பதிப்புகளில்

சமூக வலைத்தளங்களில் மக்களைத் தக்க வைக்கும் கலை- தெரிந்து கொள்ளுங்கள்!

YS TEAM TAMIL
17th Jul 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

வாரத்திற்கு வெளியாகும் நான்கு ஆப்களில் ஒரு ஆப், அதன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து கொள்ள முடியாமல் தோல்வி அடைகிறது. சராசரியாக ஒரு ஸ்மார்ட்போனில் 30 செயலிகள் இருக்கின்றன. அதில், சில ஆப்கள் மட்டும்தான் தினமும் பயன்படுத்தப்படுகிறது. நிறைய ஆப்கள் பயன்படுத்தபடாமலே இருந்து, பின் டெலீட் செய்யப்படுகிறது.

ஏன் இந்த ஆப்களால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து கொள்ள முடிவதில்லை? இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ய, என் போன் ஆப்களை நான் பயன்படுத்தும் முறையை கவனித்தேன். எனது இ-மெயில் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்ட்இன் போன்ற சமூக வலைதள செயலிகள், அத்துடன் ஓலா, உபெர் போன்ற டாக்ஸி ஆப்கள் மற்றும் ஒரு உடல்நலம் குறித்த ஆப், இவையாவும் நான் தினமும் பயன்படுத்தும் ஆப்கள் ஆகும். இதோடு, செல்லும் வழிகள் அறிந்து கொள்ள கூகிள் மேப்ஸ், அமேசான் மற்றும் ஃபிள்ப்கார்ட் போன்ற ஷாப்பிங் ஆப்களும் பயன்படுத்துகிறேன். இவைத் தவிர என் போனில் இருக்கும் மற்ற ஆப்களோடு எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவை என்னை தொந்தரவும் செய்வதில்லை. தினசரி தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஆப்கள் என்றுமே மாறாது; நிலையானதாய் பயன்படுத்துவர். ஆனால், மன உணர்ச்சிகளோடு தொடர்பு கொள்ளும் ஆப்களை, வாடிக்கையாளர்களிடம் தக்க வைத்து கொள்ளவது தான் கடினமானது.

image


மொபைல் ஆப்களை போலவே, சமூக வலைத்தளங்களும் ட்ரில்லியன் பைட்ஸ் கணக்கிலான தகவல்களை வீடியோக்கள், வாக்கியங்கள் மற்றும் படங்கள் மூலம் வெளியிடுகின்றன. ஆப்களும் சரி, வலைத்தளங்களும் மற்றும் அதன் பக்கங்களும் சரி, பயன்படுத்துவோர்களை என்றுமே தக்க வைத்து கொள்ள, மக்களின் உணர்ச்சிகளோடு ஒன்றிப்போகுமாறு அமைவது அவசியமாகும்.

ஆனால், மக்களிடம் நல்ல இணைப்பு ஏற்படுத்திக் கொண்டதாய் ஒருசில நிறுவனங்களை மட்டுமே என்னால் காண முடிகிறது. புது போஸ்ட்கள் வந்திருக்கிறதா என்று நான் தினசரி பார்க்கும் சமூக வலைத்தள பக்கங்கள் என நான்கு நிறுவனங்கள் உண்டு. அந்நிறுவனங்கள் மக்களைத் தக்க வைத்துகொள்ளும் காரணங்கள் என்ன? இதோ பார்ப்போம்...

1. ரெட்புல் (REDBULL)

இந்த நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு 42 மில்லியன் லைக்ஸ் குவிந்துள்ளது. வீடியோக்கள் தான் அவர்கள் வியூக கருவி. ஏன் மக்கள் இந்த பக்கத்தை திரும்ப திரும்ப, ஏதேனும் அப்டேட் இருக்கிறதா என்று தொடர்ந்து பார்க்கிறார்கள்? ஏனெனில், இவர்கள் பக்கத்தில் ரெட்புல் படங்கள் கொண்ட ரெட்புல் பற்றின வீடியோக்கள் காண்பது அரிது. விளையாட்டு வீரர்கள் குறித்த வீடியோக்கள் தான் இந்த பக்கத்தில் அதிகம் இருக்கும். அதனால் இது ஒரு சக்தி கொடுக்கும் பானம் எனும் கருத்தைத் தாண்டி, ஒரு நல்ல பயனாய் அதன் ப்ரண்டையும் தகுதியையும் தக்கவைத்து கொள்கிறது. ரெட்புல் ஆனது, மக்கள் அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு பொருளை மட்டும் அவர்கள் விற்கவில்லை. மக்கள் ஈடுப்பட்டு வாழ விரும்பும் ஆற்றல்மிக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2. கோக-கோலா (COCA-COLA)

கோக-கோலா, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு ப்ராண்ட் ஆகும். இதன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு 94 மில்லியன் ரசிகர்களும், ட்விட்டர் பக்கத்திற்கு 3.2 மில்லியன் பாளோயர்சும் இருக்கின்றனர். இதற்கென தனி கடைகள் இல்லை. ஆனாலும் அவர்களுக்கென தனி ப்ராண்ட் இடத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது விளம்பர பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கின்றனர். உலக வெப்பமயமாக்கலால் பனிகரடிகள் அழிவதை குறித்த இவர்களது பிரச்சாரம், பார்ப்போரின் தனி மன உணர்ச்சிகளை உறுத்துவது போலான உணர்ச்சியை உருவாக்கியது.

அந்தந்த இடத்திற்கு ஏற்றது போல, இவர்கள் பிரச்சாரங்கள் அமைக்கின்றனர். நம் இந்தியாவில், எல்லைகளால் மக்களிடையே இருக்கும் இடைவெளியை எப்படி தகர்ப்பது குறித்த பிரச்சாரம் ஒன்றை இவர்கள் செய்தனர். இது போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சாரங்கள் மூலம் மக்களை லாக் செய்துவிடுவதாலே, கோக -கோலா பக்கங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்கின்றனர்.

3. ஆர்கானிக் மாண்ட்யா (ORGANIC MANDYA)

மது சாந்தன் எஸ்.சி. எனும் ஒரு தொழில்முனைவர், அமெரிக்காவில் செய்துவந்த லாபகரமான வேலையை விட்டுவிட்டு, வருங்காலம் பசுமை காண, இந்தியாவிற்கே திரும்பி வந்து விவசாயிகளுடன் வேலை பார்த்தார். இவர் அமெரிக்காவில் பல மல்டி-நேஷனல் ப்ராண்ட்களில் பணிபுரிந்த அனுபவசாலி. இந்த ஆர்கானிக் மாண்ட்யா, நான்கு மாத விற்பனையில் ஒரு கோடி ரூபாய் உருவாக்கியது. இவர் நகர வாசிகள் மற்றும் விவசாயிகளிடம் இணைப்பு ஒன்றை உருவாக்கினார். இவரது பிரச்சாரங்கள் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நகர வாசிகளிடம் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணமும் அமைந்தது. நிதி வழங்கும் பிரச்சாரங்கள் மூலமும், இயற்கை வழி வேளாண்மை குறித்த தினசரி அப்டேட் மூலமும், நம் உணவை நாமே தயாரிப்போம் எனும் உணர்ச்சி மூலமும், ஆறு மாதத்தில் இவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 25,000 ரசிகர்கள் உருவாகியுள்ளனர். உலகளவில் 6 மில்லியன் மக்களிடம் இவரது ஆர்கானிக் மாண்ட்யா விழிப்புணர்வு சென்றடைந்துள்ளது.

4.பதஞ்சலி பொருட்கள் ( PATANJALI PRODUCTS)

மார்க்கெட்டிங் தான் பொருள் விற்பனைக்கு காரணம் என்பதை பொய்யாக்கியுள்ளார் பாபா ராம்தேவ். இன்று நாடளவில் அதிகமாக விற்பனை ஆகும் பொருட்களில் பதஞ்சலி பொருட்களும் ஒன்றாகும். இவரது நெய், தேன், சயவன்ப்ரஷ், ஜூஸ், இன்ஸ்டன்ட் நூடில்ஸ், ஷாம்பூ போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும் ப்ராண்ட் ஆகும். சிறுகடை வணிகர்கள் எல்லாம், பதஞ்சலி பொருட்களை விற்பனை செய்வதற்காகவே, அவர்கள் கடைகளில் தனி ரேக்குகள் வைத்துள்ளனர். இதற்கு ஃபேஸ்புக்கில் மட்டுமே 1லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். மக்கள் ஏன் இவருடைய பதஞ்சலி பொருட்களோடு இணைப்பு ஏற்படுத்தியுள்ளனர்? இயற்கையான பொருட்கள் கொண்டு நல்ல தரத்தோடு குறைந்த விலையில் இந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன எனும் நம்பிக்கையை மக்களிடம் இவர் உருவாக்கியுள்ளார். பதஞ்சலி பொருட்களை பயன்படுத்திப் பாருங்கள் என்று கூறுவதன் மூலம், மக்களை திரும்ப திரும்ப இவர் சமூக தள பக்கங்களைப் பார்க்க வைக்கிறார். 

மேற்கூறிய நான்கு நிறுவனங்களுக்கும் பொதுவாய் இருப்பவை :

1. உங்களால் மக்களின் உணர்ச்சிகளோடு ஒரு இணைப்பு ஏற்பட செய்ய முடிந்தால், உங்கள் சமூக தளங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருப்பர்.

2. இந்த இணைப்பும் தக்க வைத்தலும் உடனடியாக உருவாகிவிடாது. காலம் கடக்கும்; பொறுமை அவசியம்.

3. பார்ப்போரை ஆர்வத்துடன் பார்க்கவைக்க, தகவல்களை வீடியோ, ஆடியோ, அனிமேஷன், படங்கள், ஈர்க்கும் வாக்கியங்கள் என பல ஊடக முறைகளில் உருவாக்குங்கள்.

4. உங்கள் சமூக வலைத்தளங்களைப் பின்பற்றுபவர்களிடம் உரையாடுங்கள். கேள்விகள் கேட்டு, போட்டிகள் வைப்பதன் மூலம் உங்கள் ப்ராண்ட் மீது அவர்களுக்கு இருக்கும் கருத்துகளைப் பெறமுடியும்.   

கட்டுரையாளர் : சிவானந்தா கோடீஸ்வர் 

(பொறுப்புதுறப்பு : இந்த கட்டூரையில் பகிரப்பட்ட கருத்துகள் யாவும், கட்டுரையாளரின் கருத்துகள் ஆகும். யுவர்ஸ்டோரியின் கருத்துகள் அல்ல.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags