பதிப்புகளில்

"தொழில்முனைவர்களே நிகழ்வின் நட்சத்திரங்கள்" - டெக்ஸ்பார்க்ஸில் உதிர்ந்த உத்வேக முத்துகள்!

1st Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

யுவர்ஸ்டோரியின் 'டெக்ஸ்பார்க் 2015'-ல் தொழில்முனைவர்களும் வல்லுநர்களும் வெற்றி மந்திரங்களாக உதிர்த்த முத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய மேற்கோள்களில் சில:

image


சந்தைதான் ராஜா என்கிறபோது, நிதியே ராணியாக இருக்கிறது.
- டேருஹிடே சாட்டோ, பீனோஸ்
ப்ளே ஸ்டோர்களில் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாகத் திகழ்கிறது மெசேஜிங் ஆப்ஸ்.
- குனால் பாட்கே, டீம்சாட்
வாழ்க்கையில் ஆகச் சிறந்தவை என எவற்றையுமே மதிப்பிட முடியாது; அதுபோலவே, ஒரு ஸ்டார்ட்அப் என்பதை மெட்ரிக்ஸால் அளவிட முடியாது.
- ஷைலேந்திர சிங், செகோயா கேபிடல்
நிதி முதலீடு என்பது வெற்றிக்கு ஈடானது அல்ல. நிதி முதலீடு என்பது ஒரு தொடக்கம்தான்; அதை எச்சரிக்கை மிகுந்தது என்றும் சொல்லலாம்.
- திராஜ் ராஜாரம், மூ சிக்மா
ஒரு மகத்தான குழுவை உருவாக்குவதில் சமரசங்களுக்கு இடம் அளிக்காதீர்.
- அமிதாப் மிஷ்ரா
நீங்கள் எல்லாவற்றையும் இழக்கும்போது, உங்கள் குடும்பம் மட்டுமே உங்களை வரவேற்று, நிபந்தனையற்ற அன்பு செலுத்தும்.
- கே.வைத்தீஸ்வரன்
தோல்வி என்பதற்கு இப்போது 'நடைமுறை அனுபவம் தேவை' என்பது பொருள்.
- மோஹித் சக்ஸேனா, இன்மொபி
ஸ்டார்ட்அப்-களில் சூழலும் பார்வையும் தெளிவாகக் கட்டமைக்கும் பட்சத்தில், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு கஷ்டப்பட வேண்டிய தேவை இருக்காது.
- பைஜூ ரவீந்திரன்
உள்ளூர் மொழிகளின் பயன்பாடுதான் கணினியில் தீர்க்கப்படாத பன்மடங்கு பிரச்சினையாகத் திகழ்கிறது.
- ஷாஹில் கினி, அஸ்படா
உள்ளூர் மொழிகளில் டிஜிட்டல் கன்டென்ட்டுகளை வழங்குவதன் மூலம் மொழி ரீதியிலான மிகப் பெரிய இடைவெளியை போக்கிடும் பாலமாக செயல்பட முடியும்.
- அர்விந்த் பானி, ரிவேரி லாங்குவேஜ் டெக்னாலஜிஸ்
உங்கள் பக்கத்தில் யாருமே இல்லாதபோது, ஒரு மிகப் பெரிய பார்வையாளர்கள் கூட்டத்துக்கு முன்பு தனி ஒருவராக நிற்பது மிகவும் கடினம்.
- ஷ்ரத்தா ஷர்மா, யுவர்ஸ்டோரி
தொழில்முனைவர்களே நிகழ்வின் நட்சத்திரங்கள்.
- க்ளாஸ் ஓஸ்காம், சிக்னல் ஹில்
யோசனை என்பதே முக்கியமானவற்றில் தலையாயது. அதை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்பதான் விஷயமே.
- முரளி கார்த்திக்
எல்லாருமே சாதாரணமானவர்களாகவே தொடங்குகிறார்கள். ஆனால், அனுபவங்கள்தான் அவர்களை அசாராதணமானவர்கள் ஆக்குகின்றன.
- நிகேத் தேசாய், ஃபிளிப்கார்ட்
ஒரு கலாச்சாரத்தை எட்டுவது என்பது அதைக் கட்டமைப்பதை விட எளிது. எனவே, நீங்கள் சிறியவராக இருக்கும்போது தொடங்கிவிடுங்கள்.
- நவீன் திவாரி, இன்மொபி
கலாச்சாரத்தைக் கட்டமைப்பதற்கான தொகுதிகளாகத் திகழ்வது மதிப்புகளே.
- ஸ்ரீகாந்த் கர்னகோட்டா, மைக்ரோசாஃப்ட்
சின்ன இடங்களில்தான் அடுத்த புரட்சி அரங்கேற இருக்கிறது.
- மவுசம் பட், ஃபிளிப்கார்ட்
நிறுவனங்களை சிறந்த அமைப்புகள் ஆவதற்கு புதிய சந்தைகள் உதவுகின்றன.
- ஷஷாங் என்.டி, பிராக்டோ
நம் தொடர்பு, ஈடுபாடு, தலைமை, மறு உருவாக்கம் மற்றும் மறு யோசனை ஆகியவற்றுடன் நம் அடிப்படை அமைப்புக் கொள்கையை மாற்றுவதேயன்றி, சீர்குலைவு என்பது வேறேதுமில்லை.
- சுஷ்மா ராஜகோபாலன், ஐடிசி இன்ஃபோடெக்
நம் தலைமுறையின் சீர்குலைவு என்பதே இணையம்தான். அதுவே பில்லியனை நோக்கிய தொழில்நுட்ப முயற்சிகளுக்கு வசதிகளை வழங்கும்.
- மோகன்தாஸ் பை

'டெக்ஸ்பார்க்ஸ் 2015'-ன் ஸ்பான்ஸர்கள்: சேகோயா கேபிடல், ஐசிஐசிஐ பேங்க், மணி ஆன் மொபைல், மைக்ரோசாஃப்ட், சிக்னல் ஹில், ஐபிஎம் ப்ளூமிக்ஸ், பிடபிள்யூசி, ஆட்டம் டெக், டீம்சார்ட், கர்நாடக அரசு, இன்டெல், ரப்ளர், டெய்லி ஹன்ட், ரிவேரி, லாகினெக்ஸ்ட் மற்றும் பேயூபிஸ்; பார்ட்னர்கள்: - டஃப் அண்ட் ஃபெல்ப்ஸ், டக்ஸ்மந்த்ரா, டைன்அவுட், எக்ஸோடெல், 360ரைடு, யோகா பார், சாய் பாயின்ட், ஜிடபிள்யூசி; நமது மீடியா பார்ட்னர்கள்: டிவி9, ஃபார்ச்சூன் இந்தியா, ரெட் எஃப்எம் மற்றும் டெக்கான் ஹெரால்டு

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக