பதிப்புகளில்

கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு மில்லினர்களான பிரபலங்கள்!

YS TEAM TAMIL
22nd Dec 2015
Add to
Shares
19
Comments
Share This
Add to
Shares
19
Comments
Share

பள்ளிக் கல்வி முறையை கண்டனம் செய்பவர்கள் எப்போதுமே கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய கோடீஸ்வரர்களின் கவர்ச்சி மிக்க கதையைத்தான் மேற்கோள் காட்டுகின்றனர். மாணவர்களின் மனநிலையில் அவர்கள் ஒரு தேவதூதரைப் போல் காட்சி அளிக்கின்றனர். தொழில் நிறுவன வெற்றிக்கும் கல்வித் தகுதிக்கும் இடையில் உறவு இருப்பதாகக் காணப்படும் மேம்போக்கான தோற்றத்தை மதப் பற்றுக் கொண்டவர்களைப் போல தீவிரமாக அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆக மக்களின் கண்களை மறைத்துள்ள இரும்புத் திரையின் மீது பின்வரும் தேவ தூதர்கள் ஒரு வித்தியாசமான பார்வையைச் செலுத்துகின்றனர்: ஸூக்கர் பெர்க், ஜாப்ஸ், கேட்ஸ் மற்றும் வீட்டுப் பெயர்களாக மாறிய முழுமையான குடும்பப் பெயர்கள் இவை அனைத்தும்.

ஆனால் இந்த கற்பனையான விவரிப்புகள் இந்த மனிதர்களின் உண்மையான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான்: கவுரவமான குடும்பம், மகத்தான நுண்ணறிவு, விவேகமான வர்த்தகம், தொழில்துறை, ஒன்றை உருவாக்க அல்லது தகர்ப்பதற்கான தீவிரமான உறுதி. யுவர் ஸ்டோரி இந்த மனிதர்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகங்களுக்குப் பின் உள்ள உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

மைக்கேல் டெல் Michael Dell

ஏழு வயது மைக்கேல் டெல் விளையாட்டுப் பொருட்களை அலட்சியப்படுத்தியவர். அறிவுப்பூர்வமான ஒரு குழந்தையைப் போல அவர் தன் மூளையை பங்கு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்தார். வழக்கமான குழந்தைகள் லெகோ பிளாக்குகளுடன்(Lego blocks) விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் டெல் சற்று வித்தியாசமாக வளர்ந்தார்.

ஏழு வயதில், அவருக்குப் பரிசளிக்கப்பட்ட கால்குலேட்டர் தான் அவரின் உலகமாக இருந்தது. தனது பதின் பருவத்தில் ஆப்பிள் கம்ப்யூட்டரை முழுவதுமாக கழட்டிப் போட்டு விட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பார். பின்னர் ஆஸ்டினில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் (pre-medical program) சேர்ந்தார். கடைசி நேரத்தில், மருத்துவப் படிப்பு சரிவராது என எண்ணி அதைப் பாதியில் விட்டு விட முடிவு எடுக்கும் துணிச்சல் யாருக்கு வரும்? அப்படி செய்யாமல் இருந்திருந்தால் 18.5 டாலர் பில்லியனுக்குச் சொந்தக்காரராக வளர்ந்திருக்க முடியுமா? ஏனெனில் மைக்கேல் டெல் அதைத்தான் செய்தார், வெற்றி அடைந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்


ஸ்டீவ் ஜாப்ஸ் Steve Jobs

ஸ்டீவ் ஜாப்ஸ்சின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. பில்கேட்ஸ் அல்லது மார்க் ஸூக்கர்பெர்க்கிற்குக் கிடைத்த சிறப்புச் சலுகைகள் அவற்றால் வந்த கவலை எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு இல்லை. அவரின் குழந்தைப் பருவம் பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. டெலிவிஷன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது நீக்குவதும் கட்டமைப்பதும் அவரது வேலையாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் கதை கல்வி முறையால் அடைந்த ஏமாற்றத்தில் பாதியில் படிப்பை நிறுத்தியதால் செல்வந்தரான ஒருவரின் கதை அல்ல. தனது பெற்றோரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதா? படிப்பைத் தேர்வு செய்வதா? என்ற இரண்டுக்கும் இடையில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தில் உருவான ஒருவரின் கதை.

சின்ன வயதில் ஜாப்ஸ் நன்கு படித்தார். அவரது படிப்பைப் பாராட்டி இரண்டு வகுப்புகள் கூடுதலாகப் பாஸ் போடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது பெற்றோர்கள் ஒரு வகுப்பு மட்டுமே கூடுதலாகப் பாஸ் போட்டால் போதும் என்று கூறி விட்டனர்.

ஜாப்ஸ் ஒரு புத்திசாலி. வர்த்தக ஆர்வலர். ரீட் கல்லூரியில் இருந்து அவர் வெளியேறிய பிறகு அடுத்த 18 மாதங்கள் ஆக்கப் பூர்வமான படிப்புகளைப் படித்தார். பின்னாளில் அவரது ஆப்பிள் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்குரிய அற்புதமான மூளைக்காரர்களை அடையாளம் கண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டார், வெற்றியும் கண்டார்.

மார்க் ஸூக்கர்பெர்க் Mark Zuckerberg

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ, படிப்பைப் பாதியில் விட்ட புத்திசாலிக் கோடீஸ்வரர் என்று இளைஞர்களால் கொண்டாடப்படுபவர். எனினும் அவருடைய வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால் அவர் பள்ளிக்கு நண்பராகவே இருந்திருக்கிறார். மார்க் ஸூக்கர்பெர்க் 28.6 பில்லியன் டாலருக்கு அதிபரானார். பள்ளியில் மேதாவிப் பட்டம் இவரது தலையை ஒரு கிரீடம் போல அலங்கரித்தது. கணக்கு, இயற்பியல் மற்றும் வானியலில் தீவிர ஆர்வமாக இருந்தார். ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் பிலிப்ஸ் எக்செட்டெர் அகாடமியில் சேர்ந்தார். ஹார்வர்டில் படித்த அவர் அதைப் பாதியில் விட்டு விட்டார். அதன்பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடங்கிய அவர் மறுபடி திரும்பிப் பார்க்கவே இல்லை. அவரது ஆசிரியர்களால் புத்திசாலி என்று அழைக்கப்பட்ட மார்க் ஸூக்கர்பெர்க், இலியட் மனப்பாடப் பாடலை விளையாட்டாக மனப்பாடம் செய்து ஒப்புவித்தார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்


பில் கேட்ஸ் Bill Gates

தயாள குணம் கொண்ட வர்த்தகர் வில்லியம் எச்.கேட்ஸ் மற்றும் மேரி மாக்ஸ்வெல் கேட்ஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் பில்கேட்ஸ். பில்கேட்ஸ்சின் தாயார் மாக்ஸ்வெல் தலையில் இருந்த தொப்பியில் ஒரு சில இறகுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மயிலின் தோகையே குடியிருந்தது. ஒரு வேளை பில்கேட்ஸ்சின் பெற்றோர் வயதான காலத்திலும் உயிரோடு இருந்திருந்தால் அவரது கதை பாட்மன் கதைதான். அமெரிக்காவின் புறநகர் பகுதி ஒன்றில் வசித்த பில்கேட்ஸ் வழக்கமான சிறுவர்களைப் போல சுட்டி உடைகளைப் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கவில்லை. தனது பதின் பருவத்தில் வீணாகக் காலம் கழிக்காமல் புரோகிராம்களிலும் கோடிங் எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

ஹார்வர்ட்டில் இருந்து அவர் பாதியில் வெளியேறினார். ஆனால் ஹார்ட்வேர்ட் தேர்வில் தோல்வி அடைந்து அதனால் வெளியேறவில்லை. அவர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தார். அதனால் வெளியேறினார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Albert Einstein

விஞ்ஞானிகள் கூட்டத்தில் புரிந்து கொள்ளமுடியாத மர்மங்கள் சூழ்ந்திருந்த ஒரு விஞ்ஞானி என்ற ஒரு இடத்தைப் பெற்றிருந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு அறிவியல் மேதை. புரட்சியாளர். படிப்பைப் பாதியில் விட்டவர் என்பதில் இந்த அளவுக்கு பிரபலமானவர் வேறு யாரும் இல்லை. அவருடைய கோட்பாடுகள் ஒருபுறம் விஞ்ஞான பதிப்புகளில் இடம் பெற்றிருக்க, வேடிக்கையான ஹேர் ஸ்டைல், ஆணவமான மேற்கோள்கள், பேச்சு என்று ஒரு பாப் கலாச்சாரப் பிரபலம் போலத்தான் அவரது தோற்றம் இருந்தது.

தவிர, அவர் (அது வழக்கமான பட்டியலில் இருந்து அவரை வேறுபடுத்தியது) சூரிச்சில் உள்ள ஸ்விஸ் பெடரல் பாலிடெக்னிக் பள்ளி, ஸூரிச் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பல எந்திர உபகரணங்களைச் செய்தார் ஐன்ஸ்டீன். அவரது ஆராய்ச்சி, அவரது மனதிற்கு பல விஷயங்களை வேடிக்கையாகத் புரிய வைத்தன. கல்லூரியில் ரொமான்ஸ் என்றால், தனது காதலி மிலெவா மாரிக் உடனும் இயற்பியல் புத்தகங்களை படித்து அவர் செலவிட்டது தான்.

16 ஆவது வயதில் தனது முதல் கட்டுரையை எழுதினார் ஐன்ஸ்டீன். அதன் தலைப்பு “ஒரு காந்தத் தளத்தில் ஈதரின் நிலை பற்றிய ஆய்வு” ( On the Investigation of the State of Ether in a Magnetic Field). 16 வயதில் நமது சிறந்த கட்டுரை ஒரு கற்பனை எடிட்டருக்கு எழுதிய ஒரு கடிதமாகத்தானே இருக்கும்...

கவுதம் அதானி

கவுதம் அதானி


கவுதம் அதானி Gautam Adani

குஜராத் பல்கலைக்கழகத்துப் பட்டத்தை பாதியில் விட்ட அதானி, 5.7 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர் ஆனார். இந்தியக் கோடீஸ்வரர்களில் ஒருவரான அதானி, தனது 20வது வயதிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார். டைமண்ட் தரகு வர்த்தகத்தில் ஈடுபட்டார். கவுதம் அதானியின் சாம்ராஜ்யம் விவசாயம், தாதுக்கள், எண்ணெய், மேம்பாடு என்று பல்வேறு விதமான துறைகளுக்கும் பரந்து விரிந்திருக்கிறது. இவை அத்தனையும் ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் கடினமான, கடினமான, கடினமான, உழைப்பு,

அமான்சியோ ஆர்டெகா

குடிசைவாசியாக இருந்து கோடீஸ்வரர் ஆனவர்களின் கதைகளில் நாம் சொல்லும் ஒரே கதை அமான்சியோ ஆர்டெகாவின் கதைதான். 65.6 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர். அவரின் ஒரு சாதாரண ஆரம்பம், ஒரு சில ஆச்சரியமான கதைகளில் ஒன்று. கடின உழைப்பு, நிலையான வெற்றிக்கான அற்பணிப்பு என்று அவரது பயணம் விரிகிறது. பள்ளியில் படிக்கும் போது இலியட் மனப்பாடப் பாடலை அவர் மனப்பாடம் செய்யவில்லை. டெலிவிஷனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போடவில்லை அல்லது தனது பதின் பருவத்திலேயே ஒரு கோட்பாட்டை எழுதிவிடவில்லை. இப்படி அசாதாரணமானது எதுவும் இவரிடம் இல்லை.

1936 ஸ்பெயினில் உள்ள லியோனில் பிறந்தார் ஆர்டெகா. 14 வயதில் பள்ளிப் படிப்பை விட்டு விட்டு வேலைக்குச் சென்றார். பதின் பருவம் முழுவதும் பெரும் போராட்டத்திற்குப் பின் 1972ல் குளியல் அங்கி தயாரிக்கும் கன்பெசியன்ஸ் கோவா Confecciones Goa நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் அவருக்குள் இருக்கும் விடா முயற்சியையும் ஆற்றலையும் பலத்தையும் மிடுக்கையும் அறத்தையும் வெளிக் கொண்டு வந்தது.

அவரது ஸாரா நிறுவன ஆடைகளை ஒவ்வொரு முறை அணியும் போதும் அவருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

கல்லூரிகளின் புனிதமான அரங்குகளை நழுவவிட்டவர்கள் நிறையப் பேர் உண்டு. வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், விடா முயற்சியுடன் போராடியவர்கள், ஏழையாக இருந்து பணக்காரர்களாக மாறியவர்கள், புரட்டிப் போட்டவர்கள், புதுமையைக் கண்டறிந்தவர்கள், வரலாற்றை உருவாக்கியவர்கள் என நிறையப் பேர் உண்டு. சவூதியைச் சேர்ந்த முகமது அல் அமவுதி பல்வேறு துறைகள் அடங்கிய வர்த்தக சாம்ராஜ்யத்தை கொண்டவர். பிரான்கோய் ஹென்ரி பினால்ட் அவரது தந்தையிடமிருந்து ரத்த சம்பத்தை மட்டுமல்ல கடின உழைப்பையும் வியர்வையும் பரம்பரைச் சொத்தாகப் பெற்றவர். வினோத் கோயங்கா தனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தை கல்வித்துறைக்கு விரிவு படுத்தியவர். பிஎன்சி மேனன் சந்தர்ப்பவசமாக ஒரு அரபியைச் சந்திக்க, 26வது வயதில் ஒமானி ஸ்கை கைக்கெட்டும் தூரத்திற்கு வந்தது. தற்போது மேனனின் சொத்து மதிப்பு 60 கோடி டாலர்.

இந்தப் பாடம் கடினமானது. ஆனால் எளிமையானது: புள்ளி விபரங்கள் உங்களுக்கு எதிராக உள்ளன. விளையாட்டு வீரர்கள் பிறப்பதில்லை. அவர்கள் குழந்தையில் இருந்து உருவாக்கப்படுகிறார்கள், கல்லூரி நெருக்கடியால் அல்ல. நடிகர்கள் பொதுவாக அதிர்ஷ்டசாலிகள். நடிகர் சங்கத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 368 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அதில் கோடீஸ்வரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

உலகம் எழுநூறு கோடிப் பேரைக் கொண்டது. அதில் ஒரு கோடியே 37 லட்சம் பேர்தான் 50 டிரில்லியன் டாலர் சொத்தைக் கொண்ட பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஒரு கோடியே 37 லட்சம் என்பது மொத்த மக்கள் தொகையை ஒப்பிடும் போது ஒரு கணத்தில் தோன்றி மறையும் மின்னல்தான். அமெரிக்காவின் 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் மில்லியனர்கள் 0.9 சதவீதம்தான். பில்லியனர்கள் நிலைமை இன்னும் மோசம். 0.0001 சதவீதம்தான் (உலக பில்லியனர்களின் கணக்கில் 40 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்தான்).

பணம் சாம்பாதிப்பதற்கான வாழ்வா சாவாப் போராட்டத்தில் ஒரு சிலருக்கு செத்துப் போவதே சிறந்ததாக இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையை நாம் அமங்கலமாக முடிக்க வேண்டாம். மேற்கண்ட மனிதர்களிடம் இருந்து, அவர்கள் கல்வித் தகுதியற்றவர்கள் என்பதைச் சொல்லி அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது உங்களின் வெற்றியைத் தடுக்குமே தவிர முன்னேறச் செய்யாது. கடின உழைப்பும் நன்னெறிசார் உழைப்பும் மட்டுமே உங்களை வெற்றி ஏணியில் தடைகளைத் தாண்டி ஏறச் செய்யும். அமைப்பு முறையைக் குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கீழ்ப்படியில்தான் இருப்பார்கள். அமைப்பு முறையை மாற்ற முயற்சிப்பவர்கள்தான் உச்சிக்குச் செல்வார்கள்.

ஃபண்டர்ஸ் அண்ட் பவுண்டர்ஸ் தயாரித்து அளித்திருக்கும் இந்த  “The Aha Moments – How Entrepreneurs realized what to do in life” என்ற இந்த வரைபடம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

image


ஆக்கம் : Aijaz | தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா

Add to
Shares
19
Comments
Share This
Add to
Shares
19
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக