பதிப்புகளில்

1ஜிபி டேட்டா 20 ரூபாய்க்கு: மலிவான விலையில் இண்டெர்நெட் வழங்கும் 'வைஃபை டப்பா’

’Wifi Dabba’ டீ கடைகளில் ரெளட்டரை வைத்து, அதன் மூலம் சாதாரண மக்களுக்கு மலிவான விலையில் அதி விரைவு இண்டெர்நெட் வசதியை வழங்குகிறது.

4th Dec 2017
Add to
Shares
285
Comments
Share This
Add to
Shares
285
Comments
Share

பொதுவாகவே டீக்கடைகள் பலரை ஒன்றிணைக்கும் ஒரு இடம். எந்தவித பிரிவினைகளுமின்றி அனைவரும் ஒரு கப் டீ அருந்த இங்கு ஒன்று திரள்வார்கள். இரு பொறியாளர் நண்பர்கள் தரமான அதி விரைவான இணையம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என விரும்பினர். இதற்கு உகந்த இடமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது டீ ஸ்டால்கள். இவை பெங்களூரு நகர் முழுவதும் காணப்படுவதால் இதைக் காட்டிலும் சரியான இடம் வேறு எதுவாக இருக்கமுடியும்? என்று யோசித்தனர்.

வைஃபை டப்பா (Wifi Dabba) 13 மாதங்களே ஆன ஒரு ஸ்டார்ட் அப். மிகவும் மலிவான கட்டணத்தில் அதிவிரைவு இணையத்தை வழங்கக்கூடிய வைஃபை டப்பா நெட்வொர்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 MB டேட்டாவை வழங்க இவர்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் 2 ரூபாய். இணைய சேவையளித்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் சிறப்பான சேவையை இப்படிப்பட்ட மலிவான கட்டணத்தில் வழங்கவேண்டும் என்பதுதான் வைஃபை டப்பா நிறுவனர்களின் திட்டம்.

நிறுவனர்கள் கரம் லக்ஷ்மன் மற்றும் சுபந்து ஷர்மா

நிறுவனர்கள் கரம் லக்ஷ்மன் மற்றும் சுபந்து ஷர்மா


இவர்கள் தற்செயலாகவே வைஃபை டப்பா நிறுவனத்தைத் துவங்கினர். இணை நிறுவனர்கள் கரம் லக்ஷ்மன் மற்றும் சுபந்து ஷர்மா இருவரும் 2016-ம் ஆண்டு ஒரு ஹார்டுவேர் ப்ராஜெக்டிற்காக Raspberry Pi-உடன் பணிபுரிந்தனர். அப்போது அவர்களால் ஒரு ரௌட்டரை உருவாக்கமுடியும் என்பதை உணர்ந்தனர். அவர்களது அலுவலகத்திற்கு அருகிலிருந்த ஒரு டீக்கடையில் ஒரு ரௌட்டரை பொருத்தினார்கள். சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 12 பேர் இந்தச் சேவையை பயன்படுத்தத் துவங்கினர்.

”அது ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. மக்கள் விரைவாக இந்த சேவையை ஏற்றுக்கொள்வதைக் கண்டதும் இதைப் பெரிய அளவில் செயல்படுத்துவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தோம்,” என்றார் கரம்.

2016-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜியோ ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தது. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான பயனர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர். ஜியோ மிகவும் மலிவான கட்டணத்தில் சேவை வழங்கும்போதும் எதற்காக வைஃபை டப்பாவை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டறிந்தனர். ஜியோவின் கட்டணத்தைக் காட்டிலும் குறைவான கட்டணத்தில் சேவை வழங்குவதற்கான தேவை இருப்பதை அறிந்தனர்.

IIM-B-யில் எம்பிஏ முடித்த சுபந்து, தனது பணி மூலமாக உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். இந்த இடைவெளி இவரை ஈர்த்தது. ஆய்வின் முடிவுகள் இவர் கண்டறிந்ததுடன் ஒத்திருந்ததால் பிரிட்டிஷ் டெலிகாம் பணியைத் துறந்து சுயமாக ஈடுபட அதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்தார். கல்லூரிபடிப்பை இடையில் நிறுத்தினார் கரம். IIM-A-வின் இணையம் மற்றும் மொபைல் நிதியில் ஒரு வருடம் ப்ரோக்ராம் மேனேஜராக இருந்தார். இது தவிர வேறு எங்கும் இவர் பணியாற்றவில்லை.

இவ்வாறு அவர்களது கான்செப்டும், சோதனை முயற்சியும் எதிர்பார்த்தவாறே நல்ல வரவேற்பை பெற்றதால் இதையே பெங்களூருவைச் சுற்றியுள்ள பல்வேறு டீ ஸ்டால்கள் மற்றும் உள்ளூர் ஜாயிண்டுகளிலும் செயல்படுத்துவதற்குத் தேவையான திட்டத்தை வகுத்தனர்.

மாற்றத்தை உருவாக்குதல்

ரௌட்டர்களை உருவாக்குவது முதல் மென்பொருள் எழுதுவது வரை இவர்களது சேவை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் நிறுவனத்திற்குள்ளேயே உருவாக்க தீர்மானித்தனர்.

இவர்கள் ஒவ்வொரு ஸ்டோர்களுக்கும் இணைப்பை வழங்கி நேரடியாக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்கின்றனர். கடை உரிமையாளர்களுடன் வருவாய் பகிர்ந்துகொள்ளப்படும் விதத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வைஃபை டப்பா ஃபைபர் ஆப்டிக்ஸ் நெட்வொர்கை உருவாக்கி ஒவ்வொரு கடையுடன் பார்னர்ஷிப்பில் இணையும்போது அவற்றை இணைக்கும் பொறுப்பை உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் ஒப்படைக்கின்றனர். ஃபைபர் ஆப்டிக்ஸ் காற்றலையைக் காட்டிலும் வலுவான இணைப்பை வழங்கும் என்று இருவரும் திடமாக நம்புகின்றனர். குறைந்தபட்டம் 40 mbps வேகத்தை வழங்குவதற்காக பெங்களூருவிலுள்ள பெரும்பாலான ISP-க்களுடன் பார்ட்னராகியுள்ளனர்.

வைஃபை டப்பா ரௌட்டர்கள் 180 அடி சுற்றளவிற்கு ஒரே நேரத்தில் 200 வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கக்கூடியதாகும். வாடிக்கையாளர் ப்ரீ-பெய்ட் டோக்கனை வாங்கினால் போதும் வைஃபையுடன் இணைத்துக்கொள்ளலாம். இணைப்பை வழங்க முகப்பு பகுதியில் டோக்கன் எண்ணை பதிவுசெய்யவேண்டும்.

”ஹார்டுவேர், மென்பொருள், விற்பனைக் குழு, செயல்பாட்டுக் குழு, வாடிக்கையாளர் சேவை குழு ஆகியவற்றை சொந்தமாக உருவாக்கி கேபிள்கள் வாயிலாக இணைப்பை வழங்குவது சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படுவது கடினமாக இருந்தது. எனினும் புதுமையான ஒன்றை வழங்க விரும்பினால் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் புதுமையை புகுத்தவேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்றார்.

கான்செப்ட், வலுவான தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தாண்டி தற்போது சந்தையில் சேவையளிப்போரின் கட்டணங்களைக் காட்டிலும் குறைவான கட்டணத்தை வழங்க தயாராகியுள்ளது வைஃபை டப்பா. அதாவது 100 MB-க்கு இரண்டு ரூபாயும் 500 MB-க்கு பத்து ரூபாயும் 1 GB-க்கு 20 ரூபாய் (24 மணி நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்) கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் ஜியோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் தற்போது ப்ரீ-பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 150 MB 19 ரூபாய் கட்டணத்திலும் 1.05 GB 52 ரூபாய் கட்டணத்திலும் வழங்குகின்றனர்.

செல்லுலார் டவர்களுடன் ஒப்பிடுகையில் வைஃபை டப்பாக்களை எளிதாகவும் மலிவான கட்டணத்திலும் உருவாக்கி நிறுவ முடியும். இதன் காரணமாக மலிவான கட்டணத்தில் சேவை வழங்குவது சாத்தியமாகிறது. ஒரு டப்பாவை அமைக்க சுமார் 4,000 ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டியிருக்கும். ஒரு டெலிகாம் நிறுவனத்தின் செல்லுலார் டவரை நிறுவ ஒன்று முதல் இரண்டி கோடி ரூபாய் வரை ஆகும். இந்த ஒரு டவர் வழங்கும் சேவையை 20 வைஃபை டப்பாக்கள் வழங்குகிறது. இவ்விரு நிறுவனர்களும் லட்சக்கணக்கான வைஃபை டப்பாக்களை நகர் முழுவதும் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

image


இதுவரை நடந்தவை…

இவர்களது முதல் டப்பா 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செயல்படத் துவங்கியது. தற்போது கிட்டத்தட்ட 400 டப்பாக்களை அமைத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 டப்பாக்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

வைஃபை டப்பா விளம்பரமோ அல்லது மார்க்கெட்டிங்கோ இன்றி வளர்ச்சியடைந்துள்ளது. தற்சமயம் குடியிருப்புவாசிகளை இலக்காகக்கொண்டு செயல்படவில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மற்ற ISP-க்களுடன் இணைந்து செயல்படும் முயற்சியில் ஈடுபடவில்லை. குறைவான வருமானமுள்ள பிரிவினர், தினக்கூலிகள், அருகாமையிலுள்ள முடிதிருத்தம் செய்பவர்கள், கடைக்காரர்கள், மாணவர்கள் போன்றோர் இவர்களது முதன்மை இலக்காகும். மேலும் மாணவர்கள் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள ப்ரீ-பெய்ட் இணைப்புகளை பயன்படுத்த்க்கொள்ளலாம்.

”இவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் இடைவெளியை நீக்கும் முயற்சியில் நாங்கள் செயல்படுகிறோம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பெங்களூருவிலுள்ள கிட்டதட்ட அனைத்து ISP-க்களுடனும் பார்ட்னராக உள்ளோம். எங்களது நெட்வொர்க் வளர்ச்சியடைய உதவக்கூடியவர்களுடன் இணைவதற்கு தயாராக உள்ளோம்,” என்றார்.

வைஃபை டப்பா Y Combinator மற்றும் வேறு சில முதலீட்டாளர்களிடமிருந்து விதை நிதி உயர்த்தியுள்ளது. 2018-ம் ஆண்டின் மத்தியில் பெங்களூரு முழுவதும் சேவையளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து மேலும் விரிவடைய மார்கெட்டிங் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

”நானோ சுபந்துவோ தவிர்க்கமுடியாத காரணங்களால் முழுமையாக செயல்பட இயலாமல் போனாலும் எங்களது திறமையான குழு வாயிலாக வைஃபை டப்பா தடங்கல்கள் எதுவுமின்றி சேவையளித்து முழுவீச்சுடன் செயல்படுவதை எங்களது நிறுவன அமைப்பு உறுதி செய்கிறது,” என்றார் கரம்.

இயற்கை பேரிடர்களோ அல்லது மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர் சூழல்களிலோ தேவைப்படும் சேவையை சிறப்பாக வழங்கும் விதத்தில் அதிக தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது வைஃபை டப்பா. எப்படிப்பட்ட கடினமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் எப்போதும் தடங்கல்களற்ற இணைப்பு வழங்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்கிறோம்,” என்று கூறி முடித்தார் கரம்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா

Add to
Shares
285
Comments
Share This
Add to
Shares
285
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக