பதிப்புகளில்

’இந்தியத் தாயின் மகள் மீது மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் இந்திய அரசு வேடிக்கை தான் பார்க்கும்’- தடகள வீராங்கனை சாந்தி

28th Dec 2016
Add to
Shares
22
Comments
Share This
Add to
Shares
22
Comments
Share

தனக்கு நடந்த அவலம் வேறு ஒருவருக்கும் குறிப்பாக பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு நடக்கக் கூடாது என்று தனது ஃபேஸ்புக பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சாந்தி செளந்தரராஜன். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள காதக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தராஜனுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்றுனராக பணியமர்த்தம் செய்யும் அரசாணை கடந்த வாரம் அளிக்கப்பட்டது. இவரை சிறப்பினமாகக் கருதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், அந்த பணி நியமன ஆணையினை சாந்தியிடம் வழங்கினார். 

image


தனக்கான பணி நியமன ஆணை கிடைத்திருந்தாலும் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட பதக்கத்தை திரும்பப்பெறவும், தன்னை பாலின சோதனைகளுக்கு உட்படுத்தி, நடந்த உரிமை மீறலுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சாந்தி. அது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆங்கில பதிவின் தமிழாக்கம்:

”3 வருட கடும் போராட்டத்துக்குப் பிறகு எனக்கு அரசுப் பணி கிடைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி என்னுடைய உரிமை. நான் யாரிடமிருந்தும் பச்சாதப்பத்தை எதிர்பார்க்கவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. இந்த நாட்டுக்காக நான் 12 பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் ஊக்க மருந்து உட்பட எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதைக் காரணம் காட்டி என்னிடம் இருந்து பதக்கங்களை எடுத்துச்செல்ல யாருக்கும் உரிமை இல்லை. இருப்பினும் என்னிடமிருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அவமானம் அல்ல, இந்த தேசத்துக்கான அவமானம்.

இந்தப் பதக்கங்கள் அனைத்தும் என்னுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கான அடையாளங்கள். நான் பெண் அல்ல என்று சிலர் நினைத்ததாலேயே நான் அரை நாட்களுக்கும் மேலாக நிர்வாணமாக நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டேன். தோஹாவில் உலக அரங்கில், இந்திய அதிகாரிகள் முன்னாலேயே அவமானப்படுத்தப்பட்டேன். கேலிக்கு உள்ளாக்கப்பட்டேன். கிட்டத்தட்ட பாலியல் பலத்காரத்துக்கு சமமான இழிவுக்கு உட்படுத்தப்பட்டேன். அப்போதும் இந்திய அரசாங்கம் எனக்குப் பின்னால் நிற்கக்கூட இல்லை.

நீங்கள் பதக்கம் வென்றால் உங்களைக் கொண்டாடுவார்கள். ஆனால் உங்கள் பாலினமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு, நீங்கள் அவமானப்படுத்தப்பட்டால் அரசு அமைதியாக வேடிக்கைத் தான் பார்க்கும். இந்தியத் தாயின் மகள் மீது மனித உரிமை மீறல் செயல்கள் நடந்தாலும் அவர்கள் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்பார்கள். 

உலக அரங்கில் இந்திய பெண்களுக்காக குரல் கொடுக்க ஆளில்லாமல் அன்று நான் நிற்கதியாகத்தான் நின்றேன். இது என்னுடைய தகுதியைப் பற்றிய கேள்வி அல்ல. ஆனால் எனக்கு நடந்த அவலம் இனி எந்தவொரு பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். முழு நம்பிக்கை மற்றும் பலத்தோடு என்னுடைய குரலை உயர்த்திச் சொல்கிறேன். நான் பெண்ணாகத்தான் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன்.

பெண்கள் மட்டும் தொடர்ந்து தாங்கள் யார் என்றும், என்ன என்றும் நிரூபிக்க வேண்டிய பரிதாபத்தில்தான் விளையாட்டு சூழல் இன்றளவும் உள்ளது. விளையாட்டைத் தாண்டி இதை மனித உரிமைகள் மீறலாகப நான் பார்க்கிறேன். இதற்கு எதிராக என் கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன், குரல் கொடுப்பேன்...”

தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி, 12 சர்வதேச பதக்கங்களையும், பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். 2006 நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார். ஆனால் சாந்தியின் பாலினம் குறித்த சந்தேகம் ஏற்பட்டதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Add to
Shares
22
Comments
Share This
Add to
Shares
22
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக