பதிப்புகளில்

3 நாட்களில்- ரூ.3 கோடி, 90 நொடிகளில்- ரூ.25,000: எளிதாக வர்த்தகக் கடன் வழங்கும் நிறுவனம்!

ஹைபிரிட் சந்தையான கேபிடல் புளோட், வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுடன் இணைந்து, 10 சதவீத சொந்த பங்களிப்புடன் கடன் வழங்குகிறது. 

YS TEAM TAMIL
6th Sep 2018
Add to
Shares
24
Comments
Share This
Add to
Shares
24
Comments
Share

மின்வணிக மேடையான பிபா பெல்லாவின் இணை நிறுவனரான சுச்சி பாண்ட்யாவுக்கு செயல்முறை மூலதனம் தேவைப்பட்ட போது, அதிக அளவிலான ஆவணங்கள் தேவை மற்றும் மெதுவான ஒப்புதல் காரணமாக, பணம் கைக்கு வருவது நேரம் எடுக்கக் கூடிய நீளமான செயல்முறையாக இருப்பதை உணர்ந்தார். இந்த நிலையில் தான், அவர் Capital Float எனும் இணைய மேடை பற்றி கேள்விபட்டார். 

இந்த நிறுவனம், கடன் வழங்குவதற்கு தேவையான நீளமான செயல்முறையை குறைத்து, மூன்று நாட்களில் கடன் வழங்கியது. சுச்சி இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 1.2 முதல் ரூ.1.5 சதவீத வட்டியில் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.

கேபிடல் புளோட் நிறுவனர்கள் சசாங், கவுரவ்

கேபிடல் புளோட் நிறுவனர்கள் சசாங், கவுரவ்


கடன் வழங்க குறைவான நேரம் தேவைப்படுவதே, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் டிஜிட்டல் மேடையான கேபிடல் பிளோட்டின் பெருமைக்குறிய விஷயமாக இருக்கிறது. வழக்கமான வங்கிகளில் இருந்து இந்நிறுவனத்தை வேறுபடுத்திக்காட்டும் அம்சமாகவும் இருக்கிறது. 2016 ஏப்ரல் முதல் 2017 ஜனவரி வரை பத்து மாதங்களில் 7,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 கோடி அளவு கடன் வழங்கியிருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

பெரிய அளவிலான கடன் வழங்குவதற்காக முதல் தேவைப்பட்ட ஏழு நாட்கள் அவகாசம் இப்போது 3 நாட்களாக குறைந்துள்ளது. சிறிய கடன்கள் 90 நொடிகளில் கூட வழங்கப்படுகின்றன. நிறுவனம், ரூ.25,000 முதல் ரூ. 3 கோடி வரை கடன் வழங்குகிறது.

2013 ல் நிறுவப்பட்ட கேபிடல் புளோட் நிறுவனம், ரிசர்வ் வங்கியிடம் ஜென் லெபின் லிட் எனும் பெயரில் வங்கிசாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட நிறுனத்தின் டிரேட்மார்க் ஆகும். துவங்கிய நாள் முதல் நிறுவனம், ஸ்னேப்டீல், பேடிஎம், ஷாப்குளூஸ், இபே, அலிபாபா, அமேசான், யாத்ரா, எம்ஸ்வைப், பைன் லேப்ஸ், ஐசிஐசிஐ மெர்சண்ட்ஸ் சர்வீசஸ் மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது.

பெங்களூருவில் தலைமையகம் கொண்ட இந்நிறுவனம் தில்லி, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் அலுவகம் கொண்டு, எஸ்.ஏ.ஐ.எப், செக்கோயா, அஸ்படா மற்றும் கிரியேஷன் இன்வெஸ்ட்மண்ட்ஸ் கேபிடல் மேனஜ்மண்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது.

“சசாங்க் (ரிஷ்யசிருங்கா, கேபிடல் பிளோட் இணை நிறுவனர்), நான் மற்றும் நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் இணைந்து, பரிந்துரை பெறுவது, விண்ணப்பங்களை பரிசீலிப்பது, பணம் பட்டுவாடா செய்வது என எல்லாவற்றையும் நாங்களே செய்தோம்,”

என்கிறார் இணை நிறுவனர்களில் ஒருவரான கவுரன் இந்துஜா.

ஹைபிரிட் சந்தை

நாட்டில் டிஜிட்டல் யுகம் துவங்கியதில் இருந்து நிதிச்சேவைகள் வழங்கும் பிரிவு, டிஜிட்டல் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, பெருகளவு மாற்றத்தை கண்டு வந்திருக்கிறது. வழக்கமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த பிரிவில் தங்களுக்கான அனுபவம் பெற்றிருந்தாலும், நிதிநுட்ப நிறுவனங்களுடனான கூட்டு மூலம் கிடைக்கக் கூடிய சாத்தியங்களையும் உணர்ந்து கொண்டன.

ஹைபிரிட் சந்தையான கேபிடல் புளோட், வங்கிகள் மற்றும் இதர நிதி சந்தைகளுடன் இணைந்து கடன் வழங்குகிறது. கடன் அளவில் 10 சதவிதம் பங்களிக்கிறது. இணைந்து வழங்கப்படும் கடன்களை பொறுத்தவரை அதை பெற்றவர் ஒரே கணக்கில் தான் திரும்பிச்செலுத்துகிறார், தனிதனியே அல்ல. கேபிடல் புளோட் மற்றும் கடன் வழங்கிய நிறுவனங்கள் அளித்த விகிதத்திற்கு ஏற்ப பணம் பிரிக்கப்பட்டு தனித்தனி கணக்குகளுக்கு சென்று சேர்கின்றன.

வாரா கடன்

கேபிடல் புளோட்டின் வாரா கடன் விகிதம் ஒரு சதவீதம் என்கிறார் கவுரவ். இது இத்துறை சராசரியை விட குறைவானது. விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிப்பது வாரா கடனை குறைவாக வைத்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் உலகில் உள்ள முக்கிய நிறுவனங்ளுடனான கூட்டு, இந்த பரப்பில் செயல்படும் நிறுவனங்கள் பற்றிய தரவு நூலகத்தை உருவாக உதவியிருக்கிறது.

இந்த தரவுகள், விண்ணப்பிக்கும் நிறுவனங்களை புரிந்து கொண்டு பரிசீலனை செய்ய உதவுகிறது. மேலும் இதன் மூலம் தனிப்பட்ட மற்றும் புதுமையான செயல்முறை மூலதனத்தை வழங்க முடிகிறது. விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது 2,000 க்கும் மேற்பட்ட தரவு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

பிடிஐ தகவல்படி, தனியார் துறை வங்கிகளுக்கான மொத்த வாரா கடன், 2016, டிசம்பர் 31 ல், ரூ.48,380 கோடியாக உயர்ந்துள்ளது. 2016 , மார்ச் 31ல் இது ரூ.70,321 கோடியாக இருந்தது. பொதுத்துறை வங்கிகளின் மோசமான கடன், 2016 ஏப்ப்ரல்-டிசம்பர் காலத்தில் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது.

“450 தனிநபர்களை உள்ளடக்கிய கேபிடல் புளோட் குழு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றக்கூடிய புதுமையான செயல்முறை மூலதன தீர்வுகளை உருவாக்கி வருகிறது. 2016 நிதியாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்கியுள்ளோம். எங்கள் வட்டி விகிதம் 16 முதல் 20 சதவீதம் என்கிறார் கவுரவ்..

8 முதல் 12 வாரங்கள் வங்கிகள் கடன் வழங்க எழுத்துக்கொள்வது போல அல்லாமல், கேபிடல் புளோட்டிற்கு குறைந்த பட்ச ஆவணங்களே தேவை மற்றும் 3 நாட்களில் தொகை வழங்கப்படுகிறது என்கிறார். ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வழியே எப்போது வேண்டுனாமானாலும் விண்ணப்பிக்கலாம்.
image


சேவைகள்

பே லேட்டர்: ஈட்டுறுதி இல்லாத கடன் வசதி. இதன் கீழ் கடன் பெறுபவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்குள் பலமுறை தொகை பெறலாம். பணத்தை திருப்பி செலுத்தி, கடன் வசதியை ரீசெட் செய்து, இதை சுழலும் கடனாக மாற்றிக்கொள்ளலாம். பெறப்படும் தொகை மீது மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.

மளிகைக் கடை கடன்: இந்தியாவில் உள்ள மளிகைக் கடைகளுக்கு நுண் கடன் வழங்க கேபிடல் புளோட், இந்தியாஸ்டேக்குடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கடன்கள் 90 நொடிகளுக்குள் வழங்கப்படுகின்றன. இதில் காகித பணிகளே கிடையாது, டிஜிட்டல் முறையில் சரி பார்க்கப்பட்டு, கடன் பெறுபவரின் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை அல்கோரிதம்கள் பரிசீலிக்கின்றன.

ஆன்லைன் செல்லர் நிதி: கேபிடல் புளோட் இந்தியாவின் மிகப்பெரிய மின்வணிக நிறுவங்களின் கூட்டு மூலம், ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு, வேகமான செய்லமுறை மூலதன கடன் வழங்குகிறது. கடன் பெறுபவர்கள், மாத இறுதியில் பெரிய தொகை அளிக்கும் சுமையை தவிர்க்க 15 நாட்களுக்கு ஒரு முறை பணத்தை திரும்பி அளிக்கலாம்.

டாக்ஸி கடன்: டிரைவர்கள் தங்கள் சொந்த டாக்ஸி வாங்கி உபெர் அல்லது ஓலாவில் சொந்த வாகனத்துடன் இணைய வழி செய்கிறது. இந்நிறுவனங்கள் டிரைவர் வருமானத்தில் இருந்து வாராந்திர தொகையை கழித்துக்கொண்டு அந்த தொகையை கேபிடல் புளோட் கணக்கிற்கு மாற்றுகின்றன. அதன் பிறகு டிரைவர் கணக்கிற்கு பணம் அளிக்கப்படுகிறது. வாராந்திர தவணை டிரைவர்களின் சுமையையும் குறைக்கிறது.

வணிகர் முன்பணம்: கேபிடல் புளோட் நிறுவனம், எம்ஸ்வைப், பைன்லாப்ஸ், பிஜிலிபே மற்றும் ஐசிஐசிஐ மெர்சண்ட் சர்வீசஸ் ஆகியவற்றுடன் கூட்டு வைத்துள்ளதால், வணிகர்கள் தங்கள் மாதாந்திர விற்பனை மற்றும் கார்டு பயன்பாடு அடிப்படையில் 200 சதவீத ரிவர்ஸ் பைனான்ஸ் கடனுதவி பெறலாம்.

இன்வாய்ஸ் நிதி: இன்வாய்ஸ்களை பணமாக்கி, வர்த்தக செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கடன் பெறுபவர்கள் கேபிடல் புளோட்டின் இன்வாய்ஸ் நிதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவர்களின் இந்த சேவை வர்த்தக செயல்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடிய நிதியை இன்வாய்ஸ் அடிப்படையில் அளிக்கிறது. கடன் பெறுபவர்கள் தங்கள் ரொக்க நிலைக்கு ஏற்ப ஒரு முறை பணம் திரும்பி செலுத்தும் வசதியை நாடலாம்.

குழு நிதி: இது ஈட்டுறுதி இல்லாத வர்த்தகக் கடன். பி2பி வர்த்தகர்கள், சேவை வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு பொருத்தமானது பல வகை வர்த்தங்களுக்கு ஏற்ற வகையில் கடன் காலம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளாக அமையலாம்.

“வணிகர் ரொக்க முன்பணம், மற்றும் பே லேட்டர் வசதி, நிறுவனத்தின் 35 சதவீத கடன் வழங்களில் பங்கு வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் டாக்சி கடனில் 550 சதவீத வளர்ச்சி கண்டுள்ளோம்,” என்கிறார் கவுரவ்.

எளிய கடன் வசதி

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக அரசு பல்வேறு திட்டங்களை, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எளிய கடன் வசதி பெற அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கிரெடிட் காரண்டி பண்ட் ஸ்கிம், ஈட்டுறுதி தொடர்பான நெறிமுறைகள் வெளியீடு, முத்ரா திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியா பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன் அறிக்கை படி, இந்தியாவில் நிதித்துறையில் வங்கித்துறை பெரும் பங்கு வகிக்கிறது. இவற்றில் வங்கிகள் 64 சதவீத சொத்துக்களை கொண்டுள்ளன.

இதுவரை வழக்கமானதாக இருந்த கடன் சேவைத் துறை இப்போது நிறைய ஸ்டார்ட் அப்களை கண்டு வருகிறது. பினோமினா, லெண்டிங்கார்ட், ரூபிக் உள்ளிட்ட நிறுவனங்கள் இப்பிரிவில் செயல்பட்டு வருகின்றன. பினோமினா கடந்த ஆண்டு மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டியது. லெண்டிங்கார்ட், பெர்டில்ஸ்மன் இந்தியா இன்வஸ்மண்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றிடம் இருந்து 32 மில்லியன் டாலர் பெற்றது. பல முதலீட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

இந்தியாலெண்ட்ஸ் மற்றும் பி2பி சேவையான பேர்செண்ட், குடோஸ் பைனாம்ன்ஸ் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. ஏர்லிசாலரி போன்ற செயலிகளும் உள்ளன.

“வட்டி மற்றும் செயல்முறை வருமானம் மூலம் எங்கள் வருவாய் வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் 150 நகரங்களில், 20,000 வாடிக்கையாளர்களை பெற்று ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் வழங்க விரும்புகிறோம்,” என்கிறார் கவுரவ் நம்பிக்கையுடன்.

இணையதளம் : Capital Float

ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சவுத்ரி | தமிழில்;சைபர்சிம்மன் 

Add to
Shares
24
Comments
Share This
Add to
Shares
24
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக