பதிப்புகளில்

தள்ளுவண்டியில் தொடங்கி ரெஸ்டாரண்ட் உரிமையாளர் வரை வளர்ந்த எம்பிஏ பட்டதாரி ராம் குமார்!

10th Feb 2017
Add to
Shares
2.9k
Comments
Share This
Add to
Shares
2.9k
Comments
Share

வீதியில் இருந்து கோபுரம் அடைந்த பலரின் வெற்றிக் கதைகளை தொடர்ந்து கேட்டு வரும் நமக்கு இன்னமும் அதுபோன்றவர்களை பற்றிய கதைகளை படிக்க ஆர்வம் குறைந்ததில்லை. ஏனெனில் அவை மீண்டும் மீண்டும் நமக்கு ஊக்கத்தையும், உந்துதலையும் தந்து வெற்றி இலக்கை நோக்கி தடைகளை தாண்டி செல்ல உறுதுணையாக இருக்கிறது. தற்போது நாம் படிக்கவிருக்கும் எம்பிஏ பட்டதாரியான ராம் குமார் ஷிண்டே’வின் கதையும், அவரது உன்னத நம்பிக்கையும், ஈடுபாடும் அவரை எப்படி உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை பற்றியது தான். 

பட உதவி: தி நியூஸ் மினிட்

பட உதவி: தி நியூஸ் மினிட்


’ராம் கி பந்தி’ ‘Ram ki Bandi’ என்ற பிரபல ப்ராண்டின் பின் உள்ளவரே ராம் குமார். நம்மப்பள்ளி என்ற ஹைதராபாத்தில் உள்ள இடத்தில், வீதியோர கைவண்டியில் உணவுவகைகளை விற்பனை செய்யும் இவரது கடையைப் பற்றி கூகிள் மேப்பில் தேடினாலே தெரிந்து கொள்ளலாம். ஜோமாட்டோ, பர்ப் போன்ற உணவு தேடல் தளங்களும் இதைப் பற்றி தகவல்களை வெளியிடுகின்றனர். 

1989-ல் தனது பயணத்தை தொடங்கிய ராம், எட்டு வயது சிறுவனாக இருந்த போதே தனது தந்தையுடன் தள்ளுவண்டியில் உணவு விற்பனையில் ஈடுபட்டார். அவர் அப்பா சுடச்சுட இட்லி, தோசைகளை செய்ய, ராம் பல இடங்களுக்கு சென்று அதை விற்பனை செய்வார். இந்த பணியை ஈடுபாட்டுடன் செய்த ராம், தந்தையின் கஷ்டகாலங்களை பலமுறை கண்டவர். இதே நிலை தொடரக்கூடாது என்று முடிவெடுத்த ராம், நன்கு படித்து, எம்பிஏ டிகிரி பெற்றார். ஒரு கையில் பட்டமும், மறு பக்கம் அப்பாவுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ராமுக்கு, சம்பளத்துக்கு வேலைக்கு செல்வதா அல்லது தொழிலை கவனிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டது. மாத சம்பளமாக ரூ.20000, நல்ல நிறுவனம் என்று வாய்ப்பு வந்தபோதும் அப்பாவின் தொழிலை எடுத்து நடத்த முடிவுக்கு வந்தார். 

முதல் சில ஆண்டுகளுக்கு சரியான வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் தவித்தார் ராம். தொழில் சரியான பாதையில் செல்லாததை கவனித்த அவர், மேலும் முதலீடு செய்து சில மாற்றங்களை செய்து தொடர முடிவெடுத்தார். பிஃபர்ஸ்ட்’ பேட்டியில் குறிப்பிட்ட ராம்,

“நான் எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ஹைதராபாத்தில் எத்தனையோ தோசை உணவகங்கள் இருக்கையில் என் கடைக்கு ஏன் மக்கள் வரவேண்டும்? அதன் பின்னே நான் பல ருசிகளில் தோசையை தயாரிக்க முயற்சித்தேன்,” என்றார். 

சீஸ் தோசை, பிஸ்ஸா தோசை, பன்னீர் தோசை என்று பலவகைகளை செய்தார் ராம். ஹைதராபாத் பிபிஓ, ஐடி நிறுவனங்களால் பெருகி வந்த நிலையில், இரவு 11 மணிக்கு பிறகு நல்ல உணவு வழங்கும் ஒரு சிறந்த இடம் இல்லாமல் இருப்பதை கவனித்தேன். அப்போது தான் கடையை இரவு உணவகமாக மாற்ற முடிவெடுத்ததாக கூறினார் ராம். 

ராம், தனது உணவகத்தில் பின்பற்றும் மற்றொரு முக்கிய கொள்கை, தரத்தில் எந்தவித சமரசம் செய்து கொள்ளாதது ஆகும். நல்ல தரமிக்க உணவு மக்களின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை என்ற நம்பிக்கையை கொண்ட அவரின் முயற்சி வீண் போகவில்லை. மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் அவரின் கடையை தேடி வரத்தொடங்கினர். இந்த வெற்றி, அவர் ‘ராம் தோசா ஹவுஸ்’ என்ற ஒரு ஹோட்டலை திறக்க வழிவகுத்தது. பணக்கார இடமான ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் ராம் திறந்த அந்த உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தி நியூஸ் மினிட் பேட்டியில் கூறிய அவர்,

“பல விஐபி’க்களும், தெலுங்கு பட நடிகர்களும் என் வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டனர். மக்கள் தங்கள் குடும்பத்துடன் ஹோட்டலை தேடி வருகின்றனர். வார இறுதிநாட்களில் இளைஞர்களும் அதிகளவில் வருகிறார்கள்,” என்கிறார் மகிழ்ச்சி பொங்க. 

தினமும் ஹோட்டலுக்கு தவறாமல் வந்து மேற்பார்வையிடும் ராம், இன்றும் கூட தனது தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு நம்மப்பள்ளி பகுதிக்கு சென்று விற்பனை செய்கிறார். 

“இங்கு தான் நான் என் பயணத்தை தொடங்கினேன், அதனால் இந்த இடம் என் வாழ்க்கையில் ஒரு தனிச்சிறப்பை கொண்டுள்ளது. இங்கு வருவதை நான் ஒரு நாளும் நிறுத்த மாட்டேன். 10 ரெஸ்டாரண்டுகளை நான் வருங்காலத்தில் தொடங்கினாலும் இங்கே வருவேன்,”

என்கிறார் இந்த சிம்பிளான தொழில்முனைவர். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
2.9k
Comments
Share This
Add to
Shares
2.9k
Comments
Share
Report an issue
Authors

Related Tags