பதிப்புகளில்

நாவில் நீர் ஊற வைக்கும் சீன உணவகம் ‘கஃபே ஜேட்’

23rd Nov 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

உணவுத் தொழில்நுட்பத் துறையில் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. உங்கள் நகரில் ருசியான உணவு கிடைப்பதற்கு வழி செய்கின்றன. புதுமையான முறையில் உணவை வீட்டில் வந்து டெலிவரி செய்யவும் வகை செய்கின்றன.

எனது ஊரான சண்டிகாரில் ஒரு சின்ன ரெஸ்டாரான்ட்டுக்குச் சென்றேன். தரமான உணவில் புதுமை படைக்கும் ரெஸ்டாரன்ட் அது. நகரின் ஒதுக்குப் புறமான பகுதியில் அமைந்துள்ள சின்ன சீன ஃபுட் பார்லர். பெயர் "கஃபே ஜேட்" (Cafe Jade). தரமான உணவும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் வெகு பிரசித்தம். உணவு விரும்பிகளின் விருப்பமான ரெஸ்டாரன்ட் கஃபே ஜேட்.

image


முதன் முதலாக அந்த ரெஸ்டாரன்ட்டைப் பார்க்கும் எவரும், அதில் அமர்ந்து சாப்பிட முடியும் என்று நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சிறிய ரெஸ்டாரனட் அது. டெல்கோ மாடலில் அமைந்திருந்தது. டெல்கோ மாடல் என்றால் உணவைப் பார்சல் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டிய அளவில்தான் இருக்கும். ஆனால் இதற்கு நேர் மாறாக, சண்டிகர்வாசிகள் மத்தியில் மட்டுமல்லாமல், பஞ்ச்குல்லா மெஹாலி, ஸிராக்பூர் மற்றும் கல்கா போன்ற புறநகர்ப் பகுதியில் உள்ள உணவு விரும்பிகள் மத்தியிலும் பிரபலமான ரெஸ்டாரன்ட்டாக விளங்குகிறது கஃபே ஜேட். சீன மற்றும் தாய்லாந்து பாணியில் அங்கு பரிமாறப்படும் ஸ்பெஷல் சாஸ் மற்றும் சாலெட்டை வாடிக்கையாளர்கள் சந்தோஷமாக ருசிக்கின்றனர்.

சீன மற்றும் தாய்லாந்து உணவு விரும்பிகள் நிறையப் பேர் உண்டு. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் சீன மற்றும் தாய்லாந்து உணவுகள், இந்திய உணவுகளோடு ஒத்துப் போகாமல் ஒவ்வாமையை ஏற்படுத்துவதால், விருப்பமிருந்தாலும் அந்த உணவுகளைச் சாப்பிடால் ஒதுங்கியிருக்கின்றனர். ஆனால் கஃபே ஜேட் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டது. நகரின் 38ம் பிரிவில் அமைந்திருந்த அந்த ரெஸ்டாரென்ட்டில் பசையம் இல்லாத, சர்க்கரை இல்லாத, பால் இல்லாத, பருப்பு வகைகள் இல்லாத சீன மற்றும் தாய்லாந்து பாணி டிஷ்கள் வழங்கப்படுகின்றன. மென்மையான உணவைச் சாப்பிட விரும்புவோருக்கு கலோரி குறைந்த சீன மற்றும் தாய்லாந்து உணவு வகைகளும் இங்கு கிடைக்கின்றன. அனேகமாக தாய்லாந்து மற்றும் சீன உணவுவுடன் இந்தியா உணவை இணைக்கும் முதல் இணைப்புப் பாலம் ‘கஃபே ஜேட்’தான்.

சண்டிகரிலும் மொஹாலியிலும் உள்ளவர்கள், ஆர்டர் செய்து தங்களுக்குத் தேவையான சீன மற்றும் தாய் உணவு வகைகளை வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமோ அல்லது டெலிவரியின் போதோ அவர்கள் உணவுக்கான பணத்தை செலுத்தலாம்.

பி.கே.குரானா

பி.கே.குரானா


கஃபே ஜேட் இன் உரிமையாளர் பி.கே.குரானா. ஒரு பத்திரிகைக் குழுமத்தில் மார்க்கெட்டிங் இயக்குனராக வேலை பார்த்தவர். பொதுமக்கள் தொடர்பில் விரிவான அனுபவமும் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற பேரார்வமும் கொண்டவர். 1999ல் வேலையை விட்டு விட்டு பிஆர் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான அனுபவங்களையும் சவாலான தொழில்களையும் ஏற்று நடத்தும் துணிச்சலையும் பெற்றார் குரானா.

சீன மற்றும் தாய் உணவுகளில் குரானாவுக்கு இருந்த காதல்தான் ஆரோக்கியமான சீன உணவுகளை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இங்குள்ளவர்களுக்கும் அதே சுவையை, ஆர்டர் செய்தால் போதும் வீட்டிலிருந்தே சுவைக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்.

தரம், போதுமான அளவு, சுவை, சுத்தம் இவையே கஃபே ஜேட்டின் தாரக மந்திரம். கஃபேவை ஒரு கோவிலைப் போல சுத்தமாக வைத்திருக்கிறோம். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் ஒரு மதச் சடங்கு போல பயபக்தியுடன் பின்பற்றுகிறோம். இதனால்தான் எங்களிம் வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வருகின்றனர். ஜேட்டின் உணவு ருசியாகவும் இருக்கும். வாடிக்கையாளர்களுக்குப் பஞ்சமில்லை. சண்டிகரிலும் மொஹாலியிலும் டெலிவரி எப்படி செய்வது என்பதை மட்டும் நாங்கள் கவனித்துக் கொண்டால் போதும். அக்கம்பக்கமாக எங்கள் பணியாளர்கள் எண்ணிக்கையையும் தேவைக்கு ஏற்றார் போல் அதிகப்படுத்தினோம். அவர்களுக்கு பயிற்சி ஏற்பாடு செய்தோம். ஆன் லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை நடந்தது. மொத்தத்தில் வர்த்தகம் லாபகரமானது.

பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளும், கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும், குரானா இல்லாமல் தானாகவே இயங்கும் நிலைக்கு கஃபேவை உயர்த்தின. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு குரானா புதுப் புது யோசனைகளை செயல்படுத்தினார். உணவு தயாரிப்பில் புதுமைகளைப் புகுத்தினார். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் படி சேவை செய்வது எப்படி என்று தனது பணியாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

“வாடிக்கையாளர்கள் எங்கள் உணவையும் சேவையையும் விரும்புவதாகச் சொன்னால் போதும். அதுதான் எனக்கு ஒரு பெரிய உந்துதல்” என்றார் குரானா

சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார் அவர்:

எங்கள் வாடிக்கையாளரில் ஒருவர் வழக்கமாக நிறைய ஆர்டர் கொடுப்பார். ஆனால் டெலிவரி கொடுக்கும் போது, எங்கள் பையன்கள், கஃபே ஜேட் டீசர்ட்டுடன் வரக் கூடாது என்றும் கஃபே ஜேட் பைக்கில் வரக் கூடாது என்றும் நடந்து வந்துதான் கொடுக்க வேண்டும் என்று ஓயாமல் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நாங்கள் விசாரித்ததில் அவர் உள்ளூரில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் விருந்துத் துறை (banquet manager) மேலாளர் என்று தெரியவந்தது.

கஃபே ஜேட் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவையாற்ற போதுமான பணியாளர்களைப் பெற்றிருக்கிறது. நிறுவனம் சின்னதாக இருக்கலாம். ஆனால் தொழில் நுட்ப வசதிகள் உடையது. லாபகரமாக இயங்கக் கூடியது. விரைவில் இணைய வழி வாணிகத்திற்கான இணைய தளம் மற்றும் செல்போன் செயலியை ஊருவாக்கி ஆன் லைன் மூலம் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களைப் பெற்று அதன் வழியே பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

image


கஃபே ஜேட் தனது சேவைகளில் மட்டுமே கவனம் குவிக்கிறது. உடனடி பண வரவு குறித்து அது கவலைப்படவில்லை. எனினும் தனது சேவைக்கு ஆதரவளிப்பவர்களுக்கு கிளைகளைத் (franchise) திறக்க வாய்ப்பளிக்கிறது.

தனது வர்த்தகத் திட்டங்கள் குறித்து குரானா பின்வருமாறு விளக்குகிறார்:

பெரும்பாலான பெரு வர்த்தகங்கள் தானே இயங்குகின்றன. உரிமையாளர்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுத்து, பின் அந்தப் பணமே பணத்தைச் சம்பாதிக்கிறது. இதே முறையைத்தான் சிறிய அளவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக்க நான் விரும்புகிறேன். இப்போது கஃபேயில் நான் இருக்க வேண்டிய தேவை இல்லாமலே எனது பணமே எனக்கு பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. உரிமையாளரின் நேரடிக் கண்காணிப்பு தேவைப்படும் ஒரு வர்த்தகத்தில், அதற்கு மாறாக எனது இருப்பே தேவை இல்லாமல் நிறைய கிளைகள் தானாகவே இயங்குகின்றன. எந்தக் கிளைக்கும் நான் தேவை இல்லை.

அவருக்குத் தொழில் நுட்பம் தெரியாது. ஆனால் தொழில்நுட்ப ஆர்வலர். செயல்முறையை எப்படிப் பயன்படுத்துவது, நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, மனித உழைப்பை எப்படி நிர்வகிப்பது என்று அவருக்குத் தெரியும். அவர் பழைய பள்ளிக் கூடத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் நவீன தொழில் நுட்பம் மற்றும் வர்த்தகத்தின் புதிய சிந்தனைகளை ஏற்கத் தயாரானவர்.

முதலீடு செய்வது, சம்பாதித்து விட்டு தொழிலை மூடி விட்டுப் போய்விடுவது என்ற பாணியை குறித்த குரானாவின் கருத்து இதுதான்:

ஒரு தொழிலைத் தொடங்குவது அல்லது அதில் முதலீடு செய்வது, பின் சம்பாதித்து விட்டு, வெளியேறி விடுவது என்பதுதான் பலரின் பாணியாக இருக்கிறது. நான் இந்த பாணியைச் சேர்ந்தவனில்லை. பசுவைக் கொன்று சாப்பிடுவதற்குப் பதில் அதில் தினமும் பால் கறந்து பயன்படுத்த விரும்புகிறவன். தினந்தோறும் முட்டை கொடுக்கும் போது, வீணாக கோழியை ஏன் கொல்ல வேண்டும்? நிறைய ஆரம்ப நிறுவனங்கள் ரத்தம் வடித்துக் கொண்டிருக்கின்றன. அவை லாபத்தில் வளர்வதில்லை. நிதி மூலதனத்தில் வளர்கின்றன. ஆரம்ப முதலீட்டாளர்கள் பணத்தை சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் மூடுவிழாவைப் பின்பற்றுகின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. இது வர்த்தக உலகில் ஒரு எதிர்மறையான பாதிப்பையே ஏற்படுத்தும். வருங்கால முதலீட்டளார்களை வெளியேறச் செய்யும். லாபத்தை புறக்கணிப்பது, மூழ்கிப் போவதில்தான் போய் முடியும். முதலீட்டாளர்களும் ஆரம்பத் தொழில் முனைவோரும் அபாய அளவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஆக்கம்: பிரதீப் கோயல் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags