என்னையே எதிர்க்குறீங்களா? SpaceX ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த அதிர்ச்சி!

எலான் மஸ்க்கை விமர்சித்த ஊழியர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 CLAP
0

எலான் மஸ்க்கை விமர்சித்த ஊழியர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். போதாக்குறைக்கு ட்விட்டர் நிறுவனத்தை வேறு 44 பில்லியன் டாலருக்கு வாங்க டீம் பேசியுள்ளார். ஆனால் போலி கணக்குகள் விவகாரத்தில் ட்விட்டருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அதனை அவர் வாங்குவாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், எலான் மஸ்க்கை விமர்சித்து பகிரங்கக் கடிதம் எழுதி விநியோகித்த ஊழியர்களை SpaceX பணிநீக்கம் செய்துள்ளது. இந்த கடிதத்தில், எலான் மஸ்க் தொடர்ந்து திசைதிருப்பி வருவதாகவும், நிறுவனத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், எலான் மஸ்க்கை கண்டிக்கும் படியும் ஸ்பேஸ் எக்ஸிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த ஊழியர்களால் அசிங்கப்பட்ட எலான் மஸ்க்:

மூன்று பெயரிடப்படாத ஊழியர்கள், ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் மற்றும் சிஓஓ க்வின் ஷாட்வெல்லின் மின்னஞ்சலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த கடிதத்தை பார்த்து கடுப்பான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் எத்தனை பேர் எதற்காக நீக்கப்பட்டனர் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

அதற்குக் காரணம் ஊழியர்கள் எலான் மஸ்க் பற்றி எழுதிய கடிதத்தில், வேண்டுகோள்கள் மற்றும் பொதுவான செயல்முறை ஊழியர்களுக்கு அசௌகரியம், பயமுறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் போன்ற எந்த காரணமும் இல்லை, பதிலுக்கு அவர்கள் சொல்வதை தலைமை நிர்வாகம் செய்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவது போல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இதை விட தங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதாகக் கூறி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அந்த கடிதத்தை உதறித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் க்வின் ஷாட்வெல் இது முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ளார்.

கடிதத்தில் இருந்த மற்றொரு விஷயம் மஸ்க்கின் ட்விட்டர் பயன்பாடு காரணமாக கவனச்சிதறல்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டது. பிப்ரவரியில், SEC எலான் மஸ்க் மீதான உள்நாட்டு வர்த்தகம் குறித்து விசாரணையைத் தொடங்கியது, மேலும் டெஸ்லா நிறுவன வழக்கறிஞர்கள் அவரது ட்வீட்களை தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. (இந்த வார தொடக்கத்தில், மஸ்க் அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

கடிதத்திற்கு முன், மஸ்க் SpaceX ஊழியர்களிடம் வாரத்தில் குறைந்தது 40 மணிநேரத்தை அலுவலகத்தில் செலவிட வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. தனது மின்னஞ்சலில், ஷாட்வெல் மேலும் கூறுகையில்,

"நிறுவனம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான நபர்களை மீண்டும் மீண்டும் கோரப்படாத மின்னஞ்சல்களை அனுப்புவதும், கடிதங்களில் கையெழுத்திடச் சொல்வதும், வேலை நாளில் ஸ்பான்சர் செய்யப்படாத கருத்துக்கணிப்புகளை நடத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. தயவு செய்து SpaceX பணியில் கவனம் செலுத்துங்கள், உங்கள் நேரத்தைப் பயன்படுத்துங்கள்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்கிற்கு கடிவாளம் போடச் சொன்ன கடிதத்தில் கையெழுத்திட்ட பணியாளர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வேலை விட்டு நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில்: கனிமொழி

Latest

Updates from around the world