Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கொரோனா சமயத்தில் கேட்டராக்ட் மற்றும் உலர் கண்கள் பாதிப்பு 5% அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கண் தொடர்பான பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்துள்ளதாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சமயத்தில் கேட்டராக்ட் மற்றும் உலர் கண்கள் பாதிப்பு 5% அதிகரிப்பு!

Saturday February 20, 2021 , 3 min Read

கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்), கருவிழி ஒட்டு நிராகரிப்பு போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்துள்ளதாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தாமதிக்கப்பட்ட சிகிச்சை, வீட்டிலிருந்து பணியாற்றுவதன் காரணமாக பணி – வாழ்க்கை சமநிலை இழப்பு போன்றவை முதிர்ச்சியடைந்த கண்புரை நோய்களை மேலும் மோசமாக்குகிறது. மேலும் கண்கள் உலர்ந்து போகும் பிரச்சனையும் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால், பெருந்தொற்றுக்கு முந்தைய சூழலை ஒப்பிட்டு, புள்ளியல் விவரங்களை வழங்கி கூறியதாவது:

“2019 ஆண்டின் கடைசி காலாண்டில் எங்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த அனைத்து கண் புரை (cataract) நோயாளிகளில் 10%-க்கும் குறைவானவர்கள், முதிர்ச்சியடைந்த கண்புரை நிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த அளவானது, 5 மடங்கு உயர்ந்து 50% ஆக அதிகரித்திருக்கிறது.  அதைப் போலவே, டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் கண் அழுத்தத்தினால் உருவாகின்ற உலர்ந்த கண்கள் நோய்களின் எண்ணிக்கையும் அதே காலஅளவில் 10% - லிருந்து, 30-50% என உயர்ந்திருக்கிறது,” என்றார்.
1

அவர் மேலும் கூறும்போது,

“உரிய காலஅளவுகளில் பரிசோதனைக்கு வர பல நோயாளிகள் தயங்கியதன் காரணமாக, பல நோயாளிகளிடம் ஏற்கனவே இருந்த கண்விழி விறைப்பு மோசமாகியிருப்பதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம். முன்னதாக கருவிழி ஒட்டு சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் கருவிழி ஒட்டு நிராகரிப்பு மற்றும் கண்ணில் உயர்அழுத்தம் போன்ற சிக்கல்களும் காணப்பட்டன. 

"இப்பெருந்தொற்று காலத்தின்போது, நீரிழிவு நோயாளிகள் பலர் உரிய காலத்தில் கண் பரிசோதனைகளை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால், அவர்களது விழித்திரையில் கடுமையான சிக்கல்கள் உருவாகின,” என்றார்.

 சிகிச்சை பெறுவது தாமதமானதன் காரணமாக நோய் அதிகரித்து கண் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலரை உதாரணமாக சுட்டிக்காட்டினார் புரொஃபசர் அமர் அகர்வால்.

கண்புரை பாதிப்பிற்கான அறுவைசிகிச்சையை தாமதம் செய்த ஒரு முதியவர், உயர் கண்அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு, பார்வைத்திறனையும் பகுதியளவு இழக்க நேர்ந்துள்ளது. 


வயதான பெண்மணி ஒருவரின் ஒட்டுமொத்த உடல்நிலையும் மோசமானது. முதலில் இருபக்க கருவிழிகளில் தொற்று ஏற்பட்டு அதைத்தொடர்ந்து இரு கண்களிலும் பார்வைத்திறன் இழக்கும் நிலைக்கு சென்றது. 


ஒரே ஒரு கண்ணில் மட்டும் பார்வைத்திறன் உள்ள ஒரு நோயாளி, முன்னதாக கருவிழி மாற்று சிகிச்சைக்கு வந்திருந்தார். அவருக்கு கண் தொற்று ஏற்பட்டது பொதுமுடக்கம் காரணமாக கண் மருத்துவரிடம் சென்று அவரால் சிகிச்சைப்பெற முடியவில்லை. இப்போது இரு கண்களிலும் பார்வைத்திறனை இழந்துள்ளார். மீண்டும் இவருக்கு கருவிழி மாற்று சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறைத்தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி கூறியதாவது:

“கடந்த சில மாதங்களில் டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் கண் அழுத்தம் மற்றும் உலர்கண்கள் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம். டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துவது, பணி, தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை இழப்பு ஆகியவற்றின் காரணமாகவே இத்தகைய பாதிப்புகள் உருவாகின்றன. பொதுமுடக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில், கண் வெண்படல அழற்சி, கருவிழி நாள அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட நோயாளிகளை நாங்கள் பார்க்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.” என்றார்.

அவர் மேலும் பேசுகையில்: “மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று நோயாளிகள் கவலை கொண்டிருந்தனர். இதன் விளைவாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கண் பிரச்சனை உள்ள பல நபர்கள் உரிய காலஅளவுகளில் சோதனைகளை செய்து கொள்ளாததால், ஏற்கனவே இருந்த அவர்களது கண் பிரச்சனைகள் தீவிரமடைய வழிவகுத்தது.


புதிதாக கண் பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் சிலர் மருத்துவர்களைச் சந்தித்து, சிகிச்சை பெற காத்திருந்ததால், பார்வைத்திறன் இழப்பு உட்பட, கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தொலைபேசி வழியாக ஆலோசனைப் பெற்ற நோயாளிகள் கூட நேரில் வராமல், தொலைதூரத்திலிருந்தே அனைத்து தீர்வுகளையும் பெற விரும்பினர். அவசியம் என்று கருதப்பட்டபோது கூட, நேரடியாக கண் பரிசோதனை மற்றும் பிற சோதனைகளை செய்துகொள்ள மருத்துவமனைக்கு வர பலர் விருப்பம் காட்டவில்லை, என்று கூறினார்.

 

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.அஷ்வினி அகர்வால் பேசுகையில்,  

“பெருந்தொற்று காலத்தில் உதாசீனம் செய்யுமளவிற்கு எந்த உடல்நலப் பிரச்சனையும் மிகச்சிறியதல்ல. தொடக்கத்தில் டெலி கன்சல்டேஷன் எனப்படும் தொலைபேசி வழியாக ஆலோசனை பெறும் திட்டம் மிகச்சிறப்பான விருப்பத்தேர்வாக இருந்தது. சிலருக்கு சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கு இது போதுமானதாக இருக்கக்கூடும்.

”ஆனால், மருத்துவர்கள் நேரில் சிகிச்சை பெற அறிவுறுத்தும் சமயங்களில் அவ்வாறு செய்வதே சிறந்தது. தவறினால் சிறு கண் பிரச்சனைகூட நிலைமையை மோசமாக்கிவிடலாம். முகக்கவசம், கை தூய்மையாக்கல், தனிமனித இடைவெளி கடைபிடிப்பு போன்ற அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாகப் பின்பற்றுகின்ற கண் மருத்துவமனையை நோயாளிகள் தேர்வு செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.