பதிப்புகளில்

‘தொழில்நுட்பத்தில் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் என்பதை நான் நம்பவில்லை’- பிரதிக்‌ஷா நாயர்

YS TEAM TAMIL
10th Jan 2016
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

பிரதிக்‌ஷா நாயர் கல்லூரியில் பயின்று வரும் பெண் மட்டுமல்ல புதுமைகளின் நாயகி. குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்லும் காலகட்டத்தில் பெண்கள் மீண்டும் தங்களது பணியை தொடரவேண்டும் என்று நம்புபவர் பிரதிக்‌ஷா.

கேரளாவின் இயற்கை அழகு நிறைந்த கொல்லத்தில் பிறந்து வளர்ந்த பிரதிக்‌ஷாவின் குடும்பம் ஒன்பது வருடங்கள் பெங்களுருவில் கழித்த பிறகு, திருவனந்தபுரத்திற்கு நகர்ந்தார்கள். பிறகு படிப்பிற்காக மீண்டும் பெங்களுரு வந்த பிரதிக்‌ஷா தற்போது, இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷனில் ஐந்தாண்டு படிப்பான எம்.டெக் படித்துவருகிறார்.

image


கோடு(Code) உருவாக்கும் பெண்

தனது எட்டாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல், புரோகிராமிங் கற்றதால், கோடிங் மற்றும் புரோகிராமிங்கில் பிரதிக்‌ஷா எப்போதும் ஆர்வமாக உள்ளார். “பல புரோக்ராமிங்களுக்கான கேள்விகளுக்கு வித்தியாசமான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதி என்பதை உணர்ந்துகொண்டேன். ஒன்றைவிட இன்னும் சிறப்பான தீர்வு இருக்குமா? இன்னும் சிறியவகையான கோடுகளை எழுதமுடியுமா? இந்த கேள்விகளுக்கு பதில் தேடுவது அல்லது எனது தேடலுக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் முன்னெடுப்பதையும் கண்டுகொண்டேன். எப்போதெல்லாம் ஒய்வு நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் இதைச் செய்வதை உன்னதமானதாக உணர்ந்தேன்” என்கிறார் பிரதிக்‌ஷா.

கோடிங், புரோகிராமிங்கில் தனக்குள்ள ஆர்வத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறார் பிரதிக்‌ஷா. அவர் புரோகிராமிங் போட்டியில் பங்கேற்பது ஆரம்பமாகி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. தனது முதல் அனுபவம் மிகவும் வித்தியாசமானது என்கிறார் பிரதிக்‌ஷா. “எனது முதல் போட்டி மிகவும் உற்சாகமான ஒன்றாக இருந்தது. என்னால் ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது. அது கடுமையான ஏமாற்றமாக இருந்தது. ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே, இன்னும் கடினமாக உழைத்தால் பல வாய்ப்புகள் உள்ளன என்று நண்பர்கள் ஊக்குவித்து, உறுதுணையாக இருந்தார்கள்” என்கிறார் பிரதிக்‌ஷா.

தொழில்நுட்பத்தில் பெண்கள்

பிரதிக்‌ஷாவின் வகுப்பில் 22 மாணவர்கள், 29 மாணவிகள் பயில்கின்றனர், அதாவது 1:1 சதமானத்தில் இருப்பது அவரை சந்தோஷப்படுத்தும் விஷயம். என்னதான் இருந்தாலும், தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்வது ஆண்கள்தான் என்றால், “தொழில்நுட்பத்தை பெண்களைவிட ஆண்கள் சிறப்பாக கையாளுகிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருதரப்பினரும் அதில் கைதேர்ந்தவர்கள் என்பதே சரி” என்கிறார் பிரதிக்‌ஷா. அவரைப்பொருத்தவரையில், பழைய சிந்தனை, பால்வேறுபாட்டுச் சிந்தனை, ஆணாதிக்க போக்குகொண்ட கல்லூரி வளாகங்கள் ஆகியவைதான் பெண்களை ஐடி உலகிற்குள் நுழைய விடாமல் தடுப்பவை.

வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று பார்க்கும்போது, பிரிதிக்‌ஷா நம்புவது,

“ஐ.டி வேலைகள் ஆர்வமில்லாத ஒன்றாகவோ அல்லது பெண்களிடம் இருப்பதைவிட இன்னும் அதிக திறன்கள் தேவைப்படும் ஒன்றாகவோ பார்க்க வேண்டியிருக்கிறது. மருத்துவம், நர்சிங், கலை மற்றும் பேஷன் டிசைனிங் போன்ற துறைகளில் பெண்கள் சாதித்து காட்டியுள்ளார்கள். இருந்தபோதும், ஐ.டி துறைகளில் பெண்களின் பங்கும் அதிகரித்துள்ளது என்பதையும் பார்க்கமுடியும்” என்கிறர்.

அவரின் தனிமுத்திரை

தொழில்நுட்பம் என்று வந்துவிட்டல், மிகப்பெரிய அளவிலான டேட்டா பகுப்பாய்வு அல்லது அதை கையாளுவதில் பிரதிக்‌ஷா ஆர்வமாக இருக்கிறார். “மிகப்பெரிய டேட்டாவை கையாளுவது அடுத்த மிகப்பெரிய விஷயம், அதேப்போல தற்போது தொழில்நுட்ப உலகத்தில் இருக்கும் அப்ளிகேஷன்கள் மனதை கொள்ளை கொள்பவையாக இருக்கின்றன. மிகப்பெரிய டேட்டாவை பகுப்பாய்ந்து, தரம்பிரித்தல், செயல்படுத்துதல் என டேட்டா விஞ்ஞானிகளுடன் (தானும் ஒரு டேட்டா விஞ்ஞானிதான்) இணைந்து பணியாற்றுவது எனது விருப்பம்” என்று பெருமையுடன் கூறுகிறார் பிரிதிக்‌ஷா.

image


முகநூலின் தலைமை செயல் இயக்குநர் ஷிரேயல் சன்ட்பெர்க், கூகுலின் பாதுகாப்பு இளவரசியான பரிசா தப்ரிஷ் போன்ற தலைவிகளால் தான் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் பிரிதிக்‌ஷா. அதேபோல், சமீபத்திய அகில இந்திய போட்டியில் ‘ஹேக்கர்ரேங்’-இல் மூன்றாவது இடம் பிடித்தது மகிழ்சிகரமான ஒன்று என்று கருதுகிறார். இது எல்லாவற்றையும் விட “ஒரு படி மேலே” என்று பெருமையுடன் கூறுகிறார் பிரதிக்‌ஷா. சகபெண் தோழிகளுடன் பணியாற்றுவது உற்சாகமான ஒன்று என்று வர்ணிக்கிறார் பிரதிக்‌ஷா. 

“எல்லா கேள்விகளுக்குமான பதிலைத் தேடும்படி ஈர்த்த ஒரு நல்ல தலைமையில் தொடங்கினோம். இந்த தொழில்போட்டி, எதிர்காலத்தில் கோடிங்க் துறையில் நல்ல தரத்தை நிர்நயிக்க உதவும் என நம்புகிறேன்” என்கிறார் பிரதிக்‌ஷா.

தொழில் Vs தாய்மை

சின்ன பெண்ணாக இருந்தாலும், குடும்பத்தலைவி ஆகிவிட்ட பெண்கள் எப்படி தொழிலை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பிரதிக்‌ஷாவிடம் கேட்டோம். “திருமணம் அல்லது மகப்பேருக்குப் பிறகு வேலையை விட்டுக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால், எடுக்கும் முடிவு, யாருடைய அழுத்தமும் இல்லாமல் தனிப்பட்ட முடிவாக இருக்கவேண்டும். நல்ல மனைவியாகவோ, அல்லது நல்ல அம்மாவாகவோ இருக்க, வேலையை விடவேண்டும் என்பதே பெண்களின் முடிவாக இருக்கிறது. இருந்தாலும், இரண்டையும் ஒன்றாக பாவிக்கவேண்டும், குறைந்தபட்சம், குழந்தைகள் வளர்ந்த பிறகாவது வேலைக்கு செல்ல பெண்கள் முன்வரவேண்டும்” என்று பெருமூச்சுடன் கூறுகிறார் பிரதிக்‌ஷா.

அடுத்தக்கட்ட பயணம்

எதிர்காலத்தை நினைத்து விறுவிறுப்படையும் பிரதிக்‌ஷா, பட்டப்படிப்பை முடித்துவிட்டு, டேட்டா அறிவியலில் பி.எச்.டி படிப்பு மேற்கொள்ள திட்டம் வைத்துள்ளார். 

“எத்துறையின் டேட்டா அறிவியலை தேர்ந்தெடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை, ஏனென்றால், நான் படித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் ஆண்டிலேயே இன்னும் அதிகமான பாடங்களைக் கற்றறிய வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர்.

தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற வேண்டும் என நினைக்கும் அவரை எது கவர்ந்தது என்று கேட்டோம். “இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு தொழில்நுட்பத்தில் எப்போதும் வாய்ப்புண்டு. இதுதான் என்னை ஈர்க்கும் காரணியாக உள்ளது. ஒருவேளை என்னால் திறன்பட செயல்பட முடியாத நாட்கள் வந்தால், மறுநாளை புதிய நாள் என எனக்குள் நினைத்து தொடங்குவேன். ஏமாற்றம், தூற்றுதல், சோம்பேறித்தனம் அல்லது போட்டி ஆகியவற்றைத் தாண்டி, எதுவானாலும், அடுத்த முறை சிறப்பாகச் செய்ய இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என எனக்குள் சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் பிரிதிக்‌ஷா.

கட்டுரை: தன்வி துபே | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக