பதிப்புகளில்

ஒரு கிளிக் போதும், சென்னையில் அலுவலக இடம் வாடகைக்கு கிடைக்கும்!

siva tamilselva
13th Nov 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

இந்தியாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகமானது, வருகிற 2021ல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக புராவிடன்சியல் ரியல் எஸ்டேட் இன்வெஸ்டர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் தொழிலின் வளர்ச்சி வருடத்திற்கு 30 சதவீதம் என அந்த அறிக்கை கூறுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பை வழங்கும் துறை ரியல் எஸ்டேட்தான் என சொல்லப்படுகிறது. தற்போதைய ரியல் எஸ்டேட் சந்தையானது 35 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடையதாக உள்ளது. இதன் வருமான வாய்ப்பு 50லிருந்து 60 கோடி. கமர்சியல் ரியல் எஸ்டேட் சேவைகள், விளம்பர விற்பனை தளங்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் போன்றவை சந்தையில் தங்களுக்குரிய பங்கைப் பெறுவதற்காக போட்டியிடுகின்றன. ஆனால் வாடகைக்கு விடுவதில் ஒருசில சிறு நிறுவனங்கள் தவிர அற்பணிப்பு மிக்க வர்த்தக சேவை எதுவும் இல்லை.

image


சென்னையில் தொடங்கப்பட்டுள்ள 'ஆபிஸ்ஜூவோ' (OfficeJuvo) அத்தகைய சேவையைச் செய்து வருகிறது. தொழில்நுட்ப சாத்தியத்துடன் கூடிய ஒரு தளமாக செயல்படும் ஆபிஸ்ஜூவோ, அலுவலக இடங்கள், பணிஇடங்கள், கிடங்குகள், சில்லறை வர்த்தகக் கடைகள், பகிர்ந்து கொள்ளும் இடங்களை வாடகைக்கு விடும் சேவையைச் செய்து வருகிறது. தற்போதைக்கு சென்னையில் மட்டும் இயங்கி வரும் ஆபிஸ்ஜூவோ, விரைவில் மற்ற நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் குறைந்த பட்சமாக 10 நகரங்களை அது கண்டறிந்துள்ளது.

எப்படித் தொடங்கியது?

டி.ஸ்ரீகாந்த் மூளையில் எதிர்பாராத விதமாக உதித்த ஒரு யோசனைதான் ஆபிஸ்ஜூவோ. அவர் முதலில் சிபி டெக்னாலஜிஸ்-இல்தான் தனது பணியைத் தொடங்கினார். இணையதள தொழில் நுட்பம் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நிறுவனங்களில் ஒன்று சிபி டெக்னாலஜிஸ். அந்த நிறுவனத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்த் இண்டியாபிராப்பர்ட்டி.காமில் பணியாற்றினார். அப்போதுதான் இணைய வழி சொத்து விற்பனைத் துறை வளர ஆரம்பித்திருந்தது. மூன்றாவதாக அவர் சேர்ந்த இடம் சுலேகா பிராப்பர்ட்டி. அதுதான் அவரை சொந்தத் தொழிலைத் தொடங்கச் செய்தது. சிந்தனையில் ஏற்பட்ட ஒரு திடீர் திருப்புமுனையால் அந்தத் தொழில் உருவானது.

சொத்து வர்த்தகச் சந்தையில் சுலேகாவின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பழைய புராடக்டுகளை புதிய புராடக்டுகளாக மாற்றுவது பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். தனது யோசனையை சக பணியாளரான ஆதித்யா ராகவிடம் அவர் பகிர்ந்து கொண்டார். ஆதித்யா ராகவ், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் இந்தியாவில் 10 ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பிறகு சுலேகாவில் ஸ்ரீகாந்த் குழுவில் பணியாற்றினார். பார்சிலோனாவில் ஐஇஎஸ்இயில் எம்பிஏ முடித்து விட்டு, சுலோகாவில் ஒரு புராடக்ட் டீம் ஹெட்டாகப் பணியாற்றினார். அவரின் மேற்பார்வையாளர் ஸ்ரீகாந்த்.

ஆதித்யாவும் ஸ்ரீகாந்தும் கூட்டாகச் சிந்தித்த போது, அவர்களுக்கு ஒரு கேள்வி எழுந்தது – ஏன் நாமே இதைச் செய்யக் கூடாது?

அதன்பிறகு அவர்கள் வளர்ந்து வரும் தெற்காசிய சந்தையில் சொத்து வாங்க மற்றும் விற்பதற்கான ஒரு சந்தையாக ஹவுஸ்ஜூவோ.காம் (www.housejuvo.com) தொடங்கினர். ஆனால் அவர்கள் இயங்கியது சென்னையில்தான். அடுத்த இடம் இலங்கை எனத் தேர்வு செய்தனர். அங்கிருந்து வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஹவுஸ்ஜூவோ அனைத்து ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகளையும் இணைய தளத்திற்கு வரச் செய்தது. இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பையர்ஸ் எனப்படும் வாங்குவோருக்கான தகவல்கள் அந்தத் தளத்தில் இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைப் போல் அதற்கு வரவேற்பு இல்லை. நிதி திரட்டுவதும் சிரமமாக இருந்தது. ஆரம்ப கட்டமாதலால் ஏராளமான பணம் செலவாகிக் கொண்டிருந்தது.

சென்னையில் ஒரு அலுவலகம் தொடங்கலாம் என்று அதற்கான இடத்தைத் தேடி அலையும் போது இடம் குறித்த சரியான தகவல்களைப் பெறுவது சிரமமாக இருந்தது. எல்லா இடத்திலும் ஏஜெண்ட்டுகளின் கைதான் ஓங்கி இருந்தது. 2015 பிப்ரவரியில் ஒருநாள் காபிஷாப்பில் இந்தப் பிரச்சனை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது பிறந்தது யோசனைதான் ஆபிஸ்ஜூவோ.

வாடகைக்கு இடம் பிடித்துத் தரும் ஆபிஸ்ஜூவோ

ஒரு அலுவலகத்திற்கான இடம் தேடுவது பெரும் சவால். இது விஷயமாக எப்போதும் பற்றாக்குறையான தகவல்கள்தான் கிடைக்கிறது என்கிறார் ஆதித்யா. ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டையும் இடம் குறித்த தகவல்களைச் சொல்லும் விளம்பரத்தையும் பார்ப்பதுதான் வழக்கமான வழி. ஆபிஸ்ஜூவோ, தனது வாடிக்கையாளர்களுக்காக தகவல்களை கொஞ்சம் கூடுதலாக வழங்குகிறது. "ஆன்லைனிலும், பத்திரிகைகளிலும் சிதறிக்கிடந்த தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக நிறைய வேலை செய்தோம்” என்கிறார் ஆதித்யா. இந்த ஆரம்ப வேலைகள் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆபிஸ்ஜூவோ சொத்து உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டது. இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு புகைப்படம் எடுத்தது. வாடகைக்கு இடம் தேடுவோர் இடத்தின் உரிமையாளரை நேரடியாக தொடர்பு கொள்ள உதவியாக அனைத்து தகவல்களும் அடங்கிய தரவுகளை (டேட்டாபேசை)உருவாக்கியது. ஆபிஸ்ஜூவோ. சொத்து உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதுதான் ஆபிஸ்ஜூவோவின் முதல் வெற்றி. “முதலில் நானே இடத்தின் உரிமையாளருக்கு போன் செய்து, நேரில் சென்று, இடத்தை குடிவருவோர்(டெனன்ட்) எப்படிப் பார்ப்பாரோ அப்படிப் பார்த்துத் தகவல்களைத் திரட்டுவேன். எங்களின் பணியில் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை நிறைவேற்றுவதுதான் எங்களுக்கு முக்கியம்” என்று ஸ்ரீகாந்த் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

வாடகைக்கு விடப்படும் இடங்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் புகைப்படங்களுடன் ஆபிஸ்ஜூவோ இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கிறது. வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் இடம் கிடங்கி, சில்லறை விற்பனைக் கடை, அலுவலகத்திற்கான இடம், பணியாற்றும் இடம் என்று எதுவானாலும் அனைத்துத் தகவல்களையும் தங்கள் தளத்தில் தருவதாகக் கூறுகிறார் ஆதித்யா. “பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் எங்களுக்குத் தொடர்பு இருந்தாலும் நாங்கள் கவனம் குவிப்பதெல்லாம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம்தான்.” என்கிறார் அவர். "ஆபிஸ்ஜூவோ பட்டியலில் 1200 வாடகை இடங்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை முழுவதும் சுமார் 10 லட்சம் சதுர அடிப் பரப்பளவு அதன் பட்டியலில் உள்ளது. நாளொன்றுக்கு 12 புதிய இடங்கள் இந்தப் பட்டியலில் சேர்கின்றன. தேசிய அளவில் இயங்கும் 6 நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றன" என்கிறார் ஆதித்யா. நாளொன்றுக்கு 150 இடம் தேடுவோர் ஆபிஸ்ஜூவோ இணையதளத்திற்கு வந்து செல்கின்றனர். "இதுவரையில் 20 இடங்களை முடித்துக் கொடுத்துள்ளோம்" என்கிறார் ஆதித்யா. தற்போதைக்கு ஆதித்யாவில் 10 நபர்களை கொண்ட ஒரு வலுவான டீம் இயங்கி வருகிறது.

ஆரம்பத்தில் டெனன்ட்டுகள் யாரும் ஆபிஸ்ஜூவோவுக்கு கட்டணம் எதுவும் தரவில்லை. தற்போது அவர்கள் கட்டணம் தருகின்றனர். பதிலாக அவர்களுக்கு ஒரு பெரும் பட்டியலே கிடைக்கிறது. அதிலிருந்து அவர்களுக்குத் தேவையான இடத்தைப் தேர்ந்தெடுக்கின்றனர். எந்த இடம் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதற்கான ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. "அவர்களின் தேவையை அறிந்து கொள்வதற்கு கேள்வித்தாள் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் அதை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து விடும். பிறகு அதற்கு ஏற்ற இடங்களை நாங்கள் அவர்களுக்குப் பரிந்துரைப்போம்" என்று விளக்குகிறார் ஆதித்யா. வாடகைக்கு இடம் தேடுவோர், இடத்தைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆபிஸ்ஜூவோவின் மக்கள் தொடர்பு மேலாளர் அவர்களுடன் சென்று இடத்தைப் பார்வையிட உதவுவார். வாடகை ஒப்பந்தப் பத்திரங்களை எழுதுவதற்கும் ஆபிஸ்ஜூவோ உதவுகிறது.

ஒரே உரிமையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கும் பட்சத்தில் அவை அனைத்திற்கும் குடிவருவோரை கண்டறிய வசதி செய்து கொடுக்கிறது ஆபிஸ்ஜூவோ. இட உரிமையாளரிடம் 15 நாள் வாடகை, தரகு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு ஆறு வருட தற்காலிக குத்தகைக்கு இடம் தேடுவோருக்கும் இடத்தைப் பிடித்துக் கொடுத்து, மாறி வரும் சந்தையில் அவர்கள் வர்த்தகத்தைக் கொண்டு செல்ல வழி செய்கிறது ஆபிஸ்ஜூவோ. 

சரியான தகவல்களை அளிப்பது ஆதித்யாவின் பார்வையில் ஒரு ஆரோக்கியமான தேவை. சில்லறைக் கடைகள் மற்றும் கிட்டங்கிகளின் உண்மையான பிரச்சனை அவர்களுக்குரிய இடத்தைத் தேடுவதுதான். இட உரிமையாளருக்கும் குடிவருவோருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களுக்கு உரிய இடத்தைத் தேடித்தருகிறது ஆபிஸ்ஜூவோ. தரகர்கள் தகவல்களை பெற ஆபிஸ்ஜூவோ உதவுகிறது. வெளிப்படையான உரையாடலுக்கு உதவும் ஒரு நடுநிலையான தளதைக் கட்டமைக்கத்தான் ஆபிஸ்ஜூவோ விரும்புகிறது என்கிறார் ஆதித்யா. ரென்ட்டல் ரியல் எஸ்டேட் என்றால் ஆபிஸ்ஜூவோதான் என்று பெயர் வாங்க வேண்டும். இதுதான் ஆதித்யாவின் விருப்பம்.

இணையதள முகவரி: OfficeJuvo

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags