பதிப்புகளில்

மருந்து சீட்டு இல்லாமல் இனி வீடு தேடி மருந்துகள் வரும்: Aguai Solutions

16th Dec 2015
Add to
Shares
48
Comments
Share This
Add to
Shares
48
Comments
Share

பிம்லேஷ் குண்டுராவ், ஒரு விளையாட்டு வீரர் என்பதால் அவருக்கு அடிக்கடி அடிபடும். ஒருமுறை கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால் இரண்டு வாரங்கள் வீட்டைவிட்டு நகரவே முடியவில்லை. முதல் முதலில் சந்தித்த மருத்துவர் கொடுத்த மருந்துசீட்டை தொலைத்துவிட்டிருந்தார்.

”மேஜையில் பல்வேறு மருந்துகள் சிதறிக்கிடந்தன.அதில் எதை சாப்பாட்டிற்கு முன்பு சாப்பிட வேண்டும், எதை சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட வேண்டும் என எங்களில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதை எந்த வேளையில் சாப்பிட வேண்டும், தினம் தோறும் எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை. மிகச்சிரமப்பட்டு எங்கள் மருத்துவரை சந்தித்தோம். அவருக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. என்ன மருந்து கொடுத்தார் என்றும் நினைவில் இல்லை. நாங்கள் மருந்தின் பெயர் ஒவ்வொன்றாக சொல்லி அதன் பிறகு அவர் கொடுத்த குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டோம்” என்று அந்த நாட்களை நினைவுகூர்கிறார் பிம்லேஷ்.

பிம்லேஷுக்கு இந்த அனுபவங்கள் ஒரு தொழிலுக்கான அஸ்திவார சிந்தனையை கொடுத்தது. ஒரு சமயம், அவரது அம்மா தனது தைராய்டு மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை சரிவர எடுத்துக்கொள்ளாத காரணத்தால் கடுமையான பாதிப்பிற்குள்ளானார். அப்போது அவரது மருந்து உட்கொள்ளும் முறையை பற்றி குடும்பத்தில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அப்போதும் மருத்துவரின் மருந்துசீட்டை தொலைத்துவிட்டிருந்தார்கள். இந்த இரண்டாவது அனுபவம் பிம்லேஷை மேலும் யோசிக்க வைத்தது.

image


டிஜிட்டல் முறையில் மருத்துவசீட்டை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. மருந்தின் இருப்பு முடிந்ததும் அது நமக்கு நினைவூட்டும் வகையில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதினார்கள். அப்படி உருவானது தான் 'அகுய் சொல்யூசன்ஸ்' (Aguai Solutions).

சந்தை நிலவரம்

இந்தியாவின் மருத்துவ சந்தை சிஏஜிஆர் அறிக்கைப்படி 17 சதவீத வளர்ச்சியை கொண்டது. 2017ம் ஆண்டு இந்த துறை 160 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிம்லேஷ் அகுய் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு செயலிகளை உருவாக்கித் தருகிறது. இணையம், க்ளவுட் மற்றும் கைபேசிகளுக்கான சுகாதார துறை சார்ந்த மென்பொருளை உருவாக்கி தருகிறது.

கடந்த ஓராண்டாக தங்களுக்கான பிரத்யேக மென்பொருளை உருவாக்குவதில் இவர்களின் குழு ஈடுபட்டு வருகிறது. மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவச்சீட்டு முறையை எளிமைப்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்திய மருத்துவத்துறையின் முன்னேற்றத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருப்பதாக பிம்லேஷ் தெரிவிக்கிறார். குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக மின்னணு மருத்துவ பதிவு மற்றும் நோயாளி மேலாண்மை போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறார். அவரது ஆய்வுகள் மூலம் ஒன்று தெளிவாகிறது. வெறுமனே டேடா எண்ட்ரி மட்டும் போதாது, ஒட்டுமொத்தமாக தகவல்களை கையாளும் திறன்கொண்ட தொழில்நுட்பம் மூலம் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும் என்கிறார்.

மூன்றுவிதமான வேலை அமைப்பு

அகுய் சொல்யூசன்ஸ் கடந்த ஆறுமாதங்களில் மருந்தகம், நோயாளிகள், மருந்து விற்பனை பிரதிநிதிகளை இணைக்கும் வகையிலான மூன்று கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

மருந்து மற்றும் மருந்து விநியோகம் : மருந்தகங்கள் தங்களுக்குள் இணைந்து செயலாற்றும் வகையிலான தொழில்நுட்பம் இது. பெங்களூரில் மட்டும் 6 கடைகள் இதை பயன்படுத்தி இயங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தென் இந்தியா முழுவதும் 50 கடைகளை சென்றடைய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

மெடிஅசி : இந்த தொழில்நுட்பத்தில் 700 பேர் இதுவரை இணைந்திருக்கிறார்கள். இதுவரை 100 ஆர்டர்கள் வரை நடந்திருக்கின்றன.

ரெயக்சி : மருத்துவர்கள் வழங்கும் மருத்துவசீட்டை கணினிப்படுத்தும் முறை ஆகும். இது இம்மாதம் வெளியாக இருக்கிறது.

”எங்களின் ஒன்றிணைந்த சுகாதார அணுகுமுறை என்பது மிகப்பெரிய யூஎஸ்பி மற்றும் முக்கிய அம்சம் ஆகும். நாங்கள் தனித்துவமான பேக்எண்ட் மற்றும் விதவிதமான ஃப்ரண்ட் எண்டை கொண்டிருக்கிறோம். இது இணையம், க்ளவுட் மற்றும் கைபேசிக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் பிம்லேஷ்.

கைகோர்ப்பு

மதுர் ராவ் என்பவரோடு இதற்காக கைகோர்த்திருக்கிறார். இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் 15 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர். ஸ்ரீராம் எம்சி என்பவர் முக்கியமான டெக்னிகல் ஆர்கிடெக்டாக இருக்கிறார். ஸ்ரீராம் பத்து ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர். பல்வேறு புதுநிறுவனங்கள் காலூன்றவும் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

டாக்டர் நியாஸ் என்பவர் மருத்துவத்துறை சார்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர். மருத்துவ அலோசகராக இணைந்திருக்கிறார். தருண் பார்கவ் என்பவர் மூத்த வடிவமைப்பு தலைவராக இணைந்திருக்கிறார். சுரப் என்பவர் துணைத்தலைவராக பயோலைஃப் சைன்ஸஸ் நிறுவனத்தில் இருந்தவர். மருந்து ஆலோசகராக இணைந்திருக்கிறார்.

இது எப்படி வேலை செய்கிறது?

மருத்துவ சீட்டை ஒரு போட்டோவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு இதை அனுப்ப முடியும். அந்த மருந்தகம் இதை இணைய செயலி வழியாகவோ, கைபேசி செயலி வழியாகவோ பெற்றுக்கொள்ளும். பிறகு அந்த மருந்துகளை உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடும். இந்த செயலி அவ்வப்போது மருந்துகள் எடுத்துக்கொள்ள சொல்லி நமக்கு நினைவூட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முறை மருத்துவரோடு பகிர்ந்துகொள்ளப்படும். மருந்தகங்கள் விநியோகஸ்தர்களோடு இணைப்பை பெறுவதால், மருந்துகளின் கையிருப்பு மற்றும் தேவைகளை அவ்வப்போது அவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

மருத்துவ ஆலோசக தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அகுய் இதற்காகவே ஒரு டிஜிட்டல் பேனா ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். டாக்டர்கள் அந்த பேனாவை பயன்படுத்தி எழுதும் குறிப்புகள் ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்டு நோயாளிகள் அதை பார்த்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. "தற்பொழுது டாக்டர்களிடம் மினி-ஈஎம்ஆர் களஞ்சியமாக இது இருந்து, அவரது செல்பேசியில் நோயாளிகள் மற்றும் அவர்களின் மருந்துகளை கையாள உதவும் ஒரு கருவியாக இருக்கும்” என்றார் பிம்லேஷ்.

யுவர்ஸ்டோரி ஆய்வு

மருத்துவத்துறையில் இதன் தேவை என்பது 2012ம் ஆண்டு 61 பில்லியன் டாலரிலிருந்து 2015ம் ஆண்டு 89 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. 2012-13ம் ஆண்டுகளில் இந்த துறையின் மதிப்பு 75 பில்லியன் டாலராக இருந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பம் எல்லோரையும் சென்று சேருமானால் மருத்துவத்துறையில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வாக இது அமையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இணையதள முகவரி: Aguai Solutions

ஆங்கிலத்தில் : SINDHU KASHYAP | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
48
Comments
Share This
Add to
Shares
48
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக