பதிப்புகளில்

'ஆசியாவின் 50 சிறந்த பெண் தொழிலதிபர்கள்' பட்டியலில் இடம்பெற்ற எட்டு இந்திய பெண்கள்!

YS TEAM TAMIL
15th Apr 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

இந்தியாவில் பல பெண்கள் தொழில்முனைவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு வல்லமைமிக்க வணிக தேசமாக இந்தியாவின் செல்வாக்கு மற்றுமொரு முறை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பதிப்பகமான ஃபோர்ப்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான “ஆசியாவின் 50 சிறந்த தொழிலதிபர்கள்” பட்டியலில் இந்தியப் பெண்களான நீட்டா அம்பானி மற்றும் அருந்ததி பட்டாசார்யா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் ஏசியாவின் ஏப்ரல் மாத இதழில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஆறு இந்தியப் பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் போர்ட் ஆப் டைரக்டர் மற்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் ஃபவுண்டர்-சேர்பெர்சன் நீட்டா அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குனர் அருந்ததி பட்டாசார்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Mu Sigma நிறுவனத்தின் CEO அம்பிகா தீரஜ் 14 இடத்திலும், Welspun இந்தியாவின் CEO மற்றும் கூட்டு நிர்வாக இயக்குநர் தீபாலி கோயென்கா 16-வது இடத்திலும், ல்யூபின் நிறுவனத்தின் CEO வினிதா குப்தா 18-வது இடத்திலும், ICICI வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO சந்தா கோச்சார் 22-வது இடத்திலும், VLCC ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிறுவனர் வந்தனா லூத்ரா 26-வது இடத்திலும், Biocon இந்தியாவின் முதல் STEM-queen நிறுவனர் மற்றும் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 28-வது இடத்திலும் உள்ளனர்.  

image


நீட்டா அம்பானி ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் பிஸினஸ் டுடே, இந்தியா டுடே, FICCI போன்றவை அவரை கௌரவித்துள்ளன.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL அணி) மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீட்டா. அது மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனமான IMG-யுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாயிண்ட் வென்சரையும் மேற்பார்வையிடுகிறார். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் தொண்டு நிறுவனத்தின் சேர்பெர்சனாக, கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இவரது முக்கிய பொறுப்பாகும். “ஃபர்ஸ்ட் லேடி ஆப் பிஸினஸ்” என்கிற ஃபோர்ப்ஸின் கவர் ஸ்டோரியில் அவரது கணவர் முகேஷ் அம்பானி, “எங்களது கன்ஸ்யூமர் பிஸினஸில் அவர் தொடர்ந்து பங்களித்து வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. Jio மற்றும் ரீடெய்ல் இரண்டிலும் கவனம் செலுத்துகிறார். திறமைசாலிகளை ஒருங்கிணைக்கிறார். அவர்களை ஒரு குழுவாக மாற்றுகிறார். இலக்கு நோக்கி அவர்களுடன் பயணிக்கிறார்” என்று விவரிக்கிறார்.

கடந்த வருட பட்டியலுடன் ஒப்பிடுகையில் அருந்ததி பட்டாசார்யா 16 இடங்களை முந்தியுள்ளார். பட்டியலில் நீட்டாவிற்கு அடுத்தபடியாக இருப்பவர் அருந்ததி பட்டாசார்யா. இவரது முக்கிய பொறுப்பு குறித்து ஃபோர்ப்ஸ் விவரிக்கையில்வ் “பட்டாசார்யா ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார். பெருகிவரும் பேட் லோன் டிசம்பர் மாதத்தில் $11 பில்லியனாக இருந்ததால் நிகர லாபம் 60 சதவீதம் சரிந்து சமீபத்தில் $190 மில்லியனாக உள்ளது” என்று கூறியுள்ளது.

சந்தா கோச்சார் கடந்த வருட பட்டியலில் 19வது இடத்தில் இருந்தார். இந்த வருடம் 3 இடங்கள் கீழிறங்கி 22வது இடத்தில் உள்ளார். அதே போல கிரண் மஜும்தார் ஷா 2015-ல் டாப் 20-ல் இருந்தவர் இந்த வருடம் 8 இடங்கள் கீழிறங்கி 28-வது இடத்தில் உள்ளார்.

இந்தியன் யூனிகார்னின் முதல் பெண் CEO-வாக பொறுப்பேற்ற பின் அம்பிகா தீரஜ் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவரது கணவரால் உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு அவர் தலைமை தாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரது முதல் பெரிய க்ளையண்டை எதிர்கொண்டபோது அவரது குழந்தைக்கு ஒரு வயது. பிப்ரவரி 2016 வரை CEO வாக இருந்த அவரது கணவர் அனைத்து பொறுப்புகளையும் அம்பிகாவிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அம்பிகாவின் கணவர் HuffingtonPost நேர்காணலில் கூறியபோது “என் மனைவி வடிவமைப்புத்துறை சார்ந்தவர். என்னுடன் பணிபுரிந்தவர்களில் அவர்தான் செயல்முறைவடிவில் வலுவானவர்” என்கிறார்.

Welspun இந்தியாவின் CEO தீபாலி கோயென்கா பொறுப்பேற்கும் செய்தி கேட்டு அவரது நிறுவனத்தின் நலன்விரும்பிகள் சிலர் முதலில் மகிழ்ச்சியடையவில்லை என்று நினைவுகூர்ந்தார். ஆனால் அவரது அறிவுரை மற்றும் வழிகாட்டுதலினால் நிறுவனத்தின் வருமானம் பன்மடங்கு உயர்ந்து மார்ச் 2015-ல் நிகர லாபம் $81 மில்லியனாகவும் வருவாய் $790 மில்லியானவும் இருந்தது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனமான ல்யூபின் நிறுவனத்தின் CEO வினிதா குப்தா சர்வதேச சந்தையில் கவனம் செலுத்துகிறார். நிறுவனத்தின் ஆண்டுவருவாய் $1.7 பில்லியனில் 75 சதவீதம் சர்வதேச சந்தையின் பங்களிப்பாகும். 25 வயதில் நிறுவனத்தில் சேர்ந்து சர்வதேச சந்தையில் நுழைவதற்கு உதவினார். 2005-ல் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் உலகின் மிகப்பெரிய மருந்து விற்பனை சந்தையான US சந்தையில் நுழைந்தார். இதுவே ப்ராண்டெட் செக்மெண்டில் கால்பதிக்கவும் ஜெனெரிக் மார்கெட்டாக விரிவாக்கப்படவும் உதவியது என்றும் இந்தியாவின் ஐந்தாவது வெற்றிகரமான பிஸினஸ் ரோல் மாடல் என்றும் ஃபோர்ப்ஸ் விவரிக்கிறது.

அழகு மற்றும் ஆரோக்கியத்தின் சாம்ராஜ்ஜியமான VLCC நிறுவனத்தின் நிறுவனர் வந்தனா லூத்ரா. 14-15ல் இந்த நிறுவனத்தின் வருவாய் $131 மில்லியன். 44 சதவீத ஷேர்ஹோல்டரான லூத்ரா இந்த வருடம் $90 மில்லியன் IPO திட்டமிட்டுள்ளார். வொகேஷனல் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தியா மற்றும் நேபாளத்தில் 70 கேம்பஸ்கள் VLCC Institute of Beauty & Nutrition-க்கு உள்ளன.

ஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீ வித்யா 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பில்லியன் டாலர் பெண்கள் !

இந்த ஐம்பது ப்ளஸ் வயதுள்ள அசத்தல் பெண்களைப் போல ஒருநாளும் நீங்கள் மாற இயலாது தெரியுமா?

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக