பதிப்புகளில்

நஷ்டத்தில் சென்ற தொழிற்சாலையை, ரூ.1600 கோடி மதிப்பிற்கு வளர்த்த அதன் தொழிலாளி...

YS TEAM TAMIL
11th Dec 2016
Add to
Shares
169
Comments
Share This
Add to
Shares
169
Comments
Share

தனது தந்தை மற்றும் மூத்த சகோதரரை இழந்த 16 வயது சுதீப் தத்தா செய்வதறியாது தவித்தார். அவருக்கு மேற்படிப்பு முடித்துவிட்டு இன்ஜினியர் ஆகவேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால், தனது சொந்த ஊரான துர்காபூரை விட்டு வெளியேறி மும்பை நோக்கி பயணித்தார். மும்பையில் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளராக பணியில் சேர்ந்தார். ஒரு நாளைக்கு அவரது சம்பளம் 15 ரூபாயாக இருந்தது. 

image


ஆனால் இன்று அவர் 1,685 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் அதிபதி ஆவார். அவர் பேக்கேஜிங் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நுகர்பொருட்கள், சிப்லா, சன் ஃபார்மா, பெர்பெட்டி போன்ற பிரபல ஃபார்மா நிறுவனங்களுக்கு இவரது தொழிற்சாலையில் தான் பொருட்கள் பேகிஜிங் செய்யப்படுகிறது. 

சுதீபின் தந்தை ஒரு ராணுவ வீரர். அவர் பாங்களாதேஷில் போரின் போது குண்டடி பட்டு பல மாதங்கள் சிகிச்சைக்கு பின் இறந்தார். இன்னும் சில நாளில் சுதீபின் சகோதரரும் நோய்வாய் பட்டு இறந்தார். அப்போது சுதீபின் தாய் மற்றும் நான்கு சகோதரிகள் இருந்தனர். அவர்களை காப்பாற்றும் பொறுப்பு சுதீபிற்கு வந்தது. ரிக்‌ஷா இழுத்தும், ஹோட்டலில் பணிபுரிந்தும் வருமானம் ஈட்டி குடும்பத்தை காபாற்றினார். வறுமையோடு இருந்த அந்த போராட்டத்தை தொடர விரும்பாத அவர் பெரிய கனவுகளை சுமந்து மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை சென்றார். 

மும்பையில் வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இல்லை. ஒரு பேகிஜிங் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார் சுதீப். 20 பேருடன் சேர்ந்து ஒரு அறையில் தங்கினார் அவர். தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு நடந்தே சென்றார் அவர். போக்குவரத்து செலவை குறைத்து அந்த பணத்தை ஊரில் உள்ள தன் தாய் மற்றும் சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த தொழிற்சாலை நஷ்டத்தில் போனதால் அதை மூட அதன் உரிமையாளர் முடிவெடுத்தார். ஆனால் சுதீப் அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு,16000 ரூபாய் பணத்தை உரிமையாளரிடம் அளித்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார். அதில் லாபம் ஏற்பட்டால் அதை பங்கு கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் சுதீப். 

அப்போது பேகேஜிங் துறை பெரிய நிறுவனங்களான இந்தியா பாயில்ஸ் அண்ட் ஜிண்டால் லிமிடட், கையில் இருந்தது. வளர்ந்து வரும் துறையான ஃபார்மா துறையை இலக்காக கொண்டு சுதீப் தங்களது பேகேஜிங் பணிகளை அதனை நோக்கி செயல்படுத்தினார். இது பற்றி அவர் லைவ் மிண்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில்,

“இந்த நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வது மட்டும் என் இலக்கு அல்ல, இதை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கி, சர்வதேச நிறுவனங்களான யூனிலீவர், P&G போல் உயரிய இடத்தில் கொண்டு செல்லவேண்டும்,” என்றார். 

நவம்பர் 2008 இல் சுதீப், இந்தியா பாயில்ஸ் நிறுவனத்தை வேதாந்தாவிடம் இருந்து 130 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தினார். இது ஒரு மிகப்பெரிய முடிவாக பார்க்கப்பட்டது. 

“சுதீபின் Ess Dee அலுமீனியம் ஒரு சிறு நிறுவனமாகும். இந்தியா பாயில்ஸ் போன்ற அதிக உற்பத்தி செய்யும் ஒரு பிரபல நிறுவனத்தை வாங்குவது என்ற முடிவு சரியா என்று விவாதங்கள் நிலவியது. Ess Dee வருடத்திற்கு 18000 டன் பாயில்களை தயாரித்தது, அதேசமயம் இந்தியா பாயில்ஸ் அதைவிட 1000 டன்கள் அதிகம் தயாரித்து வந்தது,” என்றார் துறை வல்லுனர் ஒருவர். 

இந்த கையகப்படுத்தல் இந்தியாவில் பேகிஜிங் துறையில் உற்றுநோக்கப்பட்ட ஒரு செயலாகும். இதன் மூலம் Ess Dee அத்துறையில் முதன்மை இடத்தை பிடித்தது என்றே சொல்ல வேண்டும். இன்று சுதீப், தன் நிறுவனத்தை நிலையாக வளர்த்து, 1600 கோடி ரூபாய் மதிப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பேகேஜிங் முறைகளை இவரது நிறுவனம் கையாண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India


Add to
Shares
169
Comments
Share This
Add to
Shares
169
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக