பதிப்புகளில்

தனது கிராம பஞ்சாயத்தைத் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக மாற்றிய தனி ஒருத்தி!

YS TEAM TAMIL
7th May 2018
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

அசாமின் சராய்பனி கிராம பஞ்சாயத்துத் தலைவரான போண்டி சாய்கியா, தனது கிராமத்தைத் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக மாற்றப் போராடியதற்காக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவரை பாராட்டியுள்ளார். 

image


ஜோர்ஹாத் மாவட்டத்தில் மூன்று தேயிலைத் தோட்டங்கள் அடங்கிய அவரது பகுதியில் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை போண்டி கவனித்தார். இதற்கு முக்கியக் காரணம் கழிப்பறைகள் இல்லாததுதான் என்பதை உணர்ந்தார். அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் அவர் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்படுவதை உறுதிசெய்தார்.

போண்டி அத்துடன் நிறுத்திவிடவில்லை. அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் அதிக நேரம் செலவிட்டு கழிவறைகளைப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இதன் காரணமாக 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இவரது கிராம பஞ்சாயத்து திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் வயிற்றுப்போக்கு பிரச்சனையால் ஏற்படும் உயிரிழப்புகளும் பெருமளவு குறைந்தது.

போண்டி என்டிடிவி-யிடம் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வருடமும் என்னுடைய கிராம மக்கள் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த இறப்புக்கான காரணம் தெரியாமல் இருந்தது. என்னுடைய கிராமத்தில் சுகாதாரம் குறித்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோதுதான் முறையான சுகாதாரம் இல்லாததுதான் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஸ்வச் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது சுகாதாரப் பிரச்சனைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுவரை நாட்டில் பல்வேறு பகுதிகள் திறந்தவெளி கழிப்படமில்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை முன்னிருத்தி பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பாரண் சத்யாகிரக போராட்டத்தின் 100-வது ஆண்டை ஒட்டி பீஹாரின் சம்பாரண் பகுதியில் நடைபெற்ற விழாவில் போண்டியும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தைச் சேர்ந்த யேஷி வாங்மு அவர்களும் தேசிய அளவிலான தூய்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பாராட்டப்பட்டனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக