Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

‘மலை உச்சியில் இருந்து குதிக்கும் வழியில் விமானத்தை உருவாக்கிடுவார்; அவரே தொழில்முனைவர்’ - ரீட் ஹாப்மன்

Linkedin நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் தொழில்முனைவோர் பயணத்தை பற்றி கூறிய மேற்கோளின் அர்த்தத்தை விரிவாக விளக்கும் கட்டுரை இது.

‘மலை உச்சியில் இருந்து குதிக்கும் வழியில் விமானத்தை உருவாக்கிடுவார்; அவரே தொழில்முனைவர்’ - ரீட் ஹாப்மன்

Friday May 19, 2023 , 2 min Read

"An entrepreneur is someone who jumps off a cliff and builds a plane on the way down," - Reid Hoffman, LinkedIn

"தொழில்முனைவோர் என்பவர் மலை உச்சியில் இருந்து குதித்து, கீழே வரும் வழியில் விமானத்தை உருவாக்கிக் கொள்பவர்கள் என லிங்க்டுஇன் நிறுவனர் ரீட் ஹாப்மனின் மேற்கோள், தொழில்முனைவோரின் விடாமுயற்சி மற்றும் துணிவை படம் பிடித்துக்காட்டுகிறது.

இடர்களை எதிர்கொண்டு, அதற்கேற்ப மாற்றம் செய்து, நெருக்கடி சூழலில் புதுமையாக்கம் செய்து கொள்வது தொழில்முனைவோரின் முக்கிய அம்சங்களாகும். இந்த கட்டுரையில் இந்த மேற்கோள் குறித்து மேலும் ஆழமாக ஆய்வு செய்து, வெற்றிகரமான தொழில்முனைவோருக்கான தகுதிகளை ஆராயலாம்.

தொழில்

நம்பிக்கை

தொழில்முனைவோர்களுக்கு புதிய வர்த்தகத்தை துவங்குவது என்பது நம்பிக்கை பாய்ச்சலாக அமைகிறது. தங்கள் தொலைநோக்கிற்கு ஏற்ப இடர்களை ஏற்கத் துணிகின்றனர். ’மலை உச்சியில் இருந்து குதிக்கும்’ என்ற உருவகம் இந்த செயலை குறிக்கிறது.

தொழில்முனைவோராக, நிச்சயமற்றத்தன்மை, சவால்கள், பின்னடைவு ஆகியவை நிறைந்த பயணத்தை எதிர்கொள்ளத் தயாராகின்றனர். இடர்களை எதிர்கொள்வது தொழில்முனைவு வெற்றிக்கான அடிப்படை அம்சமாகும். இது வாய்ப்புகளை பற்றிக்கொண்டு, புதுமையாக்கத்திற்கு உதவுகிறது.

படைப்பூக்கம்

கீழே வரும் வழியில் விமானத்தை உருவாக்கிக் கொள்வது, எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் வர்த்தகச் சூழலை எதிர்கொள்வதற்கு தொழில்முனைவோருக்கு தேவையான வளைந்து கொடுக்கும் தன்மை, படைப்பூக்கத்தை உணர்த்துகிறது.

புதிய தடைகள் மற்றும் எதிர்பாராத சூழலை எதிர்கொள்ளும் போது, தொழில்முனைவோர் வேகமாக யோசித்து உத்திகளை மாற்றி, சவால்களை வெல்ல புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். நெருக்கடிக்கு மத்தியில் மாறும் தன்மை மற்றும் புதுமையாக்கத் திறனே அவர்கள் வர்த்தகத்தின் பாதையை தீர்மானிக்கும்.

பிரச்சனைக்கு தீர்வு

உருவக நோக்கிலான விமானத்தை உருவாக்கிக் கொள்ள, தொழில்முனைவோருக்கு குறைந்த வளங்கள் மற்றும் நேர பற்றாக்குறை இருக்கலாம். எனவே, அவர்கள் வளத்தை உருவாக்கிக் கொண்டு, பிரச்சனைக்குத் தீர்வு காணும் அதி திறனை பெற்றிருக்க வேண்டும்.

வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் தங்களிடம் உள்ள வளத்தை கொண்டு, தடைகளை வெல்ல புதிய வழிகளை காண்கின்றனர். கடின சூழலிலும் அவர்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை கொண்டு வர்த்தகத்தை நடத்துகின்றனர்.
Reid Hoffman

விடாமுயற்சி

தொழில்முனைவோர்கள் பயணம் அரிதாகவே தடைகள் அற்று இருக்கும். தோல்விகள், தடைகளைக் கடந்து இதில் முன்னேற உறுதி மற்றும் விடாமுயற்சி தேவை. கீழே வரும் போது விமானத்தை உருவாக்க, அச்சமில்லாத உறுதி மற்றும் ஏமாற்றத்தில் இருந்து மீளும் தன்மை தேவை.

வெற்றிகரமான தொழில்முனைவோர் தோல்விகளில் இருந்து கற்றுக்கோண்டு அவற்றை வாய்ப்புகளாக்கி வளர்கின்றனர்.

வலுவான வலைப்பின்னல்

எந்த தொழில்முனைவோராலும் வர்த்தகத்தை தனியே உருவாக்க முடியாது. இந்த மேற்கோள், வழிகாட்டிகள், பங்குதாரர்கள், சகாக்கள் வலைப்பின்னலை உருவாக்கி அவர்கள் ஆலோசனை, உதவி, வளங்கள் மூலம் வளர்வதை குறிக்கிறது. வலுவான உறவை வளர்த்து, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தொழில்முனைவோர் தேவையான கருவிகளுடன் தங்களுக்கான விமானத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

ரீட் ஹாப்மனின் இந்த மேற்கோள், வெற்றிகரமான தொழில்முனைவோருக்கான தகுதிகளையும் திறமைகளையும் உணர்த்துகிறது. இடர் ஏற்பு, மாறும் தன்மை, படைப்பூக்கம், வளம் பயன்பாடு, பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், விடாமுயற்சி மூலம் வர்த்தகத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லலாம். ஆர்வம் உள்ள எதிர்கால தொழில்முனைவோர் இந்த செய்தியை மனதில் கொண்டு தங்கள் கனவுகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில்: Nucleus_AI | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan