பதிப்புகளில்

உயிரின் மதிப்பை பற்றிய விழிப்புணர்வு தரும் ஆரோக்கிய அமைப்பு ஹெல்த்5சி

இன்று நம்மில் பலர் தங்கள் உடல் நலனைப் பற்றிப் பெரிதாக கவலைப் படாமல் இருக்கின்றனர். அதன்பால் முன்னெச்சரிக்கையான நடவடிக்கை மேற்கொள் ள ஊக்குவிக்கிறது ஹெல்த் 5 சி .

pothiraj purushothaman
7th Nov 2015
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

இன்று நம்மில் பலர் தங்கள் உடல் நலனைப் பற்றி பெரிதாக கவலைப் படாமல் இருக்கின்றோம் . ஒருவருக்கு உடலில் பிரச்சனை இருந்தாலும் சோதனைகள் செய்து, டாக்டர் ஏதாவது பெரிதாகச் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் மருத்துவரைச் சென்று பார்ப்பதில்லை. மேற்சொன்ன அதிர்ச்சிகரமான நிகழ்வு மிட்டிஷ் சிட்ணவிஷையும், பாலா உன்னி கிருஷ்ணனையும் ஹெல்த் 5சி, என்ற அமைப்பைத் துவக்கத் தூண்டுகோலாக இருந்தது. வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்று அதன் மீது அக்கறை இல்லாமல் இருப்பதை விட அதன்பால் முன்னெச்சரிக்கையான நடவடிக்கை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது பெங்களூரைச் சேர்ந்த பிடிஎச்பி டெக் நிறுவனம் "ஹெல்த் 5சி" (Health5C).

image


சிட்ணாவிஷ், எம்பாசிஸ் நிறுவனத்தில் முதன்மை மற்றும் தனிமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும், ஒபோபே நடவடிக்கைகளில் துணைத் தலைவராகவும் பணியாற்றிவந்தார். இந்திய நிர்வாகவியலல் பயின்று, ரீடிஃப் டாட்காம், ஆஃ மொபைல் குளோபல், ஒபோபே, நோக்கியா இண்டியா போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து இருபதாண்டு அனுபவம் பெற்றவர்.

ஹெல்த் 5 சி இன் இணை நிறுவனர் மிட்டிஷ் சிட்ணாவிஷ்

ஹெல்த் 5 சி இன் இணை நிறுவனர் மிட்டிஷ் சிட்ணாவிஷ்


ஹெல்த் 5 சி இன் இணை நிறுவனர் மிட்டிஷ் சிட்ணாவிஷ் கூறுகிறார் –

நான் 2011 இல் ஹெல்த் 5 சி அமைப்பை 2 லட்ச ரூபாய் முதலீட்டில் துவக்கினேன். இங்கு வாடிக்கையாளர்களின் உடல் நலன் குறித்து அச்சமூட்டாத, தெளிவாக உணர்த்தக் கூடிய, அவர்களுக்கு நட்பார்ந்த ஒரு ஆரோக்கிய அமைப்பை உருவாக்குவது தான் எங்களது நோக்கமாக இருந்தது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே ‘பயன்பாட்டிற்கு எளிதானது’ என்பது தான்.

மற்ற பிற துவக்க நிறுவனங்களுக்கு இருப்பது போலவே நிதி முக்கியமான பிரச்சனையாக இருந்தது. அதனைச் சமாளிக்க நிறுவனத்தின் மேம்பாட்டுக் குழுவினரின் எண்ணிக்கையை 27 இல் இருந்து 5 ஆக குறைத்தோம். இன்று ஹெல்த் 5 சி, 11 இணை ஊழியர்களுடன் செயலாற்றுகிறது.

நிறுவனத்தின் தலைப்பில் உள்ள 5 சி என்பது முழுமை, தொடர்ச்சி, இணக்கம், குடிமக்கள், சிறப்புக் கவனம் ஆகியவற்றின் அர்த்தத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்கள் ஆகும். தொழில்நுட்பம் அதிகமுள்ள இந்த காலகட்டத்தில், மருத்துவத்துறை மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் தான் இன்று எங்களது ஹெல்த் 5சி யின் தேவை வருகிறது.

ஹெல்த் 5சி இன்று வரை இந்தியாவில் உள்ள அப்பல்லோ டெண்டல் துவங்கி எஸ்ஆர்எல் லேப்ஸ் வரை, அப்பல்லோ கிளினிக், வாசன் ஐ கேர் என 139 மருத்துவமனைகளுடனும் நோய் கண்டறி மையங்களுடனும் தொழில்முறை உறவு கொண்டுள்ளது. அதற்கும் மேலாக துவக்கத்திலேயே இரண்டு பெரிய காப்பீட்டு நிறுவனங்களையும் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனகளயும் அதன் வாடிக்கையாளர்களாக தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அதன் தனிச் செயலியை பயன்படுத்தும் 4,50,000 பேரைப் பெற்றுள்ளது ஹெல்த் சி.

‘’இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்துவதன் மூலமாக ஹெல்த்5சி, நிதியைத் திரட்ட முடிகிறது’’ என்கிறார் அதன் இணை நிறுவனர் பாலா உன்னி கிருஷ்ணன்.

இணை நிறுவனர் பாலா உன்னிகிருஷ்ணன்.

இணை நிறுவனர் பாலா உன்னிகிருஷ்ணன்.


மாத்திரை அடையாளம் காணும் செயலி

ஹெல்த் 5 சியின் செயலி ஆண்ட்ராய்டிலும், ஐ ஓஎஸ்லும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அச் செயலியைப் பயன்படுத்தி எந்த நோய்க்கு என்ன மாத்திரை என்று எளிதாக அடையாளம் காண முடியும். அத்தகைய தகவல்கள் அச்செயலியில் திரட்டி வைக்கப்பட்டுள்ளது. மாத்திரையை அடையாளம் காண்பதற்கு வசதியாக அதன் நிறம், அளவு, எடை, உள்விபரங்கள் போன்ற அனைத்துத் தகவல்களும் செயலியில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலமாக தரமற்ற தயாரிப்பு மாத்திரைகளை மக்களால் இனங்காண முடியும். இச்செயலியை ஹெல்த் சி 5 நிறுவனம் தனது அமெரிக்கப் பங்காளியின் உதவியுடன் கட்டமைத்துள்ளது.

உன்னி கிருஷ்ணின் எச்சரிக்கை

அமெரிக்காவில் மருந்துகளை இணைய இணைப்பின் மூலமாக வாங்கும் பழக்கம் உண்டு. அது இந்தியாவில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அங்கு மருந்துகள் மிகக் குறைந்த அளவில் ஷிப்பிங் செய்யப்படுகின்றன. தரமற்ற மருந்துகளை அடையாளம் காண ஹெல்த் 5 சியின் செயலி அமெரிக்காவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா.. அல்லது அன்றாடப் பயன்பாட்டிற்காக உள்ளூரில் சில்லறை விற்பனைக்கு வந்ததா எனபதை அவர்களால் இனங்காண முடியும்.

பெரும் வீச்சுடனும் வரையறைக்குள் காணும் வளர்ச்சி

மருத்துவ நுட்பச்சந்தை 18.20% வளர்ச்சி விகிதத்தில் ஆண்டுதோறும் ரூபாய் 3500 கோடிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக KPMG அறிக்கை கூறுகிறது. மருத்துவ நிர்வாகம் எண்ணிக்கையைக் கடந்து வெகுதொலைவிற்குச் செல்லவேண்டும் என்ற இலக்கை ஹெல்த் 5 சி கொண்டிருப்பதாகக் கூறுகிறார் சிட்னாவிஸ்.

நெக்ஸ்ட்ஜென் டேட்டா சென்டர் சர்வீசஸ் உள்ளிட்ட பெங்களூரில் உள்ள பல மருத்துவமனைகள், மும்பையிலுள்ள சுகாஸ் டைக்னோஸ்டிக், அபயா ஹாஸ்பிடல்ஸ், பிஜிஎஸ், பூஜா ஹாஸ்பிடல்ஸ், எக்ஸ்பிரஸ் கிளினிக், கேர்பட்ரோன்ஸ் போன்ற பலர் ஹெல்த் 5 சி உடன் தொடர்புறவு கொண்டுள்ளனர். இதுவல்லாமல் இத்துவக்க நிறுவனம் காப்பீட்டு முகவர்களில் ஒன்றான அல்மோண்டஷ், ஜேஎல்டி போன்றோருடன் இணைந்து பணியாற்றுகிறது.

"நோயாளிகளுக்கு அனைத்து விபரங்களும் தரப்பட்டு அதிலிருந்து வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவர்களது கைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை ஹெல்த் 5சி விரும்புகிறது’’ என்று கூறுகிறார் உன்னி கிருஷ்ணன்.

மருத்துவம் வழங்கும் 200 அமைப்புகளுடன் ஹெல்த் 5சி பிணைப்பு கொண்டு, அவர்களுக்கு சேவை வழங்கக் கூடியதாகவும், பலனளிக்கும் துணை நிறுவனமாகவும் செயல்படுகிறது.

மருத்துவத்தில் துவக்க நிறுவனமான ஹெல்த் 5சி தற்பொழுது பங்களாதேஷில் இருந்து செயல்படும் செல்பேசி பணியாளராகச் சேவையாற்றி அதன் பதினோரு மில்லியன் குரல் வாடிக்கையாளர்களை தகவல் வாடிக்கையாளர்களாக மாற்ற உதவிபுரிந்து வருகிறது.

பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படும் சூழலில் ஹெல்த் 5சி தன்னை மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஈடுபடுத்திக் கொள்கிறது. மேலும் ‘கட்டுடல் அடிப்படையிலான’ மற்றும் ஆரோக்கியம் பெறல் அடிப்படையிலான போட்டிகளையும் நடத்தி வருகிறது.

தற்போது ஊழியர்கள் தங்கள் உடல் நலம், ரத்த அழுத்தம், மிகைக் கொழுப்பு, தொண்டை அழற்சி, எடை போன்ற ஆரோக்கிய அம்சங்களில் அக்கறை காட்டாதவர்களாக இருக்கின்றனர். ஹெல்த் 5சி இந்த விஷயங்களில் அனைத்துத் தகவல்களையும் திரட்டி ஊழியர்களுக்குத் தேவையான தொடர் மருத்துவ பரிசோதனைகளுக்கும், அதற்கு உரிய சிகிச்சைகளுக்கும் உதவி வருகிறது.

உன்னி கிருஷ்ணன் எடுத்துரைக்கிறார் –

‘’நமது சொந்த ‘எடைக்குறைப்பு சவாலை’ பெரு நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றன. சுய உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம், கட்டுடல் திட்டம், எடைக் குறைப்பில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஆரோக்கியமுடன் விளங்குதல், ஆகியவற்றிலும் அக்கறை காட்டி வருகிறது.

பணியாளர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக ஹெல்த் 5சி, தனது நிறுவனர்கள் உட்பட 15 முழுநேர ஊழியர்களை நியமித்துள்ளது. அதன் பெரு நிறுவன ஊழியர்களின் நலத்திட்டம் தலைமை ஆரோக்கிய நிபுணரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது.

டிஜிட்டல் ஆரோக்கிய அமைப்பு வளர்ச்சி

டிஜிட்டல் ஆரோக்கிய அமைப்பின் மூலமாக சுய மருத்துவ அக்கறை கட்டமைக்கப்படுகிறது. மருத்துவர் – நோயாளி உறவு கடந்த மூன்றாண்டுகளில் பெருமளவு முன்னேறி உள்ளது. நோயாளிகளைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருத்தல், தனிப்பட்டவர்களின் மருத்துவப் பதிவுகளை ஆவணப்படுத்துதல், தொலைபேசி மருத்துவம், தொலை மருத்துவத் திறன்வளர்ப்பு, நோயாளிக்கான கற்றல் சாதனங்கள் வழங்கல், மருத்துவ மேலாண்மைத் திறன் வழங்குதல், பகிர்வு முடிவெடுக்கும் சாதனங்கள், எம்ஹெல்த் செயலி போன்ற ஒருங்கிணைந்த மருத்துவ வசதிகளை ஹெல்த் 5சி முன்னரே வழங்கி வந்துள்ளது. அதன் மாதாந்திர பணப் பரிவர்த்தனை ரூபாய் 21500 இருந்து 23000 வரை இருக்கிறது.

முன்னோக்கிய வளர்ச்சி

அவர்களது வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹெல்த் 5சி இந்தியா, இஎம்இஏ மற்றும் சார்க் நாடுகளில் பத்து மில்லியன் சந்தாதாரர்களுக்குச் சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஹெல்த் 5சி’ யின் (சந்தா வடிவிலான) பன்னாட்டு நிறுவனத் திட்டங்கள் நல்ல லாபம் ஈட்டித் தருவதாகவும் இருக்கின்றன. துவக்க நிறுவனமாகிய அது 2016 நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளவிருப்பதாக எதிர்நோக்குகிறது.

சிட்ணாவிஸ் கூறுகிறார்

ஹெல்த் 5சிக்கான சாத்தியங்கள் – மருத்துவ சேவை தேவைப்படுவோருக்கும் அளிப்போருக்கும் இணைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தகவல்களையும், எச்சரிக்கைகளையும், சேவைகளையும் பகிர்ந்து தருவதிலும் அளவில்லாமல் புதைந்து கிடக்கிறது.

இணையதள முகவரி: Health5C

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags