குப்பையில் இருந்து கோடிகளில் ஈட்டும் மறுசுழற்சி நாயகர்கள்!

பிளாஸ்டிக், மின்னணு கழிவுகள் பிரச்னையை இந்தியா எதிர்கொள்ளும் நிலையில், மறுசுழற்சி அளிக்கும் வாய்ப்பை தொழில்முனைவோர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
2 CLAPS
0

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் காற்று மாசு பிரச்சனை தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. அதே நேரத்தில், பிளாஸ்டிக், மின்னணு கழிவு சிக்கலையும் எதிர்கொண்டு வருகிறது.

’அன் பிளாஸ்டிக் கலெக்டிவ்’ (Un-Plastic Collective), நடத்திய ஆய்வு இந்தியா ஆண்டுதோறும் 9.46 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதாகவும், இவற்றில் 40 சதவீதம் சேகரிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கிறது.

மேலும், இந்தியா ஆண்டுக்கு 2 மில்லியன் டன் மின்னணு கழிவை உருவாக்குகிறது.

பிளாஸ்டிக், மின்னணி கழிவுகள் பிரச்சனை சவாலாக இருந்தாலும், இது மறுசுழற்சிக்கான வாய்ப்பாகவும் அமைகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வருவாய் ஈட்டும் தொழில்முனைவோர்கள் பற்றி ஒரு தொகுப்பு:

தேஷ்வல் வேஸ்ட் மேனேஜமன்ட், ராஜ்குமார், நிறுவனர்

ராஜ்குமார், ஐடி துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, மின்னணு கழிவுகள் நிர்வகிக்கவும், மறுசுழற்சி செய்யவும் கடினமாவதை கவனித்தார்.

“2018ல் இந்தியா ஆண்டுக்கு மூன்று மில்லியன் மெட்ரிக் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கியது. நம்முடைய தேசத்தின் மறுசுழற்சி திறன் இதில் ஐந்து சதவீதம் மட்டுமே,” என்கிறார் தேஷ்வல் வேஸ்ட் மேனேஜ்மன்ட் நிறுவனர், சி.இ.ஓ ராஜ்குமார்.

“இதைப் பார்த்த போது, தேஷ்வல் இ-வேஸ்ட் ரிசைக்லர் எனும் பெயரில் ராஜஸ்தானின் குருஷேத்ராவில் முதல் மின்னணு கழிவு மறுசுழற்சி ஆலையை ஏற்படுத்துவதன் மூலம், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கு என் பங்கை ஆற்ற விரும்பினேன்,” என்கிறார் அவர்.

மத்திய அரசின் 2010 மின்னணு கழிவு வரைவால் ஊக்கம் பெற்ற ராஜ்குமார், 2013ல் தனது சொந்த நிதியை முதலீடு செய்து, தேஷ்வல் நிறுவனத்தை துவக்கினார். அதே நேரத்தில், மானேசர் பகுதியில் பெரிய அளவிலான மறுசுழற்சி வசதியையும் அமைத்தார். இந்த இரண்டு ஆலைகளும், பாட்டரிகள், பிளாஸ்டிக், பயன்படுத்திய எண்ணெய் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்தன.

ஐடி துறை, கனரக தொழில்கள், ஆட்டோமொபைல், நுகர்வோர் துறை, நிதித்துறை, மருந்தக துறை உள்ளிட்ட துறையில் 200க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவன வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் அண்டுக்கு 50 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம் 1,000 மெட்ரிக் டன் கழிவுகளை மறுசுழற்சி செய்துள்ளது. இதுவரை ராஜ்குமார்,

தேஷ்வல் நிறுவனத்தில் ரூ.15 கோடி முதலீடு செய்து, 2018-19ல் ரூ.23 கோடி விற்றுமுதல் கண்டுள்ளார். துவக்கம் முதல் 1,000 மெட்ரிக் டன் கழிவை மறுசுழற்சி செய்த நிறுவனம், 2019 க்கு பிறகு ஆண்டுக்கு 500 டன் மற்சுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜிக்னேஷ் சிங், டீலக்ஸ் ரீசைக்லிங், நிறுவனர்

ஜிக்னேஷ் சிங் காகித உற்பத்தி, மறுசுழற்சி பின்னணியை கொண்டிருக்கிறார். 1999ல் பேக்கேஜிங் ஆலைகள் கழிவை மறுசுழற்சி செய்யும் வாய்ப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது.

அப்போது தான், மும்பையைச்சேர்ந்த சுற்றுச்சூழல் நட்பான வர்த்தகத் தீர்வான ’டீலக்ஸ் ரீசைக்லிங்’ நிறுவனத்தைத் துவக்கினார்.

குடும்பத்தினர், நண்பர்கள், கடன் வசதி ஆகியவறைக் கொண்டு நிறுவனத்தை துவக்கினார். மாதம் 74 டன் எனும் திறனுடன் சிறிய ஆலையில் இருந்து துவக்கினார். இன்று ஆண்டுக்கு 13,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாக நிறுவனம் விரிவாக்கம் பெற்றுள்ளது.

நிறுவனம் ஆண்டுக்கு ரூ.40 கோடி விற்றுமுதல் கண்ட நிலையில், அண்மையில் விற்றுமுதலில் 25 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

“துவக்கத்தில், டெட்ரா பேக் ஆலை கழிவுகளையே மறுசுழற்சி செய்தோம். 2004 முதல் ஆட்டோமொபைல் துறைக்கான பின் சீட் மற்றும் ஆட்டோகளுக்கான பின் சீட்டாக சிப் போர்ட்களை வழங்கி வருகிறோம்,” என்கிறார் ஜிக்னேஷ்.

நாட்டிள் உள்ள 80 சதவீத ஆட்டோக்கள் தங்களது சிப் போர்ட்களை பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

பேக்மேன் பேக்கேஜிங், கவுரவ் ஜலான், நிறுவனர்

கவுரவ் ஜலான் துவக்கிய ’பேக்மேன்’, பிளாஸ்டிக் கழிவுகள் சவாலை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம், அமேசான் இந்தியா, சாம்சங், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் நட்பான பேக்கேஜ் பொருட்களை வழங்கி வருகிறது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிறுவன ஆலையில் பேக்மேன் பேக்கேஜிங், பல்வேறு அளவுகளில், வடிவங்களில் காகித அட்டை பெட்டிகளை தயார் செய்கிறது. இவை தான் மின்னணு பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதோடு, நிறுவனம் இ-காமர்ஸ் விற்பனையையும் கொண்டுள்ளது.

“மறுசுழற்சி காகிதம், உணவு காகிதம், மக்கும் காகிதம் ஆகியவை கொண்டு பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன,” என்கிறார் கவுரவ்.

நிறுவனம், சோளத்தில் இருந்து தயாரிக்கும் சுற்றுச்சூழல் நட்பான பைகளையும் உருவாக்குகிறது. மற்ற பாலிமர்களின் மறுசுழற்சி செயல்முறையை பாதிப்பதில்லை என்றும் கவுரவ் கூறுகிறார்.

அமேசான் இந்தியா, பெர்ன்ஸ் & பெடல்ஸ், பால் தயாரிப்பு நிறுவனம் கண்ட்ரி டிலைட், ஆன்லைன் பூ விற்பனை நிறுவனம் பிளவர் ஆரா உள்ளிட்டவை நிறுவன சுற்றுச்சூழல் நட்பான பைகளின் வாடிக்கையாளர் என்றும் சொல்கிறார்.

பேக்கேஜிங் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம், மற்றும் மக்கும் காகிதத்திலிருந்து வருகிறது. இன்று, பேக்மேன் ஒவ்வொரு நாளும் 1 லட்சம் அட்டை பெட்டிகள் மற்றும் ரோல்களை தயாரித்து 300க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களுக்கு அனுப்புகிறது. மேலும், பேக்மேன், ஆண்டுக்கு ரூ.20 கோடி விற்றுமுதல் செய்து 105 ஊழியர்களைக் கொண்டுள்ளது.” என்று கௌரவ் கூறுகிறார்.

ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்’

Latest

Updates from around the world