பதிப்புகளில்

நடன மங்கை மித்தாலி ராஜ் கிரிக்கெட் வீராங்கனையான கதை..!

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உலகப் பெருமை தேடித்தந்த தமிழ்ப்பெண்..!

7th May 2016
Add to
Shares
288
Comments
Share This
Add to
Shares
288
Comments
Share

தந்தை விமான படை அதிகாரி. அதற்கு ஏற்ப வீட்டிலும் ராணுவ கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கத்தை அப்பா எதிர்ப்பார்த்தார். குடும்பமே அதனை பின்பற்றினாலும் அந்த சிறுமி மட்டும் அதனை பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. எப்போதும் மந்தமாக இருக்கும் சோம்பேரி அவள். பள்ளிக்குக் கூட முதல் மணி அடித்த பின் தான் செல்வாள். அதற்கு ஏற்ப அருகிலேயே பள்ளியும் இருந்தது அவளுக்கு இன்னும் வசதியாகிப் போனது.

இந்த சோம்பேரித்தனத்திலிருந்து அவளை விடுவிக்க தந்தை முயற்சித்ததன் விளைவாக அவளது தம்பியுடன் சேர்ந்து அவளும் கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். கிரிக்கெட் அக்காடமிக்கு சென்ற அவளோ அங்கு போய் வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டிருப்பாளாம். ஆனாலும் விடாப்பிடியாக அப்பாவும், தம்பியும் அவளை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு மூவருமாக மைதானத்துக்கு செல்வார்கள். இப்படியாக பத்து வயதில் கிரிக்கெட் உலகுக்கு தள்ளப்பட்ட அந்த சிறுமிதான் 'பெண் டெண்டுல்கர்' என்று, இன்று பெருமையாக அழைக்கப்படும் கிரிக்கெட் விராங்கனை மித்தாலி ராஜ்..!

image


குடும்பம் தமிழ் என்றாலும் அப்பா விமான படையில் இருந்ததால் ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரில்தான் மித்தாலி பிறந்தார். ஆனால், ஹைதராபாத்தில் உள்ள புனித ஜான்ஸ் பள்ளியிலும், செகந்தராபாத்தில் கேயீஸ் பள்ளியிலும்தான் மித்தாலி ஒரு 'கிரிக்கெட் காதலியாக' மாறி முழு வீச்சிலான பயிற்சிகள் மேற்கொண்டார். பின்னர் படிப்படியாக சாதனைச் சிறுமியாக பரிணமித்து தனது பதினேழாவது வயதில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இன்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக விழங்கும் மித்தாலி உலக ரேங்க் பட்டியலிலும் முன்னணியில் இடம் பெற்றுள்ளார். ஜூன் 26, 1999 ஆம் நாள் அயர்லாந்துக்கு எதிராக கெய்ன்ஸ் மைதானத்தில் விளையாடியதுதான் இவரது முதல் சர்வதேசப் போட்டி. அன்று அவுட் ஆகாமல் 114 ரன்கள் எடுத்து அசத்தினார். 2001, 2002 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக லக்னோவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 

2002, ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி மித்தாலிக்கு மறக்க முடியாத நாள். அன்றுதான் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 214 ரன்கள் எடுத்து கேரன் ரோல்ட்டனுடைய 209 ரன் சாதனையை முறியடித்தார். அப்போது மித்தாலிக்கு பத்தொன்பது வயது மட்டுமே!

இந்த பெண் கிரிக்கெட் புயலுக்கு பரத நாட்டியமும் தெரியும் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பள்ளிப் பருவத்தில் பரதம்தான் அவருடைய கனவாக இருந்தது. பல மேடைகளில் நடனமாடியிருக்கிறார். அன்று மேடைகளில் தனது அபிநய பாவங்களால் பலரை ஈர்த்தவர் இன்று கிரிக்கெட் மைதானத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் உலக ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

"எனது பரத நாட்டிய குரு ஒரு கட்டத்தில் நடனமா, விளையாட்டா.. எது லட்சிய பயணம்..? என்பதை இன்றே முடிவு செய்து கொள் என்று சொன்னபோது, முடிவு எடுப்பது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், அன்று கிரிக்கெட்டை விட்டுவிட்டு மற்றொன்றை தொடர்வது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடைசியில் கிரிக்கெட்தான் எனது பயணம் என்பதை உறுதி செய்தேன்,"

என்று அந்த முக்கிய தருணத்தை விவரித்தார் மித்தாலி.


"நான் கிரிக்கெட் வீராங்கனை ஆகாவிட்டால் டான்ஸர் ஆகத்தான் இருந்திருப்பேன். இன்னும் இரண்டு படி தாண்டினால் அறங்கேற்றம் நடந்திருக்கும்.."

ஆனால், இவர் டான்ஸராக மாறாவிட்டாலும் கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் கூடுதல் நடனமாட வைக்கிறார்.

2002 இல் ஜனவரி 14 முதல் 17 வரை லக்னோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டில் 200 ரன் அடித்த முதல் பெண் என்ற பெயரை பின்னர் மித்தாலிதான் பெற்றார்.

மித்தாலி கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. பெண்கள் கிரிக்கெட் அணி என்றால் அப்போது துச்சமாக மதித்த காலம். பல போராட்டங்களுக்குப் பிறகு இந்திய பெண்கள் அணியை உலகறியச் செய்தவர் மித்தாலி ராஜ். அதற்கு இந்திய அரசு, 2003 இல் அர்ஜுனா விருதும், 2015 இல் பத்மஸ்ரீ விருதும் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து ஐ.சி.சி. தர வரிசை பட்டியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த பட்டியலில் இடம் முதல் இந்தியப்பெண்ணும் இவர்தான்.

இவரது வெற்றிக்கதை பல பெண்களுக்கு ஆக்கமாகவும், ஊக்கமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றி: Midday

நன்றி: Midday


2016, மே மாதம் 3 ஆம் தேதி நிலவரப்படி அவர் பெற்றுள்ள புள்ளிகள் :

-- 164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளளர்.

அதில் ஐந்து முறை சதம் அடித்துள்ளார்.

-- 42 போட்டிகளில் அவுட் ஆகாமல் விளையாடி உள்ளார்.

இதுவும் ஒரு உலக சாதனை.

-- 59, 20:20 போட்டிகளில் விளையாடி 1488 ரன்கள் குவித்துள்ளார்.

சராசரி 34.6

-- 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி,16 இன்னிங்க்ஸ்களில் 663 ரன்கள் எடுத்துள்ளார்.

சராசரி 34.6 அவருடைய உயர்ந்த ஸ்கோர் 214.

மித்தாலி வெற்றிகரமான வீரர் மட்டுமல்ல சிறந்த கேப்டனும் கூட. பல போட்டிகளில் அவர் தலைமையில் வரலாறு பேசும் வெற்றிகளும் நடந்துள்ளது. , ஒருநாள், 20:20 என்று மூன்று வகை போட்டிகளிலுமே இவர் கேப்டனாக இருந்துள்ளார்.

இன்று தனது 33 வயதில் ஆல் ரவுண்டராக பேட்டையும், பந்தையும் லாவகமாக கையாண்டு வருகிறார். மித்தாலி பெயரில் ஒன்றல்ல இரண்டல்ல பல சாதனைகள் பெண்கள் கிரிக்கெட் உலக பட்டியலில் பதிவேறிக் கொண்டே செல்கிறது.!

கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர். 

தமிழில் ஜெனிட்டா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'நாங்களும் போற்றப்பட வேண்டியவர்கள்’- இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற உழைக்கும் தமிழக இளம் நட்சத்திரம் விஷால் மனோகரன்! 

Add to
Shares
288
Comments
Share This
Add to
Shares
288
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக