பதிப்புகளில்

கனவு வேலை தேடுபவர்களுக்கு உதவும் மும்பை ஸ்டார்ட் அப்

cyber simman
12th Nov 2015
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
எனது அப்பாவும், அம்மாவும் பிரிந்த போது அம்மா என்னை வளர்க்கத் துவங்கினார். எனக்கு மூன்று வயதாக இருந்த போது அப்பா இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அம்மாவும் இறந்துவிட்டார். அதன் பிறகு என் வாழ்க்கை நிலையில்லாத ஒன்றானது. ஒரு நண்பர் வீட்டில் இருந்து இன்னொரு நண்பர் வீட்டிற்கு மாறி வளர்ந்தேன். அவர்கள் குடும்பத்தின் கருணை தான் என்னை வளர்த்தது.

சில நேரங்களில் இரவு வீட்டிற்கு திரும்பும் போது, அந்த நிலையில்லாமை எப்படி மீண்டும் என் மீது குவியத் துவங்கியிருக்கிறது எனும் முரண் என்னை தாக்கும். ஆனால் எனது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதை நோக்கி ஒரு படி முன்னேறி இருக்கிறேன் என்பது ஆறுதல் அளிக்கும்.

ஆசான் ஜாப்ஸ் இணையதளத்தின் #AasaanNahiHai ஃபேஸ்புக் பக்கத்தில் இது போன்ற நெகிழ வைக்கும் கதைகளை பார்க்கலாம்.

ஐஐடி போவாயில் படித்த தினேஷ் கோயல் (Dinesh Goel) தனது கல்லூரி நண்பர்கள் கவுரவ் டோஷ்னிவால் (Gaurav Toshniwal) மற்றும் குணால் ஜாதவுடன் (Kunal Jadhav) இணைந்து 2014 நவம்பரில் ஆசான் ஜாப்ஸ்.காம் (Aasaanjobs.com ) இணையதளத்தை துவக்கினர். மும்பையைச்சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், கிரே காலர் வேலைகள் என்று சொல்லப்படும் திறன் சார்ந்த பணிகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சரியான வாய்ப்புகளை தேடித்தருகிறது.

ஆசான் ஜாப்ஸ் நிறுவனர்கள்

ஆசான் ஜாப்ஸ் நிறுவனர்கள்


தனிநபர்களை சுயசார்பு மிக்கவர்களாக ஆக்க உதவுவதோடு, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை உருவாக்கி, பெரும் சந்தைபங்கை பெறுவதும் தான் தங்களின் பொதுவான நோக்கம் என்று இதன் நிறுவனர்கள் குறிப்பிடுகின்றனர். வேலைவாய்ப்பு துறையில் பெரிய வாய்ப்பு இருப்பதையும் இந்த துறை இன்னமும் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பதையும் உணர்ந்ததாக சொல்கின்றனர்.

இன்னமும் சரியான பயன்படுத்தப்படாத இந்த துறையில் உள்ள பாபாஜாப் (Babajob) மற்றும் நேனோஜாப் (Nanojob) போன்ற நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு டிரைவர்கள் முதல் வீட்டு வேலை செய்பவர்கள் வரை 1000 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை பெற உதவுகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள் வீட்டு வேலைக்கான பெண்களை அமர்த்திக்கொள்ளும் புக்மைபாய் (BookMyBai) தளம் மூலம் இதில் துணை பிரிவுகளில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கின்றன.

நிறுவப்பட்ட நாள் முதல் ஆசான் ஜாப்ஸ், 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வருகிறது. குரோஃபர்ஸ், யுரேகா போர்ப்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். டெலிவரி பிரிவுக்கு அதிக தேவை இருப்பதாகவும் அதன் பிறகு கள விற்பனைக்கு அதிக தேவை இருக்கிறது என்றும் தினேஷ் கூறுகிறார். இந்த தளத்தில் 75,000 பயனாளிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ஆசான் ஜாப்ஸ் குழுவினர்

ஆசான் ஜாப்ஸ் குழுவினர்


நிறுவனம் தற்போது மும்பை, நவி மும்பை, தானே ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தில்லி மற்றும் பெங்களூருவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களில் பிரதிநிதிகளை நியமித்து, வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி வருகிறது.

தடைகள்

வாய்ப்புகளை கொண்ட சந்தை என்றாலும் நிறுவனத்திற்கு எல்லாம் சுலபமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில் ஆய்வு மேற்கொண்ட போது தங்கள் இலக்கு பயனாளிகளில் 70 சதவீதம் பேர் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தினாலும் அவர்கள் தொழில்நுட்ப பயன்பாட்டில் திறன் பெற்றிருக்கவில்லை என தெரிய வந்தது. ஆக, இலக்கை பயனாளிகள் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வைப்பது சிக்கலாக இருந்தது.மேலும் துறையின் பொதுவான தன்மையால், நிறுவனங்கள் வேலை நாடுபவர்கள் மீது அதிருப்தி கொண்டிருதன. பலர் வேலைக்கு விண்ணப்பித்தனரே தவிர நேர்க்காணலுக்கு வருவதில்லை.

மைல்கல் நிதி

ஜனவரி மாதம், ஆசான் ஜாப்ஸ்.காம் ஐடிஜி வென்ச்சர்ஸ் மற்றும் இன்வெண்டஸ் கேபிடல் பாட்னர்ஸ் மூலம் 1.5 டாலர் நிதி திரட்டியது.

நிதி பெற்று, மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளதாக தினேஷ் கூறுகிறார். முதல் இலக்கு குழுவை பெரிதாக்குவதாக அமைந்தது. ஏப்ரலில் நிறைவடைந்த இந்த செயலின் போது ஐடிடியில் இருந்து அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது இந்த குழுவில் 130 பேர் உள்ளனர். தொழில்நுட்ப குழுவில் 30 பேர் உள்ளனர். (பொறியியல் மற்றும் வடிவமைப்புக்குழு).

இரண்டாவது இலக்கு பயனர்களை ஈர்ப்பது மற்றும் மூன்றாவது இலக்கு சேவையை உருவாக்குவது.

சேவை உருவான விதம்

சேவையை உருவாக்கும் போது ஆசான் ஜாப்ஸ் குழு மூன்றரை மாதங்களுக்கு பயன்பாட்டு நோக்கிலான சோதனையை நடத்தியது. இதில் கிடைத்த புரிதல் மற்றும் கருத்துக்கள் சேவை உருவாக்கத்தில் உதவின.

தங்கள் சேவையின் தனித்தன்மையாக தினேஷ் கூறுவது; "சேவையை பயன்படுத்துவதில் உள்ள பயனர் அனுபவத்தில் தான் எங்கள் சேவையின் புதுமை உள்ளது. இலக்கு பயனாளிகளிடம் கவனம் செலுத்தி அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற சேவைகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அவர்கள் தினசரி பழக்கங்களை சேவையில் பிரதிபலிக்கச்செய்கிறோம்.தொழில்நுட்பம் ஒரு சாதனம் தான். அதில் தரவுகளை எப்படி அனுப்புகிறோம் என்பது தான் முக்கியம்”

வேலை வாய்ப்புகளுக்கான விவரிப்பை சரியாக புரிந்து கொள்ள உதவும் 90 விநாடி ஆடியோ விளக்க அறிமுகம் இதற்கு ந்லல உதாரணம்.

சமீபத்தில் இந்த ஸ்டார்ட் அப் வேப் (WAP) இணையதளத்தை துவக்கியது. வழக்கமான இணையதளத்தை விட இது 06% அளவில் குறைவானது இது. ஏற்கனவே இந்தியில் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில் மாராத்தியிலும் அறிமுகம் செய்ய உள்ளனர். இரு மொழிகளிலும் செயலி அறிமுகமாக உள்ளது.

இந்த தளத்தில் பயனாளிகள் வசதிக்காக சாட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சரியான அனுமதியுடன் பயனாளிகள் அனைவரும் இந்த வசதி மூலம் உரையாடும் வசதியை பயன்படுத்த வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்கால திட்டம்

வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்னணியை சரி பார்க்கும் வசதியை தில்லியை மையமாக கொண்ட நிறுவனம் மூலம் அளிக்கவும் உள்ளது.

இன்று இந்த துறையில் உள்ளவர்கள் பணி நியமனத்தின் தார்மீக தன்மை பற்றி அக்கறை கொள்கின்றனர். நிறுவனங்கள் விண்ணப்பிப்பவர்கள் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கருத்து தெரிவிக்கும் வசதியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தினேஷ் கூறுகிறார். விண்ணப்பித்து விட்டு நேர்க்காணலுக்கு வராமல் இருப்பவர்களை சிவப்பு கொடி மூலம் குறிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதே போல வேலைக்கு வருபவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் நிறுவனங்களும் சிவப்பு கொடி மூலம் உணர்த்தப்படும்.

இணையதள முகவரி: Aasaan

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக