பதிப்புகளில்

தினமும் 10 கிலோ காய்கறிகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் எர்ணாகுள காய்கறி வியாபாரி!

18th Nov 2017
Add to
Shares
754
Comments
Share This
Add to
Shares
754
Comments
Share

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த கே ஒய் நசீர் காய்கறி விற்பனையாளர். அவரது காய்கறி சேகரிப்பிலிருந்து ஒரு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு தானமளிக்கிறார். கடந்த நான்காண்டுகளாக ஃபவுண்டேஷன் ஃபார் அன்னம் சேரிட்டி ஈஸ் (FACE) வாயிலாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த நன்கொடை நிறுவனம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மதிய உணவு வழங்குகிறது.

image


இந்த உன்னத முயற்சியை மேற்கொள்ள தூண்டுதலாக இருந்த விஷயம் குறித்து ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு நசீர் தெரிவிக்கையில்,

“பொது இடங்களில் குழந்தைகளும் பெரியவர்களும் உணவிற்காக பிச்சை எடுப்பதைப் பார்த்துள்ளேன். எனினும் அப்போது அவர்களுக்கு உதவ இயலாத நிலையில் இருந்தேன். ஏனெனில் நான் எர்ணாகுளத்தில் ஒரு சந்தையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் என்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்துசெய்து கொள்ளவே அதிகம் போராடிக்கொண்டிருந்தேன்.”

2014-ம் ஆண்டு FACE மையத்தின் வெளியே தகிக்கும் வெயிலில் உணவிற்காக பலர் நின்றுகொண்டிருந்ததைக் கண்டார். இதைக் கண்ட அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தான் எந்த விததிலாவது உதவமுடியுமா என்று கேட்டார். அவர் காய்கறி வியாபாரியாக இருப்பதால் அவர் காய்கறிகளை விநியோகிக்கலாம் என்று அதிகாரிகள் பதிலளித்தனர். தேவையிருப்போருக்கு உதவவேண்டும் என்கிற அவரது தீவிர விருப்பமானது நிறைவேறியது. தனது தினசரி கையிருப்பிலிருந்து ஒரு சிறிய பகுதியை இலவசமாக வழங்க தீர்மானித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு உந்துசக்திதான் இந்த மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தது. தகிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்களைப் பார்த்த காட்சி என் மனதில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. காய்கறிகளை விநியோகிக்க சம்மதிக்கும் வரை என் மனதில் ஒருவித பாரம் இருந்து வந்தது.”

FACE தலைவர் டி ஆர் தேவன் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவிக்கையில்,

"கடந்த ஐந்தாண்டுகளாக தினமும் 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறோம். கடந்த நான்காண்டுகளில் நசீர் கிட்டத்தட்ட 10 கிலோ காய்களை தினமும் இலவசமாக விநியோகித்துள்ளார்.”

கட்டுரை : Think Change India

Add to
Shares
754
Comments
Share This
Add to
Shares
754
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக