பதிப்புகளில்

விதிமீறுவோர் அபராதத்தை டெபிட், க்ரெடிட் கார்டில் செலுத்த பெங்களுரு போக்குவரத்து காவல்துறை வசதி!

YS TEAM TAMIL
9th Dec 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

சிகப்பு ஒளி எரியும்போது டிராபிக் சிக்னலை அத்துமீறி தாண்டி சென்றுவிட்டு போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டவுடன் கையில் பணம் இல்லை என்று இனி சொல்லி தப்பிக்கமுடியாது. பெங்களுரு நகர போக்குவரத்து காவல்துறையினர் இனி கார்டு மூலம் அபராதங்களை பெற முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.

image


பெங்களுரு மாநகர துணை ஆணையர் அபிஷேக் கோயல், யுவர்ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில், கடந்த மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று வந்த அறிவிப்பில் இருந்து போக்குவரத்து விதி மீறல் செய்வோரிடம் அபராத பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பெரும்பாலானோர் தங்களிடம் செல்லாத 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு பணம் இல்லை என்று தப்பித்து வந்தனர் என்றார்.

இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களை பரிமுதல் செய்து, அவர்கள் அபராதத்தை செலுத்திய பின்னரே அதனை விடுவிக்க தொடங்கினர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும், பணத்தை ஏற்பாடு செய்து தரும் வரை காத்திருக்கவேண்டிய சூழலும் பயணிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றார் கோயல். 

”இடைகால திட்டமாக, நாங்கள் 100 கையடக பிஒஎஸ் இயந்திரங்களை வாங்கியுள்ளோம். இதில் அபராதம் செலுத்தவேண்டியோர் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி உரிய கட்டணத்தை செலுத்தமுடியும். இந்த இயந்திரம் இன்ஸ்பெக்டர்களிடமும், போக்குவரத்து காவல் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை சிக்கலை தவிர்த்து உடனடியான தீர்வை அளித்துள்ளது,” என்றார். 

இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியதில் பெங்களுரு முன்னோடியாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் கடந்த நவம்பர் கடைசி வாரத்தில் பிஒஎஸ் இயந்திரம் மூலம் போக்குவரத்து அபராதங்கள் பெறுவது பரிச்சார்த்தமாக செய்யப்பட்டது. 

பிஓஎஸ் இயந்திரங்களை சில்லறை வர்த்தகர்களும் பயன்படுத்த தொடங்கி டிஜிட்டல் வர்த்தகத்தை நோக்கி சென்றுவருகின்றனர். இந்த மாதம் முதல் எல்லா டோல் ப்ளாசாக்களிலும் கூட கார்ட் உபயோகிக்கும் வகையில் பிஓஎஸ் இயந்திரங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகின்றது. 

பெங்களுரு வாசி உமாஸ்ரீ, ஏடிஎம்’இல் பணம் எடுக்க தனது இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு க்யூவில் நின்றார். அப்போது அவரது வண்டி டோ செய்யப்பட்டு, போக்குவரத்து காவல்துறையினரால் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

“என்னிடம் 300 ரூபாய் கையில் இல்லை. பணமில்லை என்பதாலே ஏடிஎம் சென்றேன். அதை நான் விளக்கியும் அவர்கள் என் வண்டியை எடுத்துச் சென்றனர். அதனால் மீண்டும் ஏடிஎம் சென்று பணத்தை எடுத்த பின் காவல் நிலையம் சென்று அபராதம் செலுத்த எனக்கு கிடைத்த 2000 ரூபாய் நோட்டை தந்தபோது அவர்களிடம் சில்லறை இல்லை. என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துவர நேரம் ஆகியது. அதனால் என் கணவரை அழைத்து எப்படியோ 300 ரூபாய் கட்டி வண்டியை மீட்டினோம். இதற்கு எனக்கு ஐந்து மணி நேரம் ஆனது,” என்றார் உமா. 

இது போன்று நாடு எங்கும் பல கதைகள் பல பிரச்சனைகள். இதனால் பல இடங்களில் மக்கள் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதங்களும் நிகழ்ந்துள்ளது. இனி பெங்களுருவில் இது போன்ற பிரச்சனைகள் நடக்காது என்று கோயல் கூறினார். 

“நாங்கள் எங்களுக்கென கரண்ட் அகவுண்ட் ஒன்றை துவங்க உள்ளோம். அதில் கார்டு மூலம் செலுத்தப்படும் பணத்தை டெபாசிட் செய்ய உள்ளோம்,” என்றார். 

பெங்களூரில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இது விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. முற்றிலும் புதிய சிஸ்டம் வந்தவுடன் எல்லா போக்குவரத்து காவல்துறையினரிடம் இந்த அங்கீகரிக்கப்பட்ட பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்பட்டு, ஆண்ட்ராய்டு கருவியில் இணைக்கப்படும். அதனுடன் ஒரு ப்ரிண்டரும் கொடுக்கப்படும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கிய மத்திய அரசின் இலக்கு மெல்ல எட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. 

ஆங்கில கட்டுரையாளர்: அனில் புதூர் லுல்லா

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags