பெறுங்கள். நிதி மேலாண்மை செய்ய நல்ல ஒரு குழுவை அமைத்திடுங்கள். 

நெகிழ்வாக இருங்கள்

அடிப்படை ஐடியா, எண்ணம், கருத்து, அணுகுமுறை, பங்குதாரர், மாடல், பணி என்று எதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பது நல்லது. அவ்வப்போது பரிச்சார்த்த முயற்சிகள் எடுப்பதில் தவறில்லை. புதிய முயற்சிகள் எடுப்பதற்கு தயாராக இருங்கள். உங்களின் வாடிக்கையாளர், ஊழியர்கள் சொல்லும் மாற்றங்களுக்கு தயாராகவும் இருங்கள். உங்கள் நிறுவனத்தை பற்றிய நேர்மையான விமர்சனங்களை நிதானமாக எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால் அதை பின்பற்றி நடந்திடுங்கள். 

போட்டியை கையில் எடுங்கள்

உங்கள் இலக்கை நோக்கி செயல்பட திட்டம் தெளிவாக இருக்கும்போது, வரக்கூடிய சிக்கல்கள், போராட்டங்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சின்ன சின்ன சவால்களை கண்டு பயந்து ஒதுங்காதீர், அதற்கு பதில் உங்கள் எண்ணத்தை நோக்கி ஸ்திரமாக பயணம் செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. உங்களுக்கு சரி என்று தோன்றுவது அவர்களுக்கு தவறாக இருக்கலாம் ஆனால் அதைப்பற்றி யோசித்து நேரத்தை வீணாக்கவேண்டாம். 

பொறுமையாக இருங்கள்

ஸ்டார்ட்-அப்ஸ் தோல்வி அடைவதில்லை, தற்கொலை புரிந்துகொள்கின்றது, என்று வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார். நிறுவனத்தின் நிறுவனர்கள் கைவிடும் போதுதான் ஸ்டார்ட்-அப்’கள் தோல்வியில் முடிகிறது. உங்களின் ஐடியா உருபெரும் வரை பொறுமையாக இருங்கள். ஓர் இரவில் மாற்றங்கள் நிகழாது. எந்த ஒரு புதிய முயற்சியும் மெதுவாக தான் வெற்றி அடையும் அதனால் பதறாமல் பொறுமையாக செயல்பட்டு வெற்றிக்கனியை அடையுங்கள். 

மன உளைச்சலில் இருந்து விடுபெறுங்கள் 

மன உளைச்சலில் இருந்து விடுபெற முயற்சி செய்யுங்கள். இருப்பினும் கவலைப்படுவதில் இருந்து வெளிவருவது சற்று கடினம்தான். எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதால் நீங்கள் எதிர்ப்பார்ததைவிட அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை கண்டறிந்து அவ்வப்போது உங்கள் பணியில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். 

திட்டமிடல்-ஆய்வு-மீண்டும் அதை தொடர்தல்

திட்டமிடல் ஒரு தொடக்க நிறுவனத்தின் அத்தியாவசியமான ஒன்றாகும். சின்ன சின்ன விஷ்யங்களைக்கூட திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும். அதேபோல் அவ்வப்போது நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து போதிய மாற்றங்களை செய்யவேண்டும். ஆய்வு செய்யும்போது அனுபவசாலிகளை வைத்துக்கொள்ளுங்கள், அவர்களின் கருத்துகளை கேட்டு, வளர்ச்சி பாதையில் செல்ல தகுந்த வழிகளை கேட்டுக்கொள்ளுங்கள். எந்த பகுதிகளில் மாற்றங்கள் தேவை என்றும் வழிக்காட்டிகளிடம் ஆலோசனை பெறுங்கள். 

பிறரின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லை என்பதற்காக தொழில்முனைவை தேர்ந்தெடுப்பது தவறு. அதேபோல் 25 வயதில் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற எண்ணத்திலும் தொழில்முனைவர் ஆவது நல்லதல்ல. ஏனெனில் நீங்கள் நினைப்பது போல் தொழில்முனைவு அவ்வளவு சுலபமான விஷயம் ஒன்றும் இல்லை. ஒரு சிறந்த ஐடியா கொண்டு, சரியான பாதையில் சரியான நேரத்தில் நீங்கள் களத்தில் இருந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி செல்லமுடியும். 

ஆங்கில கட்டுரையாளர்: சந்தீப் சிங்

Add to
Shares
6.3k
Comments
Share This
Add to
Shares
6.3k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக