Emmy Awards 2022: முக்கிய விருதுகளை அள்ளிய ‘ஸ்க்விட் கேம்’

By Chitra Ramaraj
September 14, 2022, Updated on : Wed Sep 14 2022 13:31:31 GMT+0000
Emmy Awards 2022: முக்கிய விருதுகளை அள்ளிய ‘ஸ்க்விட் கேம்’
2022ம் ஆண்டுக்கான எம்மி விருதுகள் லாஸ் ஏஞ்சலிஸில் வழங்கப்பட்டன. அதில், உலகளவில் ரசிகர்களைப் பயமுறுத்திய ஸ்குவிட் கேம், டெட் லாஸோ, சக்ஸ்செஸ்சன், ஒயிட் லோட்டஸ் ஆகிய தொடர்கள் அதிக விருதுகளை அள்ளியுள்ளன.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

உலகம் முழுவதிலும் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடைய நினைக்கும் மாபெரும் கௌரவமாக நினைப்பது ஆஸ்கர் விருதுகளைப் பெறுவதுதான்.


சினிமாவிற்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அதே மாதிரி தொலைக்காட்சித் தொடர்களுக்கும், வெப்சீரிஸ்களுக்கும் வழங்கப்படும் உயரிய விருதாக எம்மி விருதுகள் உள்ளன. அமெரிக்கத் தொலைக்காட்சி உலகில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக, கடந்த 74 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் இந்த எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

emmy

அந்தவகையில், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த 74வது எம்மி விருதுகள்  வழங்கும் விழா, நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.


அதில், 2020ம் ஆண்டு 8 Emmy Awards-களை வென்று அசத்திய 'சக்ஸஷன்' தொடர், இந்த முறையும் சிறந்த தொடருக்கான விருது உள்பட மொத்தம் 4 விருதுகளை வென்றது.


நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகளவில் ரசிகர்களை பயமுறுத்திய பிரபல தென் கொரிய வெப்சீரீஸான 'ஸ்குவிட் கேம்' 15 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்பட 6 விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நாயகனாக நடித்த லீ ஜுங் ஜேவுக்கு வழங்கப்பட்டது. அந்த தொடரை இயக்கிய இயக்குநர் ஹுவாங் டாங் ஹுயூக் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச் சென்றார்.

emmy award

சிறந்த நடிகைக்கான விருதை 'யூஃபோரியா' தொடரில் நடித்ததற்காக 'ஸ்பைடர்மேன்' புகழ் சென்டாயா தட்டிச் சென்றார். இரண்டாவது முறையாக எம்மி விருது வாங்கும் இளம் நடிகை என்கிற பெருமையை இதன் மூல சென்டாயா பெற்றுள்ளார். இம்முறை 'யூஃபோரியா' தொடர் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது.


சிறந்த காமெடி தொடர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த டிராமா தொடர் இயக்குநர் என 4 விருதுகளை 'தெட் லாஸ்கோ' தொடர் வென்றது. இதேபோல், ஆந்தாலஜி சீரிஸான ஒயிட் லோட்டஸ், சிறந்த ஆந்தாலஜி, சிறந்த நடிகை ஆந்தாலஜி, சிறந்த துணை நடிகர் ஆந்தாலஜி, சிறந்த இயக்குநர், சிறந்த கதையாசிரியர் உள்ளிட்ட 5 விருதுகளை தட்டிச் சென்றது.

emmy award

ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட 'Stranger Things' தொடர் மொத்தம் 5 விருதுகளைப் பெற்றது.


இதுதவிர மேலும் பல எம்மி விருதுகள் வழங்கப்பட்டன. இதோ அவற்றின் மொத்த விபரமாவது:


Comedy Series: Ted Lasso

Drama Series: Succession

Limited or Anthology Series: The White Lotus

Competition Program: Lizzo's Watch Out For The Big Grrrls

Variety Talk Series: Last Week Tonight With John Oliver

Variety Sketch Series: Saturday Night Live

Lead Actor in a Comedy Series: Jason Sudeikis, Ted Lasso

Lead Actress in a Comedy Series: Jean Smart, Hacks

Lead Actor in a Drama Series - Lee Jung-jae, Squid Game

Lead Actress in a Drama Series - Zendaya, Euphoria

Lead Actor in a Limited or Anthology Series or Movie - Michael Keaton, Dopesick

Lead Actress in a Limited or Anthology Series or Movie - Amanda Seyfried, The Dropout

Supporting Actor in a Comedy Series: Brett Goldstein, Ted Lasso

Supporting Actress in a Comedy Series: Sheryl Lee Ralph, Abbott Elementary

Supporting Actor in a Drama Series: Matthew Macfadyen, Succession

Supporting Actress in a Drama Series: Julia Garner, Ozark

Supporting Actor in a Limited or Anthology Series or Movie: Murray Bartlett, The White Lotus

Supporting Actress in a Limited or Anthology Series or Movie: Jennifer Coolidge, The White Lotus

Directing for a Comedy Series: MJ Delaney, Ted Lasso

Directing for a Drama Series: Hwang Dong-hyuk, Squid Game

Directing for a Limited or Anthology Series or Movie: Mike White, The White Lotus

Writing for a Comedy Series: Quinta Brunson, Abbott Elementary

Writing for a Drama Series: Jesse Armstrong, Succession

Writing for a Limited or Anthology Series or Movie: Mike White, The White Lotus

Writing for a Variety Special: Jerrod Carmichael, Jerrod Carmichael: Rothaniel

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற