பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

பசுமையான முறையில் தேர்தல் நடைபெற முயற்சிகள் மேற்கொண்ட தேர்தல் வேட்பாளர்கள்!

இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி ராஜீவ், தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு ஏற்பட்ட குப்பைகளை சுத்தப்படுத்த கட்சி பணியாளர்களை அறிவுறுத்தியுள்ள நிலையில் பிரச்சாரத்தின்போது கிடைத்த சால்வைகளை மறுசுழற்சி செய்யத் தீர்மானித்துள்ளார் என்டிஏ வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன்.

YS TEAM TAMIL
14th May 2019
8+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

பொதுத்தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவேண்டும் என்று கட்சிகள் வலியுறுத்தியது. கட்சி வேட்பாளர்களின் சிறப்புரைகளுக்காக சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. பிரச்சாரங்களுக்காக போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டது. தேர்தல் பரபரப்பு ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தொற்றிக்கொண்டது.

எனினும் தேர்தலுக்கு பிறகு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சில கட்சிப் பணியாளர்கள் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற பிறகு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டு சாலையில் கிடந்த குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கேரளாவின் எர்னாகுளத்தைச் சேர்ந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) வேட்பாளரான பி ராஜீவ் வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாட்களுக்குள் போஸ்டர்கள் அனைத்தையும் அகற்றிவிடுமாறு கட்சிப் பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் சக வாக்காளர்களும் இதைப் பின்பற்ற #LetsCleanErnakulam என்கிற சமூக ஊடக பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மக்கள் சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி இந்த ஹேஷ்டேக்குடன் தங்களது புகைப்படங்களையும் ஆன்லைனில் பதிவிடத் துவங்கியதாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது.

இத்தகைய முயற்சியை ராஜீவ் மட்டும் மேற்கொள்ளவில்லை. திருவனந்தபுரம் என்டிஏ வேட்பாளரான கும்மனம் ராஜசேகரன், மிசோரம் முன்னாள் கவர்னர் ஆகியோரும் பிரச்சாரப் பொருட்களை மறுசுழற்சி செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட சால்வைகளை மறுசுழற்சி செய்யத் தீர்மானித்தார் கும்மனம். ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிடுகையில்,

”எனக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான துணிகள் கிடைத்தது. இவற்றை துணிப்பைகள், தலையணை உறைகள் போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக வகைப்படுத்தும் பணி துவங்கிவிட்டது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

"மக்கள் ப்ளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார்.

கும்மனம் இத்தகைய தனித்துவமான முயற்சியை மேற்கொள்வதற்காக பெரிதும் பாராட்டப்பட்டார். செடிகள் வளர்க்க பயன்படுத்தப்படும் ‘க்ரோ பேக்ஸ்’ தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார் என ’தி நியூஸ் மினிட்’ குறிப்பிட்டுள்ளது.

மாநிலத்தில் பசுமையான முறையில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது சுவாரஸ்யமளிக்கும் விஷயமாகும். அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரச்சாரப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். எனவே சுவரோவியங்கள், போஸ்டர்கள், துணியால் செய்யப்பட்ட பேனர்கள் போன்றவையே பயன்படுத்தப்பட்டது.

கட்டுரை : THINK CHANGE INDIA

8+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags