பதிப்புகளில்

எரிந்து முடிந்ததில் இருந்து எழுச்சி பெற்ற இருவர்...

2016 ஆண்டு நமன் குப்தா மற்றும் விஷால் கனெத் என்ற இரு நண்பர்கள் நொய்டாவை தளமாகக் கொண்டு துவக்கிய நிறுவனம் தற்போது 20 மாநிலங்களில் கிளை பரப்பியுள்ளது.

22nd Jan 2018
Add to
Shares
339
Comments
Share This
Add to
Shares
339
Comments
Share

நொய்டாவை தளமாகக் கொண்டு இயங்கும் ’கோட் என்டர்ப்ரைசஸ் எல்எல்பீ’ Code Enterprises LLP என்ற நிறுவனம் தான், இந்தியாவின் முதல் சிகரெட் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நிறுவனம் ஆகும். 2016-ல் இரு நண்பர்கள் துவக்கிய நிறுவனம் தற்போது 20 மாநிலங்களில் கிளை பரப்பி, சிகரெட் கழிவுகளில் இருந்து கவர்ச்சிகரமான பொருட்களை தயாரித்து வருகின்றது.

நிறுவனர்கள்

நிறுவனர்கள்


துவக்கம் :

எரிந்து முடிந்தவுடன் சுண்டி விடப்பட்டு விழும் துண்டுகள். சில சமயங்களில் முடியும் முன்னரே மிதித்து அணைக்கப்படும் சிகரெட்டுகள் என உலகமெங்கும், 0.85 பில்லியன் கிலோ சிகரெட்டு துண்டு கழிவுகள் உற்பத்தியாவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவற்றின் மூலம் மிக அதிக அளவில் சுற்றுச்சூழல், பொருளாதாரம், மற்றும் மக்களில் உடல் நலம் பாதிக்கப் படுகின்றது.

இந்த உண்மையை நமன் குப்தா (23) மற்றும் விஷால் கனெத் (26) தங்கள் நண்பன் வீட்டில் இருந்த போது உணர்ந்தனர். நீண்ட கால நண்பர்களாக இருந்த இருவரும், ஒரு நாள் மாலை சில நண்பர்கள் கூடி பேசிச் செல்லும் இடத்தில் எவ்வளவு சிகரெட் கழிவுகள் உற்பத்தியாகுகின்றன என கணக்கிட்டு பார்க்க அதிர்ந்து போயினர்.

" ஒரு விடுதியில் இருந்த ஒரு அறையில் அவ்வளவு கழிவுகள் உண்டாகும் போது, உலகம் முழுவதும், புகைப்பவர்கள் எவ்வளவு கழிவுகளை இவ்வுலகில் கொட்டுகின்றனர் என யோசித்து பார்த்து அதிர்ந்தோம்," என கூறுகிறார் நமன்.

நொய்டாவில் வசித்து வரும் நமன், அந்நேரத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வந்துள்ளார். விஷால் புகைப்படக் கலைஞராக கார்னிவல் க்ருஸ் லைன்ஸ் என்ற நிறுவனத்திற்காக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரவர் வாழ்வை வாழ்ந்தவாரே இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு தேட துவங்கியுள்ளனர் இருவரும். அடுத்த சில மாதங்களில் ஆய்வு மற்றும் பரிசோதனைகள் செய்து இரசாயன முறையில், ’செலுலோஸ் அசிடேட்’ சுத்தம் செய்ய ஏற்ற முறையை உருவாக்கினர். அந்த பாலிமர் தான் சிகரெட் துண்டுகளில் பயன்படுகின்றது.

VBin

VBin


"அது 2015 செப்டெம்பர் மாதம். அடுத்த வருடம், ஜூலை மாதம், நாங்கள் எங்கள் கோட் என்டர்பிரைஸ் எல் எல் பீ நிறுவனத்தை துவக்கினோம். நிறுவனத்தின் சட்ட வேலைகள் மற்றும் நடவடிக்கைகளை கையாண்டவாறே எனது கல்வியையும் தொடர்ந்து வந்தேன்". அவ்வருடத்தில் தனது பட்டபடிப்பையும் முடித்துள்ளார் நமன். அவரது ஆசையை அவரே கூறினார்,

"மறுசுழற்சித் துறையில் இந்தியாவில் நாங்கள் ஒரு மாற்றம் கொண்டுவர முயல்கின்றோம். மேலும், ஒழுங்கற்று கிடக்கும் சிகரெட் ஏற்படுத்தும் சிக்கலை சரி செய்ய விரும்புகிறோம்," என்கிறார்.

சிகரெட் கழிவுகள் சேகரிப்பு :

டெல்லி-என்சிஆர் பகுதி எங்களுக்கு மிகவும் பரிச்சயம். எனவே எங்களது நிறுவனத்தின் இயக்கத்தை டெல்லி, நொய்டா, மற்றும் குறுகிராமில் இருந்து துவக்கினோம். மக்களிடையே துண்டு பிரசுரங்களை கொடுத்தோம். சிகரட் விற்பனையாளரிடம் நாங்கள் என்ன செய்ய உள்ளோம் என்பதை விளக்கினோம். அவர்களுக்கு சிகரெட் துண்டுகளை சேகரிக்க தொட்டிகளை கொடுத்தோம். ’V BIN’ என்பது அந்த தொட்டிகளுக்கு நாங்கள் இட்ட பெயர். அந்த தொட்டிகளுக்காக மற்றும் 3 மாத சேவைக்காக 99 ருபாய் அவர்கள் செலுத்த வேண்டும். நாங்கள் ஒரு கிலோ சிகரெட் கழிவுகளுக்கு குறைந்த பட்சம் 250 ருபாய் கொடுப்பதாக கூறினோம்.

ஆனால் கூறுவதைக் காட்டிலும் அதனை செய்து காட்டுவது தான் தொழில்முனைவோர் வாழ்வில் சிக்கலே. இவ்விருவருக்கும் அதே போன்று சோதனைகள் முளைத்தது.

"எங்களது பல தொட்டிகள் திருடு போயின. மேலும் பலவற்றை எவரும் பயன்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் எங்களை நம்பிய சிகரெட் விற்பனையாளர்களோடு தொடர்ந்து பணியாற்றினோம். நாங்கள் அவர்கள் கடைகளுக்கு இருவாரங்களுக்கு ஒரு முறை சென்று, அங்கிருக்கும் தொட்டிகளை எடை போட்டு பார்த்து, அதற்கு ஏற்ப அவர்களுக்கு பணம் கொடுத்து, கழிவுகளை எடுத்து வந்தோம். கழிவுகளில் இருந்து பணம் கிடைப்பது மட்டுமின்றி, எங்கள் மூலமாக அவர்கள் கடைகளும் இலவசமாக தூய்மையாயின," என சிரிக்கிறார் நமன்.

நமன் மற்றும் விஷால் தாங்கள் உருவாக்கிய இரசாயன செயல்முறையை பயன்படுத்தி, தூக்கி எறியப்பட்ட சிகரட் துண்டுகளை மறுசுழற்சி செய்தனர். அதில் உள்ள இரசாயனங்கள் என்ன என்பது நிறுவனத்தின் நலனிற்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயன செயல்முறையின் பலனாக பயிர்களுக்கு மற்றும் நாற்றங்கால்களுக்கு இடும் உரம் கிடைக்கின்றது. மிஞ்சிய புகையிலை மற்றும் அதனை சுற்றியுள்ள காகிதத்தினால் ஆனது இந்த உரம். மறுசுழற்சி செய்யப்பட்ட, பாலிமர் மூலம், இல்லங்களில் பயன்படும் மெத்தைகள், மாலைகள், பஞ்சு திணித்து வைக்கப்பட்ட பொம்மைகள், கீ செயின்கள் இன்னும் பல பொருட்கள் உருவாக்கபடுகின்றன.

நிறுவனர்கள் இருவரும், சமூக வலைத்தளங்களை நிறுவனத்தின் விளம்பரத்திற்காக அதிகமாக பயன்படுத்தினர். நாட்கள் செல்ல செல்ல, இவர்கள் செய்யும் செயலின் நோக்கம் கருதி, உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள், இந்த செயலினை பற்றி எழுதின. 20-க்கும் மேற்பட்ட நாளிதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும், எங்களை பற்றிய செய்தியை வெளியிட்டன. அதன் காரணமாக, டெல்லிக்கு வெளியில் உள்ள மக்களும், எங்களோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்" என்கிறார் நமன்.

"நாங்கள் எங்களோடு இணைய விரும்பிய அனைவரையும் இருகரம் விரித்து அணைத்துக்கொண்டோம். நாங்க உருவாக்கி விற்க நினைத்த அனைத்து பொருட்களுக்கும், மூலப்பொருள் தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளே."
image


இந்தியா முழுவதும் கிளை விரித்தல் :

தற்போது, கோட் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு 60 கூட்டாளிகள், 20 மாநிலங்களில்,100 மாவட்டங்களில் இணைந்துள்ளனர். ஒப்பந்த அடிப்படையில், அவர்கள் கூட்டாளிகள், கழிவுகளை சேகரித்து, இவர்களிடம் ஒப்படைப்பதை செய்து வருகின்றனர். 

"ஒவ்வொரு மாதமும், 300 முதல் 400 கிலோ சிகரெட் கழிவுகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அவை, இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்து இந்தியன் ரயில்வே மூலமாக எங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஒன்றரை வருடங்களில், 4 டன்னுக்கு மேல் சிகரெட் துண்டுகளை இந்நிறுவனம் மறுசுழற்சி செய்துள்ளது.

அடித்தளத்தில், 10,000 திற்கும் மேற்பட்ட தொட்டிகள் நிறுவப்பட்டு, சிகரட் துண்டுகள் சேகரிக்கப்பட்டு, 5000-க்கும் அதிகமானோர் அதன் மூலம் பயனடைகின்றனர். அவர்களில் சிகரெட் விற்பனையாளர், புகைபிடிப்போர், அலுவலகங்கள், மற்றும் குப்பைகளை சேகரிப்போரும் அடங்குவர். நமன் மற்றும் விஷால், தொழிலை பார்த்துக்கொள்ள, நொய்டாவில் உள்ள மறுசுழற்சி ஆலையை, இரு தொழிலாளர்கள் பார்த்துக் கொள்கின்றனர். அந்த ஆலை மூலம், 15 முதல் 20 கிலோ உரமும், அதே அளவு பாலிமரும் கிடைக்கின்றன.

"எங்களது உடன் பொருள், பொது வகையின் கீழ் வருவதால், எங்களுக்கு மிகக் குறைவான உற்பத்தி செலவு ஆனால் எங்களது போட்டியாளரை காட்டிலும், தொழிலில் வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளது," என்கிறார் நமன்.
image


எதிர்காலத் திட்டங்கள் :

தற்போது நிறுவனர்களில் குடும்பப் பணத்தில் செயல்படும் இந்த நிறுவனம், 2020-க்குள் தனது உடன் பொருளான உரத்தை விற்று, லாபம் சேர்த்து மேலும் விரிவடைய திட்டம் வைத்துள்ளது.

"செலுலோஸ் அசிடேட், மறுசுழற்சியின் மூலம் கிடைக்கும் பாலிமர் பஞ்சை போன்றது அல்ல. அதன் பயன்பாடுகள் அதிகம். காரணம் அதன் வடித்தல் தன்மைகள் மற்றும் வெப்பத்திற்கு எதிரான திறன். அதனை எவ்வாறு காற்று சுத்திகரிப்பு மற்றும், புகைபோக்கியில் உபயோகப்படுத்த இயலும் என்பதை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளோம். எனவே வரும் வருடங்களில் மேலும் அதிகமான பொருட்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்..." என கூறி முடித்தார் நமன்.

ஆங்கில கட்டுரையாளர்: செளரவ் ராய்

Add to
Shares
339
Comments
Share This
Add to
Shares
339
Comments
Share
Report an issue
Authors

Related Tags