பதிப்புகளில்

மதுரையை சேர்ந்த விஜயராகவன் விவசாயத்திற்கு உருவாக்கிய புதிய கருவி!

Swara Vaithee
6th Oct 2015
Add to
Shares
43
Comments
Share This
Add to
Shares
43
Comments
Share

"எனக்கு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது. அப்போது எங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொன்னார்கள், நான் ஆங்கிலத்தில் மிகக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியே பேசினேன். என் கண்கள் குளமானது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை” எனும் டாக்டர் விஜயராகவன் விஸ்வநாதன், "சேர்ன்" (CERN) விஞ்ஞானி மற்றும் ஒரு தொழில்முனைவர்.

மதுரையை அடுத்த ராஜபாளையத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் விஜயராகவன், ஒரு விவசாயிக்கும், இல்லத்தரசிக்கும் மகனாக பிறந்தவர். கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பை மிகச்சிறிய வயதிலேயே உணர்ந்துகொண்டார். கல்வியில் நன்கு படித்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்று எப்போதுமே விரும்பினார்.

எலக்ட்ரானிக்ஸ் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் பொறியியலை தேர்ந்தெடுத்தார். "எனக்கு நினைவிருக்கிறது, ஆரம்பகாலங்களில் மின் கருவிகளை திறந்த பார்த்து, அது எப்படி வேலை செய்கிறது என கவனிப்பேன்” என்கிறார் விஜய். எனவே கோயம்புத்தூரில் உள்ள அம்ருதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தபோது யாருக்கும் ஆச்சரியமாகவே இல்லை.

மாறுபட்ட பாடங்களை படித்தபோது

எதிர்பாராதவிதமாக நிதி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் ஆண்டில் தன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், உறவினர்கள் மூலமாகவும், நண்பர்கள் உதவியாலும் தன் படிப்பை தொடர்ந்தார். கல்வி உதவித்தொகையும் இவருக்கு விரைவிலேயே கிடைத்தது. மூன்றாமாண்டு படித்த போது வளாக நேர்காணலில் போவையிலுள்ள லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்தில் தேர்வானார்.

டாக்டர் விஜயராகவன் விஸ்வநாதன், செர்ன் விஞ்ஞானி

டாக்டர் விஜயராகவன் விஸ்வநாதன், செர்ன் விஞ்ஞானி


கல்லூரியில் முதலாமாண்டை நினைவுகூர்ந்தார். அப்போது மினி மேனன் என்ற பெயருடைய விரிவுரையாளரை பார்த்து பயந்தார். காரணம் அவர் மிகச்சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதே. அவரிடம் ஆங்கிலத்தில் உரையாட வேண்டிய நிர்பந்தம் இருந்ததே அவரை பார்த்து பயந்து ஒதுங்கியதற்கு காரணம் என்கிறார் விஜய். ஒருநாள் இவரை மடக்கி பிடித்த மினி மேனன் இவர் வாழ்க்கையையே மாற்றக்கூடிய அறிவுரை ஒன்றை வழங்கினார்.

ஆங்கில நாளிதழ்களில் வரும் தலையங்கங்களை தினம்தோறும் படிக்கச்சொல்லி வலியுறுத்தினார். அதில் வரும் வார்த்தைகள் புரிந்தாலும், புரியாவிட்டாலும் படிக்க சொல்லியிருந்தார். ஒவ்வொருமுறையும் புரியாத வார்த்தை வரும்போது அதை ஒரு தாளில் எழுதி, பின்னர் அகராதியில் தேடி அதை புரிந்துகொள்ள தொடங்கினார் விஜய். மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திய ஒன்று இருக்கிறது, அது இவர் தனது பெரும்பாலான நேரங்களை நூலகத்தில் கழித்ததே.

மூன்றாமாண்டு படித்தபோது, கல்லூரியில் பேசிய ஒருவர் கல்வி உதவித்தொகை பற்றி கூறியது விஜயை சிந்திக்கத்தூண்டியது. அதுவே இவரை மேற்படிப்பு படிக்க தூண்டியது. வெளிநாடுகளிலுள்ள பல்வேறு பல்கலைக்கழங்களுக்கு விண்ணபித்தார், அதே நேரம் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தார். புத்திசாலித்தனமான மாணவனாக இருந்தும், கல்லூரி இறுதி அரையாண்டில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதிலும், வங்கி மேலாளர் இவரது கடன் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

”நாங்கள் ஏன் உனக்கு கடன் வழங்க வேண்டும்? எப்படியும் நீ திருப்பிதரப்போவதில்லை” என்றார்கள் அவர்கள்.

முதல் பனிப்பொழிவு

வங்கி மேலாளரின் பேச்சை கேட்டு விஜய் சோர்ந்துவிடவில்லை. நூறு சதவீதம் கல்விஉதவித்தொகை வழங்கக்கூடிய பல்கலைக்கழகங்களை தேடத் துவங்கினார். விரைவிலேயே இவரது தேடலுக்கு பலன் கிடைத்தது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் நூறு சதவீத கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தார். இத்தாலி-இந்தியா கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேர்வானார். "நான் அதற்கு முன்பு தமிழ்நாடு தாண்டி எங்குமே சென்றதில்லை. அது ஒரு கனவு தருணம்” என்கிறார் மெய்சிலிர்க்க. இது போன்ற உதவித்தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இந்தியர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2007ல் விஜய் வெளிநாடு செல்லும் விசா தொடர்பாக மும்பை செல்ல வேண்டி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதே நாளில் எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டிய நிலையும் இருந்தது. எனவே உடனடியாக விமானம் மூலமாக சென்னை திரும்பினார். "சென்னையில் இறங்கியதும் யார் பேசியதும் என் காதில் விழவில்லை. என் கவலையெல்லாம் சமநிலை மாற்றம் பற்றியதே. அது பற்றி கொஞ்சம் பயந்தது நினைவிருக்கிறது. பிறகு தான் சமநிலை மாற்றம் பற்றி நண்பர்கள் எனக்கு விரிவாக சொன்னார்கள்” என்றார் விஜய்.

செப்டம்பர் 2007ல், உதவித்தொகை திட்டத்தில் சேருவதற்காக இத்தாலிக்கு பறந்தார். மிலனின் தரையிறங்கிய விஜய் முதல் பனிப்பொழிவை நேரில் கண்டார். இது போன்ற சீதோஷ்ண நிலையை சமாளிப்பதற்கு எந்த வித திட்டமும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை. பனியிலிருந்து தற்காத்துக்கொள்ளும் உடைகள் அவரிடம் இல்லை. அவருக்கான உதவித்தொகையும் வந்திருக்கவில்லை. கைவசம் வேறு ஏதும் பணமும் இல்லை. "என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என யாரிடம் கேட்காத அளவுக்கு அப்பாவியாக இருந்தேன். நானே என்னை பாதுகாக்க வேண்டியதாயிருந்தது” என்கிறார் விஜய். உதவித்தொகை பெறும் வரை இவருக்கு தேவையான குளிர் ஜாக்கெட்டை நண்பர் ஒருவர் வழங்கினார்.

இதோடு முடிந்துவிடவில்லை. முதல் முதலில் வெளியில் சாப்பிட்ட அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஒரு உணவுச்சாலையில் வெஜிட்டேரியன் சாண்ட்விட்ச் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டவர் அதில் மீன் இருந்ததை கண்டு அதிர்ந்தார். ஒரு மாதம் வரை அரிசி வடிநீரை வைத்தே சமாளித்தார். இணைய இணைப்பு வந்த பிறகு எப்படி சமைப்பது என கற்றுக்கொண்ட பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

மே 14,2013ல் டுப்ளின் கேஸிலின் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புகள் மற்றும் இடப்பெயர்வாற்றல் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டபோது.உடன் T.D மாநில அமைச்சர்,ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும், பயணக்கல்விக்கான விருது வென்றவர்கள். படம் : ஜசன் க்ளார்க் போட்டோக்ராபி

மே 14,2013ல் டுப்ளின் கேஸிலின் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புகள் மற்றும் இடப்பெயர்வாற்றல் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டபோது.உடன் T.D மாநில அமைச்சர்,ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும், பயணக்கல்விக்கான விருது வென்றவர்கள். படம் : ஜசன் க்ளார்க் போட்டோக்ராபி


சேர்ன் (CERN) கனவை தொடர்ந்தபோது

இது போன்ற மோசமான அனுபவங்கள் இவரது படிப்பை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இரண்டாண்டு நானோ படிப்பில் 110க்கு 108 மதிப்பெண்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அறிவுத்தாகம் இதோடு முடிந்துவிடவில்லை. நானோ எலக்ட்ரானிக்ஸில், கேமராக்களின் வடிவமைப்பில் முப்பரிமாண குவியலிடுதலில் முனைவர் பட்டம் முடித்தார். இது அரசு, தொழிற்சாலை மற்றும் கல்வி என எல்லாம் சேர்ந்த ஒரு பாடத்திட்டம் ஆகும்.

இதே சமயத்தில் சேர்ன், ஐரோப்பிய ஆணைக்குழு மூலமாக ஒரு திட்டத்தை அறிவித்தது. இது கதிர்வீச்சு கண்டறிதலில் மேம்பட்ட நிலையை பற்றியதாகும். புற்றுநோய் தொடர்பாக கற்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார், காரணம் தன் அத்தையை புற்றுநோயில் இழந்திருந்தார். சேர்ன் அறிவித்த இந்த திட்டமானது உலகம் முழுவதுமுள்ள 14 பங்குதார்களை உள்ளடக்கிய ஒன்றாகும். விஜய் இதற்கு விண்ணப்பித்தார்.

சேர்ன் மற்றும் சிஜெக் குடியரசு (Czech Republic) நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலை பார்த்தார். "ஒரு எண்ணத்தை பொருளாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருந்தேன்” என்கிறார் விஜய். இந்த படிப்பின் நோக்கமே ஆராய்ச்சியாளர்களை சுயதொழில்முனைவராக மாற்றுவதே. இதில் படித்துக்கொண்டிருந்த போதே பல்வேறு சுயதொழில்முனைவோருக்கான பயிற்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் தான் கற்றதை சமூகத்துக்கு திருப்பிகொடுப்பதன் அவசியம் பற்றி இங்கே தான் கற்றுக்கொண்டார்.

ஸ்மார்ட்அக்ரியின் உருவாக்கம்

விவசாயியின் மகனாக இருந்ததால் விவசாயிகள் படும் துன்பம் பற்றி நேரடியாக பார்த்தவர் விஜயராகவன். "சேர்ன்னில் வேலை பார்த்த பிறகு, பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்ட பிறகு ஒன்று மட்டும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. நான் இந்த சமூகத்துக்கு என்ன திருப்பிக்கொடுத்தேன்?”

நான்கு ஆண்டுகள் கழித்து ராஜபாளையம் திரும்பியபோது இந்த கேள்வி விஜயின் ஆழ்மனதை ஊடுருவியிருந்தது. அந்த பகுதி இனிமையான நீருக்கு பெயர் போனது. ஆனால் இப்போது தண்ணீர் பிரச்சனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. இது விஜயை யோசிக்க வைத்தது. ஒருவரிடம் நூறு லிட்டர் தண்ணீர் இருக்கிறது, அதை எந்த அளவு திறம்பட பயன்படுத்துவார்? ”எங்களிடம் எல்லாவற்றையும் அளவிட கருவி இருந்தது. எனவே மண்ணின் ஈரப்பதம், தாதுபொருள், பிஎச் என எல்லாவற்றையும் அளவிடும் கருவி ஒன்றை உருவாக்க தீர்மானித்தேன். சரியான கழிப்பிட வசதி இல்லாத பகுதிகளிலெல்லாம் கூட செல்போன் சென்றடைந்திருக்கிறது” என்றார்.

கையடக்க ஒரு கருவியை உருவாக்கினார். அதை மண்ணுக்கு அடியில் புதைத்தல், அது மண்ணை சோதித்து அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை விவசாயியின் செல்பேசி எண்ணுக்கே மேகக்கணிணி (க்ளவுட்) தொழில்நுட்பம் மூலமாக அனுப்பிவிடும். விவசாயி, மண் பற்றிய தகவலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். பச்சை விளக்கு எரிந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்றும் சிகப்பு நிறத்தில் எரிந்தால் நல்ல நிலையில் இல்லை என்று காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் அக்ரி கருவியின் மாதிரி

ஸ்மார்ட் அக்ரி கருவியின் மாதிரி


இன்னொரு கருவியையும் வடிவமைத்தார் இவர். அதை தெளிப்பான் மீது பொருத்தினால், தகவல்களை பரிசோதித்து மண்ணின் எந்த பகுதிக்கு தண்ணீர் தேவை என்பதை தெரிவிக்கும். "இதன்மூலம் மின் பயன்பாட்டை 30 சதவீதம் மிச்சம் பிடிக்க முடியும். பம்பின் பயன்பாட்டை குறைப்பதால் நீரையும் மிச்சப்படுத்தமுடியும்” என்றார் விஜய். இந்தியாவில் இவரது திட்டத்திற்கான ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

சேர்ன் திரும்பியபோது க்ளைமேட் - கேஐசியை அணுகினார். இது ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதியால் இயங்கக்கூடிய அமைப்பு ஆகும், அவர்கள் இவருக்கு உதவினார்கள். வணிகம் தொடர்பாக இவர் கற்றுக்கொண்டே அதே இடத்தில் இவர் மற்றவர்களுக்கு ஒரு மாதம் பாடம் எடுத்தார். இவரது தொழில் தொடர்பான முன்மாதிரி உருவாக்கத்திற்காகவும், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியையும் பெற்றுக்கொண்டார்.

ஒருமாத விடுமுறைக்குப்பின் ஆய்விற்காக இந்தியா திரும்பினார், இந்தியாவில் களப்பணியாற்றினார். இந்த சமயத்தில் ஐக்கியநாடுகளின் சர்வதேச தொலைத்தொடர்பு பிரிவு, விவசாயம் சார்ந்த 150 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவ முற்பட்டது. அதில் விஜயின் கண்டுபிடிப்பு, முதல் பதினைந்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல், க்ளைமேட்-கேஐசி, சேர்ன், அர்டெண்ட், ஜப்லோட்ரான் அலார்ம்ஸ், ஈபிஎஃப்எல், பிஎஸ்ஜி-ஸ்டெப், சோனா கல்லூரியின் நிர்வாகம் மற்றும் டாக்டர் உஷா, அம்ரிதா பொறியியல் கல்லூரி, அஜய் நரேந்திரன் ( பயிற்றுனர், ஸ்ரிஷ்டி வடிவமைப்பு பள்ளி), டாக்டர் ஆண்ட்ரியா, டாக்டர் மஸ்ஸிமோ, டாக்டர் லி யுன்ஜியா, ஷைலேஷ் (ஸ்ரிஷ்டி வடிவமைப்பு பள்ளி), உடன்பணியாற்றுவோர். இவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோரும் உதவியிருக்கிறார்கள்.

மே 2015ம் ஆண்டு, ஜப்பானில் நடந்த ஆசிய தொழில்முனைவருக்கான விருதை ஸ்மார்ட்அக்ரி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்விட்சர்லாந்தில் ஒரு விருது பெற்றது. உலகின் பல்வேறு அமைப்புகள் விஜய்க்கு உதவின என்ற போதிலும் இந்திய அரசின் உதவியையே பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கிறார். காரணம் இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கருவி இது என்பதே.

“ஸ்மார்ட்அக்ரிக்காக இரவு நேரங்களிலும், வாரவிடுமுறைகளிலும் வேலை பார்த்திருக்கிறேன். இது என்னுடைய சேர்ன் ஆராய்ச்சியை சிறிதளவு கூட பாதிக்க அனுமதியளித்ததில்லை. கதிர்வீச்சின் மேம்பட்ட நிலை மற்றும் ஸ்மார்ட் அக்ரி தொடர்பாக வேலையை தொடர்கிறேன். கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி சாதாரண மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காண்பதன் மூலம் மட்டுமே அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும் என தீவிரமாக நம்புகிறேன். என் கண்டுபிடிப்பை இப்போதைக்கு ஆய்வகத்தில் மண் நிரப்பி சோதித்துக் கொண்டிருக்கிறேன். முறைப்படி நிலத்தில் சோதிப்பதற்கு தேவையான நிதியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்கிறார் விஜய்.

ஒரு ஆய்வாளராக நாங்கள் பல்வேறு கடினமான கேள்விகளை கேட்கவேண்டும், எந்த அளவுக்கு இந்த சமூகத்திற்கு திருப்பியளித்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் கல்வி நிறுவனங்கள் சுயதொழில்முனைவோரை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

Add to
Shares
43
Comments
Share This
Add to
Shares
43
Comments
Share
Report an issue
Authors

Related Tags