பதிப்புகளில்

நடு வானில் நடக்கவிருந்த விமான விபத்தை தடுத்து 261 பயணிகளை காப்பாற்றிய பெண் விமானி!

YS TEAM TAMIL
20th Feb 2018
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

2017-ம் ஆண்டு ஃபிப்ரவர் மாதம் 7-ம் தேதி ஏர் இந்தியா விமானி அனுபமா கோலியின் துரிதமான செயலால் நடு வானில் நடக்க இருந்த மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

image


விஸ்தாரா யூகே 997 மற்றும் ஏர் இந்தியாவின் ஏஐ631 இரண்டு விமானங்களும் நடுவானில் மோதிக்கொள்ள இருந்தது. இந்த இரு விமானங்களிலும் மொத்தம் 261 பயணிகளின் இருந்தனர். விஸ்தாரா விமானத்தில் 152 பயணிகளும், போபால் நோக்கி பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 109 பயணிகள் இருந்தனர்.

இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் விதத்தில் பறந்துகொண்டிருந்தது. இதனிடையே இருந்த இடைவெளி கிட்டத்தட்ட 100 அடி தொலைவே இருந்தது. விமானங்கள் பாதுகாப்பான தொலைவிற்கு மாற்றப்படுவதற்கு முன்பு இரு விமானங்களிடையே வெறும் 100 அடி தொலைவு மட்டுமே இருந்தது என்று அனுபமா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

விமானங்கள் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் நெருங்கிக் கொண்டிருந்தபோது தானியங்கி எச்சரிக்கை கருவிகள் ஒலி எழுப்பியது. இதனால் விமானங்கள் நடு வானில் மோதி விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் இரு விமானங்களையும் பெண் விமானிகளே இயக்கி வந்துள்ளனர்.

இரு விமானங்களையும் நிர்வகித்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 'டைம்ஸ் நவ்'.

"விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள சில வினாடிகளே இருந்தது. விஸ்தாரா 29,000 அடி உயரத்தில் பறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் விஸ்தாரா விமானம் 27,100 அடியில் பறந்தது. இதே உயரத்தில் எதிர் திசையில் ஏர் இந்தியா விமானம் வந்துகொண்டிருந்தது."

நியூஸ் 18 தகவல்படி விஸ்தாரா தரப்பைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில்,

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் உத்தரவுகளில் முரண்பாடுகள் இருந்ததன் காரணமாக (போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பின் தரப்பிலிருந்து – TCAS) எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எங்களது விமானி இதைத் தவிர்க்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையே பின்பற்றினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி விமான விபத்துக்கள் குறித்து விசாரிக்கும் கமிஷன் (AAIB) இந்த சம்பவம் தொடர்பான விசாரணையைத் துவங்கியுள்ளது. அனுபமா சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் உயரம் குறைவாக பறந்துகொண்டிருந்த விஸ்தாரா விமானத்துடன் ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளாகாமல் தவிர்க்கப்பட்டது. அனுபமா தனது பணியைத் தொடர ஏஏஐபி அனுமதி அளித்துள்ளது.

கட்டுரை : Think Change India

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக